Published:Updated:

`எங்க உயிருக்கு ஆபத்து!' - சொல்கிறார்கள் நிர்மலாதேவி கொலை வழக்கில் சரண்டரான 5 பேர்

கடந்த 22-ம் தேதி ஐந்து பேர்க்கொண்ட கும்பல் நிர்மலாதேவியை கொடூரமான முறையில் கொலை செய்தி, தலையை எடுத்துச்சென்று நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வைத்துவிட்டு சென்றார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நிர்மலா தேவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தவர்கள், திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குற்றவாளிகள் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன், கடந்த 2012, ஜனவரி 10-ம் தேதி திண்டுக்கல் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரைப் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இந்த 18 பேரில் புறா மாடசாமி, முத்துபாண்டி,உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 14 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்துக் கொலை! - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

இந்தநிலையில் இந்த வழக்கில் 5-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தவர் நிர்மலாதேவி. இவரை கடந்த 22-ம் தேதி ஐந்து பேர்க்கொண்ட கும்பல் தலையை துண்டித்து கொடூரமான முறையில், தலையை எடுத்துச்சென்று நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

விசாரணை
விசாரணை

கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்ததில், நிர்மலா தேவி தான் பசுபதி பாண்டியனைக் கொலை செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தங்க வைத்தார் என்றும் பசுபதி பாண்டியனின் வீக்னஸ், ஸ்கெட்ச் போட்டதில் நிர்மலா தேவியின் பங்கும் உள்ளதால் தான் அவரை கொன்றதாகவும் சொல்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். இதனிடையே இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் சரணடைந்தனர்.

நிர்மலாதேவி கொலையாளிகள்
நிர்மலாதேவி கொலையாளிகள்

ரமேஷ்குமார், சங்கிலி, தமிழ் செல்வம், முத்துமணி, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய 5 பேரையும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் 5 பேரையும் முறிசி சிறையில் போலீஸார் அடைத்தனர். இவர்கள் ஐந்து பேரையும் வழக்கறிஞர் பொன்முருகேசன் ஆஜர்படுத்தினார்.

திருச்சி
திருச்சி

இவ்வழக்கில் சரணடைந்தவர்கள், எங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸாரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, "நீங்களே கொலை செஞ்சிட்டு வந்துவிட்டு, ஆபத்து இல்லாம எப்படி இருக்கும்" என போலீஸார் எகிறியிருக்கிறார்கள். கொலையில் ஈடுபட்ட ஐந்து பேரும் 25 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது தான் அதிர்ச்சியான சம்பவம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு