Published:Updated:

சிக்கப் போகும் ராஜா....

சிக்கப் போகும் ராஜா....

பின்தொடரும் உளவுத்துறை!
சிக்கப் போகும் ராஜா...
சிக்கப் போகும் ராஜா....
சிக்கப் போகும் ராஜா....

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'ஒண்ணு... ரெண்டு... மூணு...' என காற்றில் விரல்களால் எண்ணிய படியே வந்த வெடிமுத்துவிடம், ''என்ன பாஸு... விரல்ல வித்தை?'' என்றோம். ''பொண்டாட்டியை போலீஸ்ல போட்டுக் கொடுத்ததால், ஒரு ஜெயில் வார் டன் இப்படித்தான் கம்பி எண்ணிக்கிட்டு இருக்காருப்பு...'' என எடுத்த எடுப்பிலேயே அதிரடி அடுப்பைப் பற்ற வைத்தார்.

''சவுத் ஹெட் குவார்ட்டர்ஸ் ஜெயில்ல இருக்குற ஒரு வார்டனுக்கு முக்கியமான வேலையே ஜெயிலுக்கு கஞ்சா கடத்தி விக்கி றதுதான். தேனி, வருசநாடு பக்கமிருந்து மொத்தமா கஞ்சாவை வாங்கி வந்து, அதை வீட்டுல வச்சு பொட்டலம் போட்டு... ஜெயில் கைதிகளுக்கு சப்ளை பண்ணுவாராம். மெத்தப் படிச்ச அவரோட மனைவிக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கலை. சமீபத்துல ஒரு நாள் ராத்திரி,

வார்டன் வழக்கம் போல கஞ்சா மூட்டையைத் தூக்கிட்டு வீட்டுக்குப் போயிருக்காரு. இதனால வீட்டுல சண்டை. கடுப்பான வார்டன் வெளிய போயிட்டாரு. இனியும் விட்டா நல்லாருக்காதுனு நினைச்ச அந்தம்மா, போலீஸுக்கு போன் போட்டு, மேட்டரை சொல்லிட்டாங்க. உடனே, வார்டன் வீட்டுக்கு வந்து காத்திருந்த போலீஸார், திரும்பி வந்த வார்டனை கஞ்சா வும் கையுமா பிடிச்சு உள்ளே போட்டுட்டாங்க...''

''காட்டியும் கொடுப்பாள் பத்தினிங்கிறது சரியாப் போச்சு. இனிமேலாச்சும் அந்த வார்டன் திருந்துனா சரி...''

''அடுத்து திருமங்கலம் காக்கி மேட்டருப்பு... ஒரு மாசத்துக்கு முன்னாடி திருமங்கலம் புதுநகர் ரவுண் டானா கிட்ட, ஆளுங் கட்சியில இருக்கிற முன்னாள் ரஜினி ரசிகர் மன்றப் பிரமுகர் ஒருத்தரு ஆன்-லைன் லாட்டரி கிளப்பை ஆரம்பிச்சாரு. இதை கண்டுக்காம இருக்கிறதுக்காக புதுசா வந்த அந்த காக்கி அதிகாரிக்கு பத்தாயிரம் ரூபாய் வெட்டியிருக்காங்க. கொஞ்ச நாள்ல விஷயம் கசிஞ்சு, ஐ.ஜி-யான கிருஷ்ணமூர்த்தி, அந்த அதிகாரிக்கு டோஸ் விட... கிளப்பை இழுத்து மூடிட்டாங்க. ஆனா அதுக்கப் புறம், போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரிலேயே ஒரு இடத்தை பிடிச்சு ஆன்-லைன் லாட் டரியோடு 'தம்போலா' மிஷினை கொண்டாந்து சூதாட்டத்தையும் நடத்த ஆரம்பிச்சாங்க. பத்தாததுக்கு காமராஜபுரம், கப்பலூர்ல கிளைகளையும் திறந்திருக்காங்க. திரும்பவும் விஷயம் ஐ.ஜி-க்கு போக,

சிக்கப் போகும் ராஜா....

அவர் கடுமையா சத்தம் போட்டு. 'நடவடிக்கை எடுக்கணும்'னு உத்தரவு போட்டிருக் காரு. ஆனா, லோக்கல் அதிகாரி சூதாட்டம் நடத்து னவங்களை விட்டுட்டு சூதாடின 15 பேர் மேல கேஸ் போட்டுருக்காரு. இதுலயும் மனுஷன் வளமா வாழ்ந்துட்டாருன்னு தெரிஞ்சு, திரும்பவும் அந்த அதிகாரியை கூப்பிட்டு கண்டிச்சிருக்காரு ஐ.ஜி. அதுக்கப்புறம்தான், சூதாட்ட கிளப் நடத்துன முக்கியப் பிரமுகர்கள் ஆறு பேர் மேல வழக்கு போட்டுருக்காரு. சிக்குனதுல 'தினமும் சுடுற' பத்திரிகையோட அதி பரும் அடக்கமாம். மனசே இல்லாம வழக்குப் போட்ட மனுஷன் இப்ப, வழக்கிலிருந்து அவங்களை விடுவிக்க பேரம் பேசிக்கிட்டு இருக்காருப்பு...'' என்று விவரங்களை அடுக்கினார் வெடிமுத்து.

''இது செட்டிநாட்டு மேட்டர்.. 'என் கடமைகளை முடிச்சிட்டு நானே வந்து சரண்டர் ஆகிடுறேனுங் கய்யா...'னு போன்ல சொன்ன ஒரு பொறுப்பான திருடனுக்காக வழி மேல விழி வெச்சு போலீஸ் காத் துக்கிட்டு இருக்கப்பு. செட்டி நாட்டுப் பக்கத்துல கோட்டையூர், கானாடுகாத்தான் ஏரியாவுல சுமார் பதினெட்டு லட்சம் ரூபாய் பணம், பொருள் கொள்ளை போனுச்சு. கொள்ளை நடந்த ஸ்டைலை பாத்துட்டு, 'தஞ்சாவூர் ரவி'ங்கிற ஒரு முன்னாள் திருடனை தேடியிருக்கு போலீஸ். ஆனா, அவனோ, மனந்திருந்தி மீன் பிடி தொழில் பாத்துக்கிட்டு இருக்கான்னு தெரிஞ்சதும், அடுத்ததா தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த சோனிங்கிற கொள்ளையனைத் தேடிப் போயிருக்காங்க. போலீஸ் போன நேரத்துல சோனி, வீட்டுல இல்லை. கொஞ்ச நேரத்துல போலீஸுக்கு போன் போட்ட சோனி, 'ஐயா நான்தான் சோனி பேசுறேன்... நீங்க நல்லா இருக்கீங்களா? வீட்டுக்கு வந்துட்டுப் போனதா சொன்னாங்க. ஐயா, கோட் டையூர், கானாடுகாத்தான் மேட்டர்கள் நம்ம வேலைதான். அதுக்காக நீங்க மெனக்கெட்டு வண் டிக்கு டீசல் போட்டுக்கிட்டு அலைய வேண்டாம். இந்தக் காலத்துல, கொள்ளையடிக்கிறதை விடவும் கொள்ளையடிச்ச சாமான்களை வித்துக் காசாக்குறது ரொம்ப கஷ்டமா இருக்குய்யா.... எனக்கு அங்க இங்க கொஞ்சம் கடன் இருக்கு. சாமான்களை கொடுத்த இடத்துலருந்து இன்னும் பணம் வரலை. அது வந்ததும் கடனை செட்டில் பண்ணிட்டு, நானே உங்ககிட்ட வந்துடுறேன். அதுக்கப்புறமா நம்ம எல்லாருமா சேர்ந்து ரெக்கவரிக்கு போகலாம். நான் அப்படி வரலைனா ஏண்டா நாயேனு கேளுங்க' அப்படினு பவ்யமாக சொல்லியிருக்கான். போலீஸும், 'சரிப்பா... ரொம்ப டைம் எடுத்துக்காம சீக்கிரமா வந்து சேரு...'னு சொல்லி சோனிக்காக அல்லிநகரத்துலயே காத்திருக் காங்கப்பு...''

''அந்தத் திருடன் சாரோட நேர்மை ரொம்பப் பிடிச்சுருக்குப்பா...'' என சிரித்தோம்.

வெடிமுத்து விடவில்லை.

''இடைத் தேர்தல் தொகுதிகள்ல ஒரு தொகுதியில ஆளுங்கட்சி சார்பாக போட்டியிடுற மனுஷன் அவரு. அவர் அண்ணனோட மாப்பிள்ளை தே.மு.தி.க-வுல இருக்காரு. அவரும் அதே தொகுதியில் தன்னோட மாமாவை

சிக்கப் போகும் ராஜா....

எதிர்த்து போட்டியிடறாரு. அதே சமயம் இவங்க குடும்ப சொத்துகள் எல்லாம் இன்னும் பாகப் பிரிவினை செய்யாததால் ஆளுங்கட்சி மாமாவே மாப்பிள்ளையைக் கூப்பிட்டு, 'இந்தாங்க மாப் பிள்ளை, இதை தேர்தல் செலவுக்கு வச்சுக்கோங்க. செலவுகள இதுக்குள்ள முடிச்சுக்குங்க'னு சொல்லி இருபது லட்சத்தைக் கொடுத்தாராம்..! பணத்தை வாங்குன மாப்பிள்ளையும் மாமா கால்ல விழுந்து, 'நான் ஜெயிக்க ஆசீர்வாதம் பண்ணுங்க...'னு ஆசி வாங்கிட்டுப் போனாராம்...''

''அட்ரா சக்கே.. அட்ரா சக்கே..!''

''தென் மாவட்ட அமைச்சர் ஒருத்தர்கிட்ட பி.ஏ-வாக இருக்கறவரு, வசூல் விஷயங்கள்லயும் அப்பாயின்ட் மென்ட் விவகாரங்கள்லயும் அமைச்சரோட பேரைச் சொல்லி புகுந்து விளையாடிட்டாராம். இவரோட அண்மைக் கால சொத்துக் குவிப்பு விவகாரங்களைக் கேட்டு அமைச்சருக்கே தலை சுத்திடுச்சாம். கடுப்பான அமைச்சர், அவரை கண்டிச்சிருக்காரு. அதுல டர்ர்ரான பி.ஏ., 'அவர்கிட்ட இருந்து

சிக்கப் போகும் ராஜா....

என்னை மாத் திடுங்க'னு அதிகார மையத்துகிட்ட கண்ணைக் கசக் கினாராம்... அவரும், 'ஆகட்டும் பார்க்கலாம்'னு சொல்லியிருக்காருப்பு...'' என்ற வெடிமுத்து,

''அமைச்சர்கள் சிலரையும் போலீஸ் அதிகாரிகள் சிலரையும் அம்மணிகளை வைத்து மயக்கி வைத்திருக்கும் 'அந்த' முஸ்லிம் நாட்டு பெயரை தன்னோடு இணைத்து வைத்திருக்கும் ராஜா ஒருத்தர், சமீப காலமாக தமிழக அரசின் உயர் பெண் அதிகாரி ஒருத்தரிடம் கட்டுண்டு கிடக்கிறாராம். அவருடைய செல்வாக்கை வைத்தும் அரசாங்க வேலைகளை எளிதாக முடிக்கும் அந்த ராஜாவைப் பற்றி தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்திருக்கிறதாம் உளவுத்துறை... விரைவிலேயே அந்த படாடோப ராஜா, போலீஸில் சிக்குவார் என்கிறார்கள்...'' சொல்லிவிட்டு, நடையைக் கட்டினார்.

தொகுப்பு குள.சண்முகசுந்தரம்,
டி.எல்.சஞ்சீவிகுமார்