Published:Updated:

துரைமுருகன் இடத்தில் தங்கமா?!

துரைமுருகன் இடத்தில் தங்கமா?!

துரைமுருகன் இடத்தில் தங்கமா?!
துரைமுருகன் இடத்தில் தங்கமா?!
துரைமுருகன் இடத்தில் தங்கமா?!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
துரைமுருகன் இடத்தில் தங்கமா?!

''இந்த ஒரு வாரத்திலேயே வானம் மும்மாரி பெய்து, சென்னையை பிசுபிசுக்க வைத்து விட்டதே... இந்த நேரத்தில் மதுரவாயல் 'ரவுண்ட்-அப்'பா...'' டரியலானார் இம்சை மன்னர். அவரிடம் ஒரு சுக்கு காபியை நீட்டி, ''இதை குடியும் மன்னா... தெம்பாக நகர்வலம் செல்வோம்!'' என தேற்றினார் மங்குனி. குளிருக்கு இதமான சுக்கு காபி குடித்துவிட்டு, இருவரும் ஆட்டோவில் மதுரவாயல் விரைந்தனர்.

''மன்னா... ராயபுரம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான ஜெயக்குமாரோட தொகுதி மேம்பாட்டுப் பணத்துல ஒன்பது சத்துணவுக்கூடங்களை கட்டி முடிச்சுட்டாங்க, வட சென்னை ஏரியாவுல. இரண்டு மாசமாகியும்... துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்துதான் திறக்க ணும்னு அதிகாரிகள் தாமதிச்சுக்கிட்டே இருந் தாங்களாம். 'மு.க.ஸ்டாலின்

வரும் வரை மக்கள் ஏன் காத்திருக்கணும்?'னு கேட்டு, மக்களோடு மக்களாக கடந்த ஞாயித்துக்கிழமையன்னிக்கு அந்த ஒன்பது சத்துணவுக்கூடங்களையும் அதிரடியா திறந்து வெச் சுட்டாரு ஜெயக்குமாரு...'' என்று தகவல் சொன்ன மங்குனியாருக்கு, சுக்கு, மஞ்சள் தூள் கலந்த பால் கப் ஒன்றைக் கொடுத்தார் இம்சை.

ஒரு சிப் உறிஞ்சிய மங்குனி, ''ராஜாதிராஜாவே, புதுசா பிரமாண்டமான சைபர் க்ரைம் லேப் திறந்திருக் கிறார், சென்னை கமிஷனர் ராஜேந்திரன். இந்த லேபின் முதல் போணியாகத்தான் சிக்கியிருக்கிறார், நடிகை ஸ்நேகாவுக்கு செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய பெங்களூருக்காரர்...'' என்ற மங்குனி, அந்த லேப் பற்றிய கூடுதல் தகவலையும் தந்தார். ''69 வகையான அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்ட முக்கியமான லேப் இது. ஈகோ பிரச்னையால அடுத்தவரை மாட்டிக் கொடுப்பதற்காக சைபர் க்ரைம்ல ஈடுபடுகிற சம்பவங்கள் அதிகமாகிட்டே வந்து, புகாரா குவியவேதான் இப்படியரு லேப்பை கமிஷனர் அலுவலகத்துல ஏற்படுத்தி இருக்காங்க. செல்போனில் ஆபாச மிரட்டல், கம்யூட்டரில் தகவல் திருடுதல், இ-மெயில் மூலம் முக்கியத் தலைவர்களுக்கு மிரட்டல்... இப்படியெல்லாம் தினப்படி வரும் புகார்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு டெக்னிக்கல் உதவி செய்யவே இந்த லேப் அமைக்கப்பட்டிருக்கு. இதன் பொறுப்பாளராக உதவி போலீஸ் கமிஷனர் சுதாகர் செயல்படுகிறார். இதற்காக சுமார் 70 லட்ச ரூபாய் செலவாகி இருக்காம்...'' என்றார்.

துரைமுருகன் இடத்தில் தங்கமா?!

மங்குனியைப் பார்த்த மன்னர், மங்குனியிடம், ''கோயம்பேடு ஜங்ஷன் தாண்டி, மதுரவாயல் ஏரியாவுக் குள்ளே ஆட்டோவை விடச் சொல்லும்..!'' என்று உத்தரவு போட்டார். ஆட்டோக்காரர் வேகமாக இலக்கை நோக்கி விரைந்தார். மதுரவாயல் ஏரியா வந்ததும், மங்குனியும் இம்சையும் இறங்கி நடந்தனர். நகராட்சி அலுவலகத்தை கடந்தபோது அந்த காட்சியை பார்த்து திடுக்கிட்ட மங்குனி அதிர்ச்சியோடு இம்சை யாரை பார்த்து,

''என்ன மன்னரே, இப்படியெல்லாமா நடக்கும்?'' என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டினார்.

மன்னரும் திரும்பிப் பார்த்தால், நகராட்சி அலுவலகத் தின் வாசலில் இருக்கும் கொடிக் கம்பத்தின் கீழே காந்தியடிகளின் படம் அனாதையாகக் கிடந்தது. கடந்த பதினைந்தாம் தேதியன்று தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடியவர்கள், மிட்டாய் கொடுத்துவிட்டு காந்தியை கண்டு கொள்ளாமல் கலைந்துவிட்டார்கள். அதன்பிறகு, அங்கு வந்த ஒரு ஆடு பசி கொடுமை தாங்க முடியாமலோ என்னவோ, காந்தி படத்தை பிடித்து இழுத்து ஒருவழி பண்ணிக் கொண்டிருந்தது. படத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த பூக்களையெல்லாம் மேய்ந்து முடித்த ஆடு, காந்தியை மேய ஆரம்பித்திருந்தது. உடனே, ஆட்டின் அருகில் ஓடி அதனை விரட்டிவிட்டார் இம்சையார். ''மனிதர்கள் மறந்தாலும், ஒரு காலத்தில் ஆட்டுப் பால் குடித்த காந்தியின் மீது உள்ள பாசத்தை ஆடு இன்னும் மறக்கவில்லைப் போலும்... உம்முடைய இரக்கத்துக்கு முன்பாக நானெல்லாம் சும்மா...'' என மன்னருக்கு ஐஸ் வைத்தார் மங்குனி.

மதுரவாயல் ஏரியா ரவுண்டு முடித்து, ஆட்டோ இருக்கும் இடம் நோக்கிப் போனார்கள் இம்சையும் மங்குனியும்.

இருவரையும் மீண்டும் ஆட்டோவுக்குள் திணித்துக் கொண்ட ஆட்டோக்காரர், ''ரெண்டு பேரும் ஊரு உலக நியூஸெல்லாம் பேசுனீங்க... சுவாரஸ்யமாத்தான் இருக்குது. எனக்கு ஒரு சந்தேகம்... தீர்த்து வைக்க முடியுமா?'' என்று தன் பங்குக்கு ஒரு பிட்டைப் போட்டார்.

''ஏதோ, முதல்வர்கள் மாநாடுன்னு சொல்லி டெல்லி கோலாகலமாகி கிடக்குதாம்ல. தமிழக முதல்வருக்குப் பதிலா துணை முதல்வர்தான் அதுல கலந்துகிட்டு இருக்கார். ஆனா, முதல்நாள் நடந்த சட்டத்துறை சம்பந்தமான மீட்டிங்ல, தமிழகக்

துரைமுருகன் இடத்தில் தங்கமா?!

கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகிட்டு நிறைய விஷயங்களைப் பேசி இருக்காரே, அது பத்தி ஏதும் தகவல் உங்ககிட்ட இல்லையா?'' என்றார் விவரமாக.

ஆட்டோக்காரரை இம்சையும் மங்குனியும் ஏற இறங்க பார்த்துவிட்டு, ''நீரே பதில் சொல்லுப்பா...'' என்று இம்சை, மங்குனிக்கு உத்தரவு போட, ''முதல் நாள் நடந்த அந்த மீட்டிங்குக்கு முதல்வர் இல்லாத பட்சத்தில் சட்டத்துறை அமைச்சரான துரைமுருகன் தான் போயிருக்கணும். ஆனா, அவருக்குத்தான் சமீபகாலமா கட்சித் தலைமையோட நல்ல உறவு இல்லாம இருக்குதே... அதுனால, அவருக்கு பதிலா கல்வித் துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி பேச வச்சிருக்காங்க. இதுல, சட்டத்துறை அமைச்சரான துரைமுருகனுக்கு கட்சித் தலைமை மேல ஏகத்துக்கும் வருத்தம்தானாம். இதுக்கிடையில, இந்த விவகாரத்தை வச்சு இன்னும் நிறைய கதைகள் அறிவாலய வட்டாரத்துல ஓடுது... பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியில இருந்து கழட்டி விடப்பட்ட துரைமுருகனை, சட்டத்துறை அமைச்சர் பொறுப்புல இருந்தும் ஒதுக்கி வைக்கப் போறாங்களாம். அதன் முதல் படிதான் அவருக்கு பதிலாக டெல்லிக்குப் போனாராம் தங்கம் தென்னரசு...'' என்று தனக்குத் தெரிந்த தகவல்களை யெல்லாம் இறக்கினார் மங்குனி.

''ஓ... இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மேட்ட ராக்கும்?'' என்று ஆட்டோக்காரர் வியந்து சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ''பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுவை விரை வில் பொதுப்பணித் துறை மற்றும் சட்டத் துறை அமைச்சராக்கவும் முதல்வர் முடிவெடுத்திருக்கிறாராம்...'' என்ற கூடுதல் தகவலையும் மங்குனி சொல்லி முடிக்க, ஆட்டோவும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நின்றது. ஆட்டோக்காரரிடமிருந்து விடைபெற்றார்கள் இம்சையும் மங்குனியும்!