Published:Updated:

​தேனி​ அதிமுக​ நிர்வாகியிடம் ரூ.50 லட்சம் ​திருட்டு - ​​காங்கிரஸ் ​​நிர்வாகி உட்பட 3 பேர் கைது!

டிரைவர் ஸ்ரீதரன்

​நாராயணன் அவ்வப்போது தனது ஓட்டுநர் ஸ்ரீதர் மூலமாகப் பெரும் தொகையைப் பலருக்குக் கொடுத்துவந்த நிலையில் இந்தப் பணத்தை கார் டிரைவர் ஸ்ரீதரன் தனது உறவினர்கள் உதவியுடன் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார்.​

​தேனி​ அதிமுக​ நிர்வாகியிடம் ரூ.50 லட்சம் ​திருட்டு - ​​காங்கிரஸ் ​​நிர்வாகி உட்பட 3 பேர் கைது!

​நாராயணன் அவ்வப்போது தனது ஓட்டுநர் ஸ்ரீதர் மூலமாகப் பெரும் தொகையைப் பலருக்குக் கொடுத்துவந்த நிலையில் இந்தப் பணத்தை கார் டிரைவர் ஸ்ரீதரன் தனது உறவினர்கள் உதவியுடன் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார்.​

Published:Updated:
டிரைவர் ஸ்ரீதரன்

​தேனி மாவட்டம், பெரியகுள​ம் தென்கரையைச் சேர்ந்தவர் நாராயணன்​.​ இவர் பெரியகுளத்தில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்திவருகிறார்​. ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான இவர், அதிமுக-வில் தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறையின் மாவட்டச் செயலா​​ளராகவும் இருந்துவருகிறார்.​ ​இவரிடம் டிரைவராக ​வேலை பார்த்துவந்த ​வடகரையைச் சேர்ந்த ​ஸ்ரீத​ரன் கடந்த வாரம் 50 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார் என நாராயணன் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

பெரியகுளம் காவல் நிலையம்
பெரியகுளம் காவல் நிலையம்

​இந்த நிலையில் ஸ்ரீத​ரனின் மனைவி ​கெங்கம்மாள், ``கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி என் கணவருக்கு நாராயணன் போன் செய்து வரச் சொன்னார். அப்போது வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. நாராயணன் எனக்கு போன் செய்து உன்னுடைய கணவர் என்னை ஆண்டிபட்டியில் இறக்கிவிட்டுவிட்டு, காரை எனது வீட்டில் நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் வந்தால் வரச் சொல்லுங்கள் என்றார். பிறகு என் கணவரைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை” என பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரியகுளம் போலீஸார் தனிப்படை அமைத்து ​​​​​ஸ்ரீத​ரனைத் தேடிவந்தனர். இந்நிலையில் அவர் போன் சிக்னலை வைத்து அவர் ​ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருப்பதை அறிந்து அவரைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

​​அதில், ​​ஸ்ரீதர​ன்​ தன் உறவினரான பெரியகுளம் நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீதர் மற்றும் மற்றோர் உறவினரான பாலகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து ​50 லட்ச ரூபாயைத் திரு​டியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

தென்கரை காவல் நிலையம்
தென்கரை காவல் நிலையம்

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``நாராயணனின் ​மினரல் வாட்டர் கம்பெனியில் ​கார் ஓட்டுந​ராக​​ ​வேலை பார்த்த ​ஸ்ரீதர​ன் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்திருக்கிறார். இதனால் நாராயணன் பெருந்தொகையைக்கூட​ ​​ஸ்ரீதர​னிடம் நம்பிக்கையாகக் ​கொடுத்​து வேலைகளைப் பார்த்துள்ளார். ​​அவ்வாறு கொடுக்கப்படும் பணத்தை ஸ்ரீதர் உரியவரிடம் பலமுறை ஒப்படைத்து​ள்ளார்.

நாராயணன்
நாராயணன்

இந்நிலையில் பெரும் தொகையை கார் ஓட்டுநர் ஸ்ரீதர் தனது உறவினர்கள் உதவியுடன் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியுள்ளார்.​

சம்பவம் நடந்த அன்று நாராயணன் மற்றும் அவரின் கார் ஓட்டுநர் ​​ஸ்ரீதர் உசிலம்பட்டியிலிருந்து பெரியகுளத்துக்கு காரில் 50 லட்சம் ரூபாயைக் கொண்டு வந்​துள்ளனர். நாராயணன், `ஆண்டிபட்டியில்​ இறங்கி​ வேறு காரில் கட்சியினரின் வீட்டு ​இல்ல நிகழ்ச்சிக்குச் செல்கிறேன். காரிலுள்ள 50 லட்சம் ரூபாய் பணத்தை என் வீட்டில் ஒப்படைத்துவிடு” என ​​ஸ்ரீதர​னிடம் ​கூறி​விட்டுச் சென்றிருக்கிறார்.

காங்கிரஸ் நகரத் தலைவர்
காங்கிரஸ் நகரத் தலைவர்

​இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த ​​ஸ்ரீதர் தன் உறவினரான பெரியகுளம் நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீதர் மற்றும் மற்றோர் உறவினரான பாலகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து பணத்தைத் திருடத் திட்டமிட்டனர்.​ ​ஆண்டிபட்டியிலிருந்து பெரியகுளம் செல்லும் வழியில் வேறு ஒரு காரில் வந்த காங்கிரஸ் நகரத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பாலகிருஷ்ணனிடம் பெரும் தொகையை ஒப்படைத்துவிட்டு மாயமானார்கள்.​ ​இவர்கள் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பகுதியில் சென்று தலைமறைவாக இருந்தார்கள்.

பாலகிருஸ்ணன்
பாலகிருஸ்ணன்

​இ​தற்கிடையே காங்கிரஸ் நகர​​த் தலைவர் ஸ்ரீதர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை தனது உறவினர்கள் பலரிடம் கொடுத்து வைத்திருந்தார்.​ ​ஆரம்பத்தில் பெரியகுளம் காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீத​ர் மீது சந்தேக​ம் கொண்டு விசாரணை நடத்தியபோது தனக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இல்லை என மறுத்தார். பிறகு தலைமறைவான கார் ஓட்டுநர் ஸ்ரீதரின் செல்போன் எண்ணை வைத்து அவரிடம் யார் யார் தொடர்பு கொண்டார்கள் என விசாரித்தபோது மீண்டும் காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அத​னடிப்படையில் ​​ஸ்ரீதர​னை, அவருடன் இருந்த ​ ​​பாலகிருஷ்ணனையும் பிடித்துவந்தோம். அவர்களிடம் விசாரித்தபோது திட்டமிட்டு நாராயணன் பணத்தைத் திருடியது தெரியவந்தது” என்றனர்.