Published:Updated:

'வெந்தபுண்ணில் வெடி வைக்கலாமா?'

'வெந்தபுண்ணில் வெடி வைக்கலாமா?'

'வெந்தபுண்ணில் வெடி வைக்கலாமா?'
அலறித்துடிக்கும் மதுரவாயல்
'வெந்தபுண்ணில் வெடி வைக்கலாமா?
'வெந்தபுண்ணில் வெடி வைக்கலாமா?'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சென்னை துறைமுகம்-மதுரவாயல் வரை கட்டப்போற பறக்கும்

'வெந்தபுண்ணில் வெடி வைக்கலாமா?'

மேம்பாலத்துக்காக எங்க வீடுகளை இடிக்குறதுக்கு அதிகாரிங்க அடையாளம் குறிச்சுட்டுப் போயிட்டாங்க.... எப்ப வந்து இடிப்பாங்களோங்குற பயத்துல தூக்கம் மறந்து ரொம்ப நாளாச்சு... பணம் பாதாளம் வரை பாயும்னு சொல்வாங்க.... ஆனா, எங்க விஷயத்துல 'பணம் மேம்பாலம் வரை பாய்ஞ்சுருக்கு'மோனு சந்தேகப்படுறோம் சார்...!'' என்ற புதிரான புகாரை நம்முடைய ஆக்ஷன் செல்லில் (044-42890005) வாசித்திருந்தார்கள் மதுரவாயல் மக்கள்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை துறைமுகத்தையும் மதுர வாயல் சந்திப்பையும் இணைக்கும் உயர்மட்ட மேம்பாலம் ரூபாய் 1,655 கோடி செலவில் கட்டப்படவிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் பிரதமர்

தலைமையில் இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவும் சிறப்பாக நடந் தேறியது. இதனைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணியில் சுறுசுறுப்பான அதிகாரிகள், மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டிய வீடு, கடைகளில் 'மார்க்' செய்துவிட்டுப் போனதுதான் பிரச்னைக்கான திரி பற்ற வைத்த விவகாரமாகியிருக்கிறது.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாகசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிலரைச் சந்தித்தோம்....

''ஏற்கெனவே இப்பதான் 'தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைத் திட்ட'த்துக்காக 'பூந்தமல்லி நெடுஞ்சாலை'யை ஒட்டிய வீடு, கடைகளை இடித்துத் தள்ளினார்கள். அந்த இடிபாடுகளை சரிசெய்து, மிச்சமீதி இருந்த இடத்துக்குள் சமாளித்துக் கொள்ளலாம் என்று சமாதானம் ஆவதற்குள் பறக்கும் மேம்பாலம் என்று புதுக்கதை சொல்லி, ஒண்டிக்கிடக்கிற இடத்தையும் பிடுங்க வந்துட்டாங்க. நிலத்துக்கு ஈட்டுத்தொகையா கவர்மென்ட்டு கொடுக்குற தொகை, இன்னிய மார்க்கெட் ரேட்டுக்கு அஞ்சுல ஒண்ணுகூட இல்லை. மேம்பாலத்துக்கு வேண்டிய இடம்னு அளந்து அடையாளம் குறிச்சுட்டுப் போனதுலேர்ந்து எங்க சந்தோஷமே போ யிடுச்சு!'' என்று நொந்து போய் புலம்பினார் பக்தவத்சலம் என்பவர்.

சாலை விரிவாக்கத்தில் ஏற் கெனவே தன்னுடைய கட்டடத்தில் 20 அடிகளை இழந்துவிட்ட லோகநாதன் நம்மிடம், ''சாலை விரிவாக்கம்கிற பேர்ல ஏற்கெனவே கட்டியிருந்த வேட்டியை உருவுன நெடுஞ்சாலைத் துறை, இப்ப மேம்பாலம்ங்கிற பேர்ல இருக்குற கோவணத்தையும் உருவி எங்களை நடுத்தெருவுல திண்டாட திட்டமிடுகிறது. நஷ்ட ஈடா அரசு கொடுத்த தம்மாத்துண்டு காசை வச்சு எதுவும் பண்ண முடியாது. அதனால கடன் வாங்கி இப்ப என் சொந்தக் கட்டடத்தை

'வெந்தபுண்ணில் வெடி வைக்கலாமா?'

எடுத்துக் கட்டிக்கிட்டிருந்தேன். ஆனா, திடீர்னு அதிகாரிங்க வந்து, 'மேம்பாலத் திட்டத்துக்கு உங்க வீடுகளை அரசாங்கம் எடுத்துக்கப் போகுது'ன்னு சொல்லிட்டுப் போனதால மேற்கொண்டு கட்டடத்தைக் கட்டுறதா, வாங்கின கடனைக் கட்டுறதான்னு குழம்பிப் போய் கிடக்கேன்...'' என்று அழாத குறையாக அரற்றினார்.

மதுரவாயல் வியாபாரிகள் சங்கத் தலைவரான தாண்டவன், ''இந்தப் பாலத் திட்டத்தால பாதிக்கப்படுகிற பில்டிங் ஓனர்களுக்கு ஓரளவு நஷ்ட ஈடாவது கிடைக்கிறது. ஆனால், இந்தப் பில்டிங்குகளில் வாடகைக்கு கடை நடத்திவரும் வியாபாரிகளின் நிலைமைதான் ரொம்ப மோசம். ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் வியாபாரத்துக்கு ஏற்றவாறு டைல்ஸ், தண்ணீர் டேங்குன்னு லட்சக்கணக்குல செலவு பண்ணி புதுப்பிச்சு வச்சுருப்பாங்க. கடந்த முறை நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக கடையை இடிக்கும்போது கடைக்காரங்கதான் ரொம்ப பாதிக்கப்பட் டாங்க. லைசென்ஸ் வாங்கி முறையா தொழில் செஞ்சுக்கிட்டு வர்ற இந்த வியாபாரிங்களுக்கு அரசும் இழப்பீட்டுத் தொகைன்னு எதுவும் குடுக் குறதில்ல.... பில்டிங் ஓனர்களும் கண்டுக்குறதில்லை. ஏற்கெனவே கடைக்காகக் கொடுத்த அட்வான்ஸ்கூட கிடைக்காம நிறையபேர் திண்டாடியிருக்காங்க. ஒரு சிலர் கஷ்டப்பட்டு புதுக்கடைக்கும் செலவு பண்ணி இப்பத்தான் வியாபாரத்தை ஆரம்பிச்சாங்க. அதுக்குள்ளே இப்போ இப்பிடி ஆகிப்போச்சு. இனி மேல் இது போன்ற ஒரு துயரம் வியாபாரிகளுக்கு ஏற்படுமேயானால், 'எங்களுக்கும் இழப்பீடு வேண்டும்' என்று அரசுக்கெதிராக வியாபாரிகள் சங்கம் மூலமாகப் போராடுவோம்!'' என்றார் ஆவேசமாக.

இதற்கிடையில், இந்த மின்னல் வேக விரைவுச் சாலை குறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவரமானவர்கள் சிலர் புது வெடி பற்ற வைக்கிறார்கள்.

''துறைமுகத்திலிருந்து பத்தொன்பது கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்போற இந்தப் பாலம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய உயர்த்தப்பட்ட விரைவுச் சாலையாம். சிட்டிக்குள்ளே இவ்வளவு தூரத்தில பாலத்துக்காக நிலம் கையகப்படுத்துனா, நிறையபேர் பாதிக்கப்படுவாங்கன்னு சொல்லித்தான் பாலம் முழுவதையும் கூவம் ஆத்துப் பகுதியை ஒட்டியே வர்றமாதிரி பிளான் பண்ணியிருக்காங்க. ஆனா, கோட்டையிலருந்து கோயம்பேடு வரைதான் கூவத்து மேலே பாலம் வருது. அப்புறம் நெற்குன்றத்துலயிருந்து மதுரவாயல் வரை கூவம் வழிப்பாதையிலருந்து அந்த திட்டம் கொஞ்சம் சைடு வாங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலைக்குப் போகுது. அதுக்குக் காரணம், கூவத்துப் பகுதில கல்லாக் கட்டிக்கிட்டிருக்கிற கல்வித் தந்தையோட காலேஜ் களுக்கு எந்த பாதிப்பும்வரக் கூடாதுன்னுதான் இப்படி செஞ்சுருக்கறதா சொல்றாங்க...'' என்று ரகசியம் பேசுகிறார்கள் சிலர்.

இந்நிலையில், திட்டம் குறித்த கேள்விகளுக்கு விடை தேடி மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் பேசியபோது...

'' 'காரிடார் எலிவேட்டட்'ங்கிற இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி, டெண்டர் வேலைகளும் முடிந்திருக்கிறது. நிலம் கையகப்படுத்துவது மாதிரியான வேலைகளில் இறங்கும்போது முறைப்படி தினசரி நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டு படிப்படியாகத்தான் பணிகள் நடைபெறும். இது போன்ற அடுத்த கட்டப் பணி நடவடிக்கைகள் எதுவும் துறைரீதியாக எடுக்கவில்லை என்பதால், இப்போதைக்கு இந்தப் பிரச்னைகளுக்கு உரிய விளக்கம் இல்லைதான். சமீபத்தில் உயர் நீதிமன்றமும் கூட இதே காரணத்தைச் சுட்டிக்காட்டித்தான் நெடுஞ்சாலை துறைக்கு எதிராக மக்கள் தொடுத்திருந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

போர் நினைவுச் சின்னத்திலிருந்து பறக்கும் சாலையாக கட்டப்படும் இந்தப் பாலம் கோயம்பேட்டில் தரையிறங்கி, தற்போது கட்டப்பட்டு வரும் கோயம்பேடு மேம்பாலத்துடன் இணைந்துவிடுகிறது. பின்னர், கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையுடன் சந்திக்கும் ரோட்டிலிருந்து மறுபடியும் பறக்கும் மேம்பாலம் தொடங்கி, மதுரவாயல் வரை செல்கிறது. கோயம்பேட்டிலிருந்து மேம்பாலம் கூவத்தைவிட்டுப் பிரிவதற்கான காரணம், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளோடு குழப்பம் அடைவதைத் தவிர்க்கத்தானே தவிர, எந்த தனிநபரின் ஆதாயத்துக்காகவுமல்ல....'' என்று நீண்ட விளக்கம் கொடுக்கின்றனர்.

எப்படியோ..... வெந்துபோயிருக்கும் மனதில் வெடியை வைக்காமல் இருந்தால்... மதுரவாயல் பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மகிழ்வார்கள்!


- த.கதிரவன்