Published:Updated:

டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு சோதனை

Vikatan Correspondent
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு சோதனை
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு சோதனை
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு சோதனை

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் இன்று காலை தொடங்கி தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சுகுமாரன், ரவி இளங்கோ, உஷா உள்பட 14 அதிகாரிகளின் வீடுகளில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணைச் செயலாளராக பணியாற்றி வரும் அதிகாரி மைக்கேல் ஜெரால்டு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

முன்னதாக, அரசு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலும் நாள் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.

பின்னர், இந்தச் சோதனையில் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்தனர்.

இந்த முதல் தகவல் அறிகையின்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிகாரிகள்  முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.