Published:Updated:

வாட்டி எடுக்கும் டோல்கேட் வரி...

வாட்டி எடுக்கும் டோல்கேட் வரி...

வாட்டி எடுக்கும் டோல்கேட் வரி...
நொந்து புலம்பும் வாகன ஓட்டிகள்!
வாட்டி எடுக்கும் டோல்கேட் வரி...
வாட்டி எடுக்கும் டோல்கேட் வரி...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டோல்கேட் கட்டண உயர்வு திடீரென மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதால்... பெருங்குடி மக்கள் படும் அவதியைப் பற்றி, 'யூ டர்ன் அடிக்க ஆறு ரூபாய்!' என்ற தலைப்பில் பெருங்குடி ஏரியா ஸ்பெஷலில் வெளியிட்டிருந்தோம். இதையடுத்து கட்டணத்தைப் பழைய நிலைக்கு மாற்றி உத்தரவிட்டனர் அதிகாரிகள். இப்போது பெருங்குடியைப் போலவே டோல்கேட் பிரச்னை மதுரவாயல் பெருமக்களையும் ஆட்டிப் படைக்கிறது!

வாட்டி எடுக்கும் டோல்கேட் வரி...

வட இந்தியாவில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கும், தென் மாவட்டங்களில் இருந்து கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளுக்குச்

செல்லவும், சென்னை நகருக்குள் வந்தாக வேண்டிய நிலை இருந்தது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இதைத் தவிர்க்க சென்னை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் வரை 19 கிலோமீ-ட்டர் நீளம் கொண்ட பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது.

இந்த நெடுஞ்சாலையில் செல்வதற்கான டோல்கேட் கட்ட ணம் கடந்த மாதம் திடீரென்று மூன்று மடங்கு உயர்த்தப்பட... பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என்று பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பும் போராட்டமும் வெடித் திருக்கிறது.

இது குறித்து மதுரவாயல் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த டிரைவர்களிடம் பேசி னோம். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் திரண்டுவிட்டனர். ஈரோடு, நெல்லை, மதுரை என்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அவர் களிடம் பேசினோம்.

''காருக்கு 10 ரூபாய், வேனுக்கு 15 ரூபாய், பஸ்ஸுக்கு 25 ரூபாய் என்று கட்டணம் இருந்தது. இதை திடீரென்று முறையே 30, 40, 85 ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை வர வேண்டும் என்றால், வேன் போன்ற சிறிய வாகனங்களுக்கு 200-250 ரூபாய் வரை டோல்கேட்டுக்கு மட்டும் தண்டம் அழ வேண்டியிருக்கு. லாரி போன்ற கனரக வாகனம் என்றால், ரூபாய் 400-500 வரை கட்டணம் செலுத்துகிறோம். இது ஒரு டிரிப்புக்கு மட்டும்தான். மற்ற டோல்கேட்டுகளை ஒப்பிடுகையில் இங்குதான் கட்டணம் மிகவும் அதிகம். இதைக் கட்டுப்படுத்துவதற்காக லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தினார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. மதுரவாயல்-மாதவரம் இடையே பணி இன்னும் முடியவில்லை. அந்தப் பணி முடிந்த பிறகு, உயர்த்தினாலும் பரவாயில்லை. ஆனால், பணியே முடியாத நிலையில் அநியாயமாக உயர்த்திவிட்டார்கள்!'' என்றவர்கள் தொடர்ந்தனர்.

''இந்தக் கட்டண சாலையை தவிர்த்து, வேறு சாலையிலும் செல்ல முடியாது. நகருக்குள் வந்தால் குறைந்தது 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இது தவிர, ஒவ்வொரு சிக்னலிலும் போலீஸ் நின்று கொண்டு 10-20 லஞ்சம் கொடுத்தால்தான் விடுவேன் என்கிறார்கள். எல்லா வழியையும் அடைத்துவிட்டு, இந்தக் கட்டண சாலையை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது என்ன நியாயம்? ஒரு டிரிப்புக்கு 400-500 ரூபாய் டோல்கேட்டுக்கு செலுத்தினால், எப்படிக் கட்டுப்படியாகும்? சாலை வரி, சாலை பராமரிப்புக்கு வரி, பெட்ரோலுக்கு வரி என்று அரசாங்கம் ஆண்டுதோறும் பல கோடி வசூல் செய்கிறது. ஆனால், ஒரு நல்ல சாலையைக்கூட அவர்களால் அமைக்க முடியவில்லை. எல்லாவற்றையும் 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்துவிட்டார்கள் என்றால், எதற்கு வரி வசூலிக்கிறார்கள்? வரியும் செலுத்திவிட்டு, டோல்கேட்டுக்குக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்றால், என்ன நியாயம்? இப்படி அநியாயமாகக் கட்டணம் உயர்த்தும்போது நாங்களும் லாரி வாடகையை உயர்த்த வேண்டியுள்ளது. இதனால் பொருட்களின் விலையும் ஏறுகிறது. அரசே மறைமுகமாக விலைவாசி உயர்வுக்குக் காரணமாகிறது!' என்றனர்.

வாட்டி எடுக்கும் டோல்கேட் வரி...

லோக்கல் லாரி டிரைவர் ராஜேந்திரன் என்பவர், 'வேறு வழியின்றித்தான் இந்த சாலையை பயன்படுத்துகிறோம். 19 கிலோமீட்டர் தூரத்துக்கு 85 ரூபாய் என்பது ரொம்ப அதிகம் சார். முன்பு இருந்தது போன்று, ரூ.25-க்கு இல்லையென்றாலும், ஓரளவுக்காவது கட்டணத்தைக் குறைக்க, நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என்றார்.

காரில் சென்று கொண்டிருந்த நாகராஜிடம் பேசினோம். 'ரோடு நல்லா இருக்கு, சிட்டிக்குள்ள போனா டிராஃபிக்ஜாம். இந்த சாலையில போனா... ஈஸியா தாம்பரம் போயிடலாம். அதனால்தான் இதைப் பயன்படுத்துகிறோம். முன்பு ஒரு முறை செல்ல 22.50 ரூபாய் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். அது இப்போது 60 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. வேறு வழியின்றிச் சென்று வருகிறோம்!' என்றார்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய சென்னை புறவழி சாலை திட்ட இயக்குநர் பி.ஸ்ரீனிவாசை தொடர்புகொண்டு கேட்டோம்.

''மாதவரம் வரைக்கும் சேர்த்து நாங்கள் உயர்த்த வில்லை. இந்தக் கட்டண உயர்வு தாம்பரம்-மதுரவாயல் இடையேதான். இது தொடர்பாக அரசு இதழில் முறையான அறிவிப்பு வெளியிட்டுதான் உயர்த்தியுள்ளோம். இதைக் குறைக்க வாய்ப்பே இல்லை!' என்றார்.

ஆனால்... டோல்கேட் கட்டண உயர்வை எதிர்த்துத் தீவிரமான போராட்டங்கள் பற்றிய திட்டங்களை கோபமாகத் தீட்டி வருகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்!

- பா.பிரவீன் குமார்
படங்கள் கதிரவன்