Published:Updated:

காரைக்குடி குவான்டனாமோ...

காரைக்குடி குவான்டனாமோ...

காரைக்குடி குவான்டனாமோ...
சித்ரவதை துப்புத்துலக்கல்!
காரைக்குடி குவான்டனாமோ...
காரைக்குடி குவான்டனாமோ...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''துப்புத் துலக்குகிறேன் பேர்வழின்னு சொல்லிக்கிட்டு, ரெண்டு இன்ஸ்பெக் டர்கள் கொடுத்த எசகு பிசகான 'தேர்ட் டிகிரி டிரீட்மென்டு'களால் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவங்க கை கால்கள் செயலிழந்து ஆஸ்பத்திரிகள்ல அட்மிட் ஆகியிருக்காங்க...''

- போலீஸ் தரப்பிலிருந்தே இப்படியரு செய்தி நம்முடைய காதுக்கு வந்ததால் அதிர்ந்து போனோம்! இந்த 'குவான்டனாமோ' ட்ரீட்மென்ட் குறித்து மேலும் விசாரித்தபோது... மேலும் அதிர்ச்சி நியூஸ் வெளிவந்தது!

தேவகோட்டை முத்துமீனாள் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படையினருக்கு 'ரிவார்டு' வழங்க ஏற்பாடு செய்தார் மாவட்ட

எஸ்.பி-யான ராஜசேகரன். அந்த தெம்பில், தனிப்படையிலிருந்த காரைக்குடி தெற்கு இன்ஸ்பெக்டர் சிவக்குமார், வடக்கு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் துப்புத் துலங்காமல் கிடக்கும் பழைய வழக்குகளையும் தூசிதட்டக் கிளம்பினார்கள். அதற்காக லத்தியைத் தூக்கிய வேகத்தில், புத்தூருக்கு போனாலும் சரி பண்ண முடியாத அளவுக்கு பலபேரை படுக்க வைத்து விட்டதாகச் சொல்கிறார்கள்.

போலீஸின் அதிரடி சிகிச்சையால் பாதிக்கப்பட்ட வர்கள் தரப்பில் சிலரிடம் பேசினோம். ''காரைக்குடி ஏரியாவில் கோபுரக் கலசங்கள் திருட்டு தொடர்பா விசாரிச்ச இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, சிவக்குமார் ஆகியோரிடம் முத்துக்குமார்ங்கிற ஆட்டோ டிரைவர் சிக்கியிருக்கான். ஏட்டய்யா மக னான அவன் மீது ஏற்கெனவே வழக்குகளும் இருக்கிற தால், அவனைப் பிடிச்சுட்டுப் போய் அமராவதி புதூர் போலீஸ் ஸ்டேஷன்ல தலைகீழா கட்டி அடிச்சுருக்காங்க. 'திருட்டுப் போன கலசங்களை பத்தி எனக்கு எதுவும் தெரியாதுய்யா..'ன்னு அவன் கதறியிருக்கான். 'அப்படின்னா, வேற எதைப் பத்தி தெரியும் சொல்லு...'ன்னு போலீஸ் அவனை டார்ச்சர் பண்ணவும், 'குன்றக்குடிக்கிட்ட காரை மறிச்சு இருபது லட்ச ரூபாயை வழிப்பறி செஞ்சது எங்க டீம்தான்'னு சொல்லியிருக்கான்.

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்துல நடந்த அந்த வழிப்பறி சம்பவத்துல பறிபோனது பெரிய இடத்துக்குப் போக வேண்டிய பணம்கிறதால, அதுதொடர்பா போலீஸுக்கும் நெருக்கடிகள் இருந்துச்சு. இந்த நிலையில... முத்துக்குமார் இப்படிச் சொல்லவும், அவனை கீழே இறக்கிவிட்டு பாந்தமா விசாரிச்சு ருக்காங்க. அப்போ, வழிப்பறி கொள்ளையை எப்படி செஞ்சோம்னு தத்ரூபமா சொன்னவன், அதில் சம்பந்தப்பட்டதா சிலரோட பேரையும் சொல்லியிருக்கான். அவன் சொன்னதை வச்சு மாடசாமி, ஜெயக்குமார், ஆனந்தன் உள்ளிட்ட சிலரை இரவோடு இரவாக தூக்கிட்டு வந்து படுக்க வச்சு லாடம் கட்டிட்டாங்க.

அப்படியும் துப்புக் கிடைக்கலை போலருக்கு... அப்பதான் கைகளை பின்னாடி கட்டி உருளைக் கட் டையில கயித்தைப் போட்டு மேலே கட்டி தூக்கிட்டாங்க. ஒருகட்டத்துல முத்துக்குமார் பொய் சொல்றான்னு தெரிஞ்சதும், அவனையும் லாடம் கட்டிட்டு, 'ஏண்டா பொய் சொன்னே'ன்னு கேட்டுருக்காங்க. அதுக்கு, 'இல்லாட்டி நீங்க அடிப் பீங்கள்ல..'ன்னு சொல்லிருக்கான். 'பொய் யைச் சொன்னாலும், அதெப்படிடா பொருந்தச் சொன்னே..'ன்னு கேட்டதுக்கு 'அப்ப, தினத்தந்தி பேப்பர்ல நியூஸ் வந்துச்சுல்லய்யா, அதை வச்சுத்தான் சொன்னே'ன்னு காமெடி பண்ணிருக்கான் பாவி...'' என்று நிறுத்தியவர்கள், தொடர்ந்து...

''இருந்தாலும் விடாத போலீஸ்காரங்க, முத்துக்கு மாரை அவனோட வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி துழாவியிருக்காங்க. அப்ப அந்த வீட்டுல ஒரு பொண் ணோட போட்டோ இருந்திருக்கு. 'இந்தப் பொண்ணு யாருடா'ன்னு லத்தியை தூக்குனதுமே, 'ஐயா... ஐயா... அடிக்காதீங்கய்யா... காரைக்குடி டி.டி.நகர் சர்ச் பக்கத்துல ஒன்றரை வருஷத்துக்கு முந்தி ஒரு பொண்ணு நிர்வாணமா எரிச்சுக்

காரைக்குடி குவான்டனாமோ...

கிடந்துச்சுல்ல... அதுதான்யா இது. சென்னையைச் சேர்ந்த இவளை, மில் மேனேஜர் தென்னரசுதான் இங்கே கூட்டிக்கிட்டு வந்தாரு. அவரு சொன்னபடி நடக்காததால, அவரும் நாங்க சிலபேரும் சேர்ந்துதான் இவளைக் கொன்னு எரிச்சுப் போட்டோம்'ன்னு கதை விட்டிருக்கான். அந்த கேஸ்லயும் துப்புக் கிடைக்காம ஒன்றரை வருஷமா தடுமாறிக்கிட்டிருந்த போலீஸ்காரங்க, ஆர் வக்கோளறுல அப்பவே தென்னரசு, பாண்டியன் ராம்ஜிபாபுன்னு சில பேரை அழைச்சுகிட்டு வந்து, அவங்களுக்கும் டிரீட்மென்ட் குடுத்துருக்காங்க.

இதுல பாண்டிங்கிறவரு முத்துக்குமார்கிட்ட வந்து, 'ஏண்டா ஒன்னைய நான் முன்னப் பின்ன பாத்ததுகூட இல்லையேடா..'ன்னு கேட்டதுக்கு, 'என்ன பாஸ் இப்புடிச் சொல்றீங்க..? நம்ம ரெண்டு பேரும்தானே அவளைத் தூக்கி ரோட்டுல போட் டோம். இல்லைங்காம ஒத்துக்கங்க இல்லாட்டி அடிப் பாய்ங்க'ன்னு 'வின்னர்' படத்துல வடிவேலை சிக்க வச்ச சிங்கமுத்து கணக்கா சொல்லிருக்கான். இந்த மேட்டர்லயும் முத்துக்குமார் அடிக்கு பயந்து ரீல் விட்டிருக்கான்னு தெரிஞ்சு, போலீஸ்காரங்க அவனை நச்சு எடுத்துட்டாங்க.

இதுக்குள்ள, கல்லூரி மாணவர் ஒருவரையும் அவரோட அப்பாவையும் 45 நாளைக்கு மேல சட்ட

விரோதமா கஸ்டடியில் வச்சுருந்ததா மணப்பாறை ஏரியாவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருத்தர் உயர் நீதிமன்ற உத்தரவால் சஸ்பெண்ட் ஆனார். இதைப் பாத்துட்டு, காரைக்குடி போலீஸும் சட்டவிரோத காவலில் வச்சுருந்த அத்தனை பேர் மேலயும் பெட்டி கேஸ்களப் போட்டு வெளியில விட்டுட்டாங்க. ஆனா, போலீஸ் அடிச்ச அடியில மாடசாமி, தென்னரசு, ராம்ஜிபாபு உள்ளிட்ட சிலரோட நிலைமை ரொம்பவே கவலைக்கிடமா இருக்கு. இவங்களும் இன்னும் சிலரும் ஆபத்தான நிலையில சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்காங்க. தங்களை சிரிப்பா சிரிக்க டிச்சுட்டானேங்கிற ஆத்திரத்துல போலீஸ்காரங்க, முத்துக்குமாரோட கைவிரல் நகங்களை பிடுங்கிட் டதா சொல்றாங்க. அவனை வெளியில விட்டா, தங்களுக்கு பிரச்னையாகிடும்கிறதால இன்னமும் கஸ்டடியிலேயே வச்சு ட்ரீட்மென்ட் குடுக்குறதா சொல்றாங்க!'' என்று நிறுத்தினார்கள்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம் நாம் பேசியபோது, ''முக்கியமான சில கேஸ்கள் தொடர்பா நாங்க சிலரை விசாரணைக்கு கூட்டிட்டுப் போனது உண்மைதான். ஆனால், நீங்க சொல்ற மாதிரியெல்லாம் அவங்க துன்புறுத்தப்படலை. அதேமாதிரி, நாங்க பிடிச்சுட்டுப் போனவங்க எல்லாம்

காரைக்குடி குவான்டனாமோ...

யோக்கிய சிகாமணிகள் கிடையாது. அத்தனை பேருமே பக்கா கிரிமினல்கள். அதில் ஒருத்தன் கொலை கேஸ் ஒண்ணுல தனக்கு சம்பந்தம் இருக்கிறதா ஸ்டேட்மென்ட் குடுத்துருக்கான். ஒருசில காரணங்களுக்காக அவங்கள நாங்க இப்ப வெளியில விட்டிருந்தாலும், கூடிய சீக்கிரமே அவங்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். உரிய முறையில தண்டனையும் வாங்கிக் கொடுப்போம்...'' என்றார்.

இதனிடையே, போலீஸ் கஸ்டடியில் இருக்கும் முத்துக்குமாரை ஆஜர்படுத்தக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் கடந்த 11-ம் தேதி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கலாகியிருப்பதால், இந்த பிரச்னையில் போலீஸ் நிலைமை இன்னும் சிக்கலாகி இருக்கிறது.

- குள.சண்முகசுந்தரம்
படங்கள் எஸ்.சாய் தர்மராஜ்