Published:Updated:

காதலை கைகூட வைக்கும் 'வன்னி'!

காதலை கைகூட வைக்கும் 'வன்னி'!

காதலை கைகூட வைக்கும் 'வன்னி'!
'நினைத்தால் பூ மலரும்..'
காதலை கைகூட வைக்கும் 'வன்னி'!

'சில மரங்களைச் சுற்றி வந்தால் பிள்ளை பிறக்கும்!' என்பது அந்தக் கால நம்பிக்கை... இப்போது, 'மரத்தைச் சுற்றி வாருங்கள்... உங்கள் காதல் கைகூடும்!' என்கிறார்கள்கும்பகோணம் காதலர்கள். அவர்கள் காட்டுவது பட்டீஸ்வரம் துர்கை அம்மன் கோயிலின் தல விருட்சமான இரு வன்னி மரங்களை! ரெண்டுமே 'காதல் மரங்க'ளாம்! இந்த மரத்தில் 'எங்க காதல் ஜெயிக்கணும்!' என வேண்டிக்கொண்டு மஞ்சள் கயிற்றைக் கட்டினால், உடனே 'சக்ஸஸ்' என அடித்துச் சொல்கின்றனர் 'காதல்' பக்தர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காதலை கைகூட வைக்கும் 'வன்னி'!

துர்கை அம்மன் கோயிலின் வாசலில் நின்றிருந்த கிருஷ்ணசாமி என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

'கும்பகோணம் ஏரியாவுல ரொம்ப பிரசித்தமானது, இந்த துர்கையம்மன் கோயில். இங்க இருக்கிற கோயில் மரங்கள் இரண்டு, ரொம்பப் பக்கத்துல பக்கத்துல இருக்கு. எப்பவுமே ஒரு வன்னி மரத்துக்கு அருகில் இன்னொண்ணு வளராது.

காதலை கைகூட வைக்கும் 'வன்னி'!

அதையும் மீறி இப்படி ஜோடியா இருப்பது அம்மனோட அருள்தான். இதுல ஒரு மரத்துல, வயசுப் பொண்ணுங்க தங்களுக்குப் புடிச்ச பையனை நினைச்சுக்கிட்டு, சுத்தி வந்து மஞ்சள் கயிறு கட்டினா... உடனே அவங்க ரெண்டு பேருக்கும் கல் யாணம் நடந்துடும்! இன்னொரு மரம் குழந்தை பாக்கிய வேண்டுதலுக்கானது. இங்க உள்ள காதல் வன்னி மரத்துல கயிறு கட்டி வேண்டுன பலருக்கு, இதே கோயில் லயே கல்யாணம் நடந்துருக்கு!' என பட்டி யல் போட ஆரம்பித்தார்.

இந்தக் கோயிலின் வரலாற்றைக் கேள்விப் பட்டு வந்திருந்த இளைஞர் ஒருவர், 'என் நண்பன் சொல்லித்தான் இப்படியரு விஷயமே எங்களுக்குத் தெரியும். எங்க காதலுக்கு சாதிதாங்க பிரச்னை. அதையும் தாண்டி எங்களுக்குத் திருமணம் நடந்துச்சுன்னா, மனசுல வேண்டுனபடி செய்வேன் (ஆனால், வெளியே சொல்லக் கூடாதாம்!). காதலின் சின்னம் தாஜ்மஹால்னு எல்லாரும் சொல்வாங்க. இந்த மரத்தையும் அதில் சேர்க்கணுங்க...' என்றார்.

கோயில் வட்டாரத் தில் விசாரித்தோம். ''வயசுப் பொண்ணுங்க சீக்கிரம் திருமணம் நடக்கணும்னு வேண்டிக்கிட்டு, மஞ்சள் கயிறு கட்டு வாங்க. அதுதான் இப்ப காதலிக்கறவங்களுக்கு மாறிப்போச்சு சார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இதுல ஒரு வன்னிமரம் வேரோடு சாய்ஞ்சு போச்சு. ஊர் மக்களும், அதிகாரிகளும் படாத பாடுபட்டுக் காப்பாத்தி, அந்த மரத்துக்கு உயிர் கொடுத் தாங்க. இப்போ, காதலர்களுக்கு கை கொடுக்கும் இந்த வன்னி மரத்தால கோயி லின் புகழ் பரவிக்கிட்டே இருக்கு...'' என்றனர்.

மரத்தை சுற்றி டூயட் பாடுவது சினிமாவில்... இந்த வன்னி மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டினால் பெத்தவங்க ஆசியோடு காதல் டூயட் பாடலாம் என்கிறார்கள் இங்கே! எல்லாம் காதல் படுத்தும் பாடு!

- சி.சுரேஷ், அ.சரண்யா
படங்கள் எம். ராமசாமி