Published:Updated:

ஜார்கண்ட்: `தாக்கப்பட்ட வளர்ப்பு ஆடு; இழப்பீடு கேட்ட 50 வயது பெண்!’ - பாலியல் வன்கொடுமை கொடூரம்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

ஜார்கண்ட் மாநிலத்தில் 50 வயதான பெண் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்திலுள்ள ஹண்டர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் கணவனை இழந்த 50 வயது பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை, இரவு 10 மணியளவில் இயற்கை உபாதையைக் கழிக்க வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கிறது. மேலும், அவர்கள் அந்தப் பெண்ணை மிக மோசமான முறையில் தாக்கியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து வெளியில் கூறக் கூடாது என்று மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள்.

இந்தக் கொடூரச் சம்பவத்தால் ரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்த அந்தப் பெண்ணை அவரின் உறவினர் மீட்டு ஹண்டர்கஞ்ச் ஆரம்ப சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பீகார் மாநிலம், கயாவிலுள்ள அனுக்ரா நாராயண் மகத் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். தற்போது மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியிருக்கும் அந்தப் பெண் காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் அவரை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய மூன்று பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஒருவரைத் தேடும்பணி நடந்துவருகிறது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் ரிஷாப் ஜா, ``பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடு ஒன்றை குற்றம்சாட்டபட்ட மூவரில் ஒருவர் தாக்கியதாகத் தெரிகிறது. அதற்கான இழப்பு தொகையை பாதிக்கப்பட்ட பெண் கேட்க, கோபத்தில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். மேலும் ஒருவரைத் தேடிவருகிறோம்” என்றார். மேலும், காயமுற்ற ஆட்டுக்கான தொகையைப் பெற்றுத் தர வேண்டும் எனவும், அதற்கு தான் கொடுத்த விலை மிகப்பெரியது எனவும் அந்தப் பெண் கூறியதாக, அவர் தெரிவித்தார்.

தானே: சோஷியல் மீடியா நட்பு; கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - குஜராத் ஆண் மாடலுக்கு நேர்ந்த கொடுமை
அடுத்த கட்டுரைக்கு