Published:Updated:

அத்துமீறும் காட்டேஜுகள்..

அத்துமீறும் காட்டேஜுகள்..

அத்துமீறும் காட்டேஜுகள்....
வளைத்து தாக்கும் மிருகங்கள்!
அத்துமீறும் காட்டேஜுகள்..

காசுக்கு அலையும் சுற்றுலா காட்டேஜுகளின் கைவரிசையால்... சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் யானை தாக்கி இறந்த சம்பவம் நீலகிரியை உறைய வைத்திருக்கிறது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அத்துமீறும் காட்டேஜுகள்..

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே இருக்கிறது பொக்காபுரம். முதுமலை

வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய இந்த ஏரியாவில், சமீப காலமாக தனியார் விடுதிகளின் எண்ணிக்கை மளமளவெனப் பெருகி வருகிறது. வன விலங்குகளைப் பார்ப்பதற்காக இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளை காட்டுக்குள் அழைத்துச் செல்வதற்கு வாகனம் உள்ளிட்ட சில ஏற்பாடுகளை செய்கின்றன, விடுதி நிர்வாகங்கள்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சில நேரம் அனுமதி பெற்றும், பல வேளைகளில் அனுமதி இல்லா மலும், சுற்றுலாப் பயணிகளை அழைத்து சென்று பணம் பார்ப்பதுதான் இவர்களின் வேலை. அப்படியான பணத்தாசைக்குதான் பலியாகியிருக்கிறார் ஆனி டெல் என்ற பிரான்ஸ் நாட்டு அபலை.

தன்னுடைய செல்லமகன் ஃபெட்ரிக் ஜெலான்லிவிக் சகிதம் கடந்த 11-ம் தேதி இந்தியாவுக்கு வந்திருக்கிறார், ஆனி டெல். பெங்களூரு, மைசூரூ பகுதிகளுக்குப் போய் விட்டு, முதுமலை பகுதிக்கு வந்து பொக்காபுரத்தில் உள்ள ஒரு தனியார் காட்டேஜில் தங்கியவர்கள், கடந்த 14-ம் தேதி காலை ஆறு மணியளவில் ஜார்ஜ், ராஜு என்ற கைடுகளுடன் காட்டுக்குள் போயிருக்கின்றனர்.

விபூதிமலை முருகன் கோயில் அடிவாரம் பகுதியில் டிரக்கிங் சென்றபோது, ஒரு காட்டு யானை, எருமை மாடு களை விரட்டியபடி நின்றிருக்கிறது. ஆர்வ மிகுதியில் ஆனி டெல்லும், ஃபெட்ரிக்கும் யானையை போட்டோ எடுக்க

அத்துமீறும் காட்டேஜுகள்..

முயற்சிக்க... மிரண்ட யானை, ஆனி டெல்லை தும்பிக்கையால் தூக்கி வீசி, காலால் மிதித்துவிட்டு ஓடிவிட்டது. ஃபெட்ரிக்கும் யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

அரக்க பரக்க வெளியில் ஓடிவந்த கைடுகள், வன கிராம மக்கள் உதவியுடன் இருவரையும் காரில் ஏற்றி கூடலூ ருக்கு அனுப்பி இருக்கின்றனர். ஆனால், மருத்துவ மனை செல்லும் வழியிலேயே ஆனி டெல் இறந்து விட்டார். ஃபெட்ரிக் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டி ருக்கிறார்.

சுற்றுலாப் பயணிக்கு பாதுகாப்பு இல்லாத இந்த விவகாரம், சர்வதேச அளவில் நம் நாட்டுக்கு இழுக்கு என்பதால்... தமிழக மற்றும் மத்திய அரசுகளிடையே கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

முதுமலை வனவிலங்குகளைப் பற்றி ஆராய்ந்து வரும், தி நேச்சர் டிரஸ்ட்டை சேர்ந்த திருநாரணனிடம் பேசியபோது, ''இந்த சம்பவத்துல யானையை குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை. காரணம்... அதோட வீட்டுக்குள்ளே போயி மனுஷங்க, இடைஞ்சல் கொடுக்கிறதாலதான் இந்த சம்பவம் நடந்திருக்கு. சுற்றுலா வளர்ச்சிங்கிற பெயர்ல, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள்ல காட்டேஜ்கள் பெருகி, காட்டையே அழிச்சிட்டிருக்காங்க. குறிப்பா, பொக்காபுரம் பகுதியில தனியார் காட்டேஜ்களோட எண்ணிக்கை புற்றீசலா பெருகிட் டிருக்குது. 'எங்க காட்டேஜ்களுக்கு வந்து தங்கினா... வனவிலங்குகளை பக்கத்துலேயே காட்டுறோம்; போட்டோ எடுக்கலாம்'னு ஆசை வார்த்தை காட்டி பிசினஸ் பிடிக்கிறாங்க. வனத்துறை கிட்ட அனுமதி பெறாம, சகட்டு மேனிக்கு சுற்றுலா பயணிகளை காட்டுக்குள்ளே அழைச்சுக் கிட்டுப் போறதோட விளைவு தான் இதெல்லாம். சுற்றுலாப் பயணிகளும்போட்டோ எடுக்கிறேன் பேர்வழின்னு சொல்லிட்டு,காட்டுக்குள்ளஅபாயம்தெரியாமதிரியற தோட விளைவு... இப்போ மரணத்துல முடிஞ்சிருக்கு இனியாவது இந்த மாதிரியான அத்துமீறல்களை கடுமையா கட்டுப்படுத்தணும்!'' என்றார் அழுத் தமாக.

அத்துமீறும் காட்டேஜுகள்..

இந்த விவகாரம் குறித்து நம்மைத் தொடர்புக் கொண்டு பேசிய, வன உயிரின ஆராய்ச்சி மாணவர் ஒருவர், ''சார்...என்னோட புராஜெக்ட்டுக்காக முதுமலை ஏரியாவுல வந்து ஆறு மாசமா தங்கியிருக்கேன். மிருகங் களை காட்டுறேன்னு சொல்லிக்கிட்டு மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதியில தனியார் காட்டேஜ் காரங்க பண்ற அட்டூழியம் சாதாரணமான தில்லை. வனத்துறையைசரிக்கட்டிட்டுராத்திரி நேரத்துலசட்ட விரோதமாமலையேறக் கூட்டிட்டுப் போறதுலயும்எக்கசக்கமா காசு பார்க்கிறாங்க. இதுஒருபுறம்னா... யானைக்கு உப்பு, புளி ரெண்டும் ரொம்ப இஷ்டம். இதைத் தெரிஞ்சுகிட்டு, ரெண்டையும் மிக்ஸ் பண்ணி பெரிய பெரிய உருண்டையா உருட்டி யானைங்க வழக்கமா மேயுற பகுதியில இருந்து, தங்களோட காட்டேஜ் வரைக்கும் போட்டு வைக்கிறாங்க. அந்த உருண்டைகளை தின்னபடியே காட்டேஜ் பகுதி வரைக்கும் யானைங்க வர்றப்போ... அதை சுற்றுலா பயணிங்களுக்கு காட்டி காசு பார்க்கிறாங்க. யானையை காட்டினா... ஆயிரம் ரூபாய், புலி, சிறுத்தையை காட்

அத்துமீறும் காட்டேஜுகள்..

டினா... ரெண்டாயிரம் ரூபாய்னு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்கிட்ட காசு பார்க்குறாங்க. தங்களோட காட்டேஜ் வரைக்கும் இவங்க வரவைக்கிற யானைகள் சில சமயம் எதையாச்சும் அடிச்சு உடைச்சா... அதைத் திரும்பவும் காட்டுக்குள்ளே விரட்டியடிக்க, அவங்க பண்ற விஷயம் மகா கொடுமை! தார் உருண்டையை பெட்ரோல்ல முக்கி தீயை வெச்சு, அதை யானை மேலே வீசியடிச்சு ராட்சஸத்தனம் பண்றாங்க. இந்த அரக்கனுங்களை யார் தட்டிக் கேட்கிறது?'' என்றார் வேதனையாக.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் பாட்டீலிடம் இதுபற்றிப் பேசியபோது, ''நடந்தது உண்மையிலேயே துயரமான சம்பவம்தான். டிரக்கிங் என்ற பெயரில் அனுமதி பெறாமல், பாதுகாப்பில்லாமல்வனத்துக்குள் செல்ல முயலும் சுற்றுலாப் பயணிகளை தடுப்பதோடு, கடுமையாகவே கண்டிக்கிறோம். ஆனாலும், இப்படிப்பட்ட துர் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. பொக்காபுரம், மசினகுடி பகுதிகளில் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் காட்டேஜ்களில் ரெய்டு நடத்தி, சீல் வைக்க உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. வனத் துறையுடன் கூடிப் பேசி, கூட்டு முயற்சியுடன் கடுமையான சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்...'' என்றார்.

காட்டுக்குள் கட்டுப்பாடில்லாமல் நடந்து வரும் காட்டேஜ்கள் பற்றி சமீப வருடங்களாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூக்குரலிட்டு வருகிறார்கள். வெளிநாட்டுப் பெண்மணியின் மரணத்துக்குப் பிறகாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற விவகாரங்கள் தொடராமல் தடுத்து நிறுத்தினால், காட்டு விலங்குகள் நிம்மதியாக உலவும்! இந்தியாவுக்கும் சர்வதேச அளவில் இழுக்கு வராமல் இருக்கும்.

- எஸ்.ஷக்தி, அ.சுப்புராஜ்
படங்கள் தி.விஜய்