Published:Updated:

நாகை டு இலங்கை; கடல் மார்க்கமாகக் கடத்தப்படவிருந்த 500 கிலோ கஞ்சா - போலீஸிடம் சிக்கியது எப்படி?!

கஞ்சா

விசாரணையில் இந்த கஞ்சா பொட்டலங்களை சந்திரசேகர் என்பவர் மூலம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் படகில் இலங்கைக்குக் கடத்தவிருந்தது தெரியவந்தது.

நாகை டு இலங்கை; கடல் மார்க்கமாகக் கடத்தப்படவிருந்த 500 கிலோ கஞ்சா - போலீஸிடம் சிக்கியது எப்படி?!

விசாரணையில் இந்த கஞ்சா பொட்டலங்களை சந்திரசேகர் என்பவர் மூலம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் படகில் இலங்கைக்குக் கடத்தவிருந்தது தெரியவந்தது.

Published:Updated:
கஞ்சா

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்காக, மாவட்ட எஸ்.பி ஜவஹர் உத்தரவின்பேரில், அண்மையில் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில், நாகை அருகே கடலோர கிராமமான அக்கரைப்பேட்டையிலிருந்து சிலர் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தவிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

கஞ்சா
கஞ்சா

அந்தத் தகவலின்பேரில் தனிப்படை போலீஸார் கிழக்கு கடற்கரை சாலையில் புத்தூர் ரவுண்டானா அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லோடு வேன் ஒன்றை மறித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது லோடு வேனிலிருந்த தவிடு மூட்டைக்குக் கீழே 250 கஞ்சா பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. முன்னதாக வந்த இரண்டு கார்களையும் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த கஞ்சா பொட்டலங்களை சந்திரசேகர் என்பவர் மூலம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் படகில் இலங்கைக்குக் கடத்தவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த தேனி மாவட்டத்தைச்  சேர்ந்த மணிவாசகம், அலெக்ஸ் பாண்டியன், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை பகுதியைச்  சேர்ந்த ஸ்ரீரங்கேஸ்வரன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உமாபதி,  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சேகர், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய ஆறு பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை (500 கிலோ) பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் மற்றும் ஒரு லோடு வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா
கஞ்சா

இது குறித்து நாகை மாவட்ட எஸ்.பி.ஜவகர் கூறுகையில், ``கடலோர மாவட்டங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறோம். மேலும் கடத்தலில் ஈடுபடும் நபர்களின் செல்போன் எண்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்ட வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு, கார்கள் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் சிலர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இது போன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை போலீஸார் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்திவருகின்றனர். கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்படுவார்கள்"  என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism