Published:Updated:

உயிரை இழந்த மாணவன்!

உயிரை இழந்த மாணவன்!

கெளரவத்துக்காக படிப்பு...
கொடுமைப்படுத்துகிறதா பள்ளிகள்?
உயிரை இழந்த மாணவன்!
உயிரை இழந்த மாணவன்!
உயிரை இழந்த மாணவன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ங்களுடைய குழந்தை சொந்த ஊரில் படிப்பதாக வெளியில் சொல்வதையே பெற்றோர்கள் கௌரவக் குறைச்சலாக நினைக்கும் விநோதமான காலகட்டம் இது. பஸ்ஸிலோ, ரயி லிலோ போய் பரந்து விரிந்த பள்ளிக்கூடத்தில் படிப் பதையே விரும்புகிறார்கள். அந்த 'பெரிய ஸ்கூல்' ஆசை ஒரு மாணவனின் உயிரையே காவு வாங்கியிருக்கிறது!

திருச்சி-டால்மியாபுரத்தில் வசிக்கும் ஆறுமுகம்-ஹேமலதாவின் ஒரே வாரிசு யுவராஜ். எப்படியும் தங்களுடைய மகனை டாக்டராக்கியே தீர வேண்டும் என்பது இவர்களுடைய கனவு. அதற்காக இவர்கள் தேர்ந்தெடுத்த பள்ளி, எஸ்.கே.வி. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல். நாமக்கல் மாவட் டம்

திருச்செங்கோட்டிலிருந்து பரமத்திவேலூர் செல்லும் வழியில் கந்தம்பாளையம் என்ற ஊரில் இருக்கிறது அந்த ஸ்கூல். சென்னை, கோவை, திருச்சி என பல மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் வந்து தங்கிப் படிக்கும் ரெசிடென்ஷியல் ஸ்கூல் இது.

பிளஸ்-டூ படித்து வந்த யுவராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்திலேயே ரத்தம் சொட்டச் சொட்ட பிணமாகக் கிடந்திருக்கிறான். போஸ்ட் மார்ட் டத்துக்காக யுவராஜின் உடல் வைக் கப்பட்டிருந்த பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அவனுடைய பெற்றோர் கதறிக் கொண்டிருந்த காட்சி, கல் நெஞ்சக்காரர்களையும் கலங்க வைத்திருக்கும்.

உயிரை இழந்த மாணவன்!

யுவராஜின் அப்பா ஆறுமுகத்துக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம். ''அவனை எப்படியாவது டாக்ட ராக்கிப் பார்க்கணும் என்ற ஆசையில்தான் இங்கே கொண்டுவந்து சேர்த்தோம். அவனும் நல்லாத்தான் படிச்சுட்டு இருந்தான். ராத்திரி திடீர்னு ஸ்கூல்ல இருந்து போன் பண்ணி, 'உங்க பையன் மொட்டை மாடியில இருந்து குதிச்சுட்டான். உடனே, கௌம்பி வாங்க'னு கூப்பிட்டாங்க. இங்கே வந்து பார்த்தா, எம்புள்ள பொணமா கெடக்குறான்யா... தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு அவன் கோழை இல்லைங்க. என்ன நடந்துச்சுன்னு யாரைக் கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறாங்க...'' என்று அதற்கு மேல் பேச முடியாமல் தலையிலடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார் ஆறுமுகம். யுவராஜின் அம்மா ஹேமலதாவோ அழுது அழுது ஓய்ந்து போய் மயங்கிய நிலையிலிருந்தார்.

மாணவர்கள் தரப்பில் விசாரித்தால், ''ராத்திரி பன்னிரண்டு மணி வரைக்கும்

உயிரை இழந்த மாணவன்!

படிக்கணும். திரும்பவும் அதிகாலை எழுந்து படிக்கணும். இந்த ஒர்க் லோடு தாக்குப் பிடிக்க முடியாமல்தான் யுவராஜ் குதிச்சிட்டான்!'' என்றார்கள் சிலர்.

வேறு சிலர், ''ஹாஸ்டல்ல இருக்கிற பசங்களுக்குள்ள கோஷ்டி மோதல் இருந்துச்சு. அந்தத் தகராறுல தான் ஒரு கோஷ்டி யுவராஜை மேல இருந்து கீழே தள்ளி விட்டுட்டாங்க...'' என்றார்கள்.

பள்ளியின் செயலாளர் பொன்னிமணி யிடம் பேசினோம். ''யுவராஜ் எதுக்காக செத்து போனான்ங்கிறதுக்கு காரணம் அந்த ஆண்டவனுக்கு மட்டும்தாங்க தெரியும். எங்களுக்கு காரணமெல்லாம் தெரியல. ஊருக்குப் போயிட்டு வந்ததிலிருந்தே அவன் பேசாம 'மூட் அவுட்' ஆன மாதிரி இருந்திருக்கான். அவன் எப்பவும் பன்னிரண்டு மணி வரைக்கும் படிப்பான். அன்னிக்கு ராத் திரியும் படிச்சுட்டு இருந்தவன், திடீர்னு எந்திரிச்சு எங்கயோ போயிருக்கான். பாத்ரூம் போறான்னு நினைச்சு யாரும் கண்டுக்கல. ஹாஸ்டலோட மொட்டை மாடிக்கு போயி, அங்கிருந்து கீழே குதிச்சுருக்கான். சத்தம் கேட்டுத்தான் பசங்க எட்டி பார்த்திருக்காங்க. யுவராஜ் கீழே ரத்த வெள்ளத்துல கெடந்திருக்கான்.

இங்க இருக்கிற ஒவ்வொரு பசங்களையும் எங்க சொந்த பசங்க மாதிரிதான் பார்த்துக்குறோம். எங்களையும் மீறி இப்படி ஒரு சம்பவம் நடந்துடுச்சு. ஆனா, யுவராஜோட மரணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. எங்க ஸ்கூல் பசங்களுக்குள்ள கோஷ்டி தகராறு இருக்கிறதா சொல்றதெல்லாம் உண்மையில்லை!'' என்றார் ஆறாத வருத்தத்துடன்.

பள்ளிகளில் தற்கொலை என்பது சமீபகாலத்தில் அடிக்கடி நடக்கும் சம்பவமாகி

உயிரை இழந்த மாணவன்!

விட்டது. ஏன், இந்த அவலம் என்று சேலம் ஸ்ரீகோகுலம் மருத்துவமனையின் பிரபல மனநல மருத்துவர் பாஸ்கரிடம் பேசினோம். ''இதுக்கு முக்கியமான காரணம், பெத்தவங்களைத்தான் சொல்லுவேன். தங்களோட குழந்தையோட கெப்பாசிட்டி என்ன, அவனோட விருப்பம் என்னனு எதைப் பத்தியும் அவங் களுக்குக் கவலை இல்ல. எப்படியாவது தங்களோட குழந்தை பிளஸ்-டூவுல ஆயிரம் மார்க்குக்கு மேல வாங்கி, டாக்டர் ஸீட்டோ இன்ஜினீயரிங் ஸீட்டோ வாங்கியாகணும். அதுக்காக அவங்களை எங்காவது வெளியூர்ல இருக்குற பள்ளிக்கூடமா பார்த்துக் கொண்டுபோய் ஹாஸ்டல்ல சேர்த்துட்டு வந்துடுறாங்க. டென்த் வரைக்கும் ரொம்ப சாதாரணமா படிச்சுட்டு இருந்த ஒரு பையனை, 'பிளஸ்-ஒன்' போனதும் பெரிய ஸ்கூல்ல சேர்த்து ஆயிரம் மார்க்குக்கு மேல வாங்குன்னு சொல்லி, அவனை பிழிஞ்சு எடுத்தா அவன் எப்படி தாங்குவான்..? நாமக்கல் மாவட்டத்துல இருக்குற பல

உயிரை இழந்த மாணவன்!

ஸ்கூல்கள் ஒவ்வொரு வருஷமும் தங்களோட ஸ்கூல் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறணும், எல்லோரும் ஆயிரம் மார்க்குக்கு மேல வாங்க வைக்கணும்... அப்போதான் அடுத்த வருஷம் இதை காரணம் காட்டி ஃபீஸை ஏத்தலாம்ங்குறதுக்காக பசங்களை சரியா தூங்கக்கூட விடாம படிக்க வைக்கிறாங்க. இதனால பசங்க மனசளவுல ரொம்பவே பாதிக்கப்படுறாங்க. மன அழுத்தத்தால பாதிக்கப்பட்டு என்கிட்ட வரும் அறுபது சத விகிதத்துக்கும் மேற்பட்டவங்க ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்தான். ஒரு பக்கம் பெத்தவுங்க... இன்னொரு பக்கம் ஸ்கூல்னு... ரெண்டு பக்கம் இருந்தும், ஒரு பையனுக்கு பிரஷ்ஷர் கொடுக்கும்போது வாழ்க்கை மேலேயே வெறுப்பு வந்து, எப்படியாவது இதிலிருந்தெல்லாம் விடுபடணும் என்கிற பயங்கரமான எண்ணங்கள் வரத்தான் செய்யும்.

பெற்றோர்களுக்கு ஜூ.வி. மூலமாக ஒரு விஷயத்தை நான் பதிவு செய்ய விரும்புறேன். உங்க குழந்தைகளை பிளஸ்-டூ வரைக்குமாவது முடிஞ்ச வரைக்கும் நேரடிக் கண்காணிப்பில், உங்களோட அரவணைப்பில் வச்சுக்கோங்க. படிப்புல நல்ல படிப்பு, கெட்ட படிப்புனு எதுவும் கிடையாது. அதனால உங்களோட எண்ணங்களை அவங்க மேல திணிக்காதீங்க. குழந்தைகளோட கருத்துகளுக்கு மரியாதை கொடுங்க. அவங்களுக்கு எது மேல விருப்பம்... என்ன படிக்க விரும்புறாங்கனு கேட்டு, அதுக்குத் தக்கபடி கோச்சிங் கொடுங்க. படிப்புங்குறது ஒரு கருவிதான். அதுவே வாழ்க்கையாகிடாது!'' என்று அக்கறையோடு எச்சரிக்கை செய்தார்.

- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள் க.தனசேகரன்