Published:Updated:

அழிக்கப்பட்ட 'தாலிபன்' தலைவர்!

அழிக்கப்பட்ட 'தாலிபன்' தலைவர்!

பிரீமியம் ஸ்டோரி
இலக்கில் வென்ற அமெரிக்க மிசைல்...
அழிக்கப்பட்ட 'தாலிபன்' தலைவர்!
அழிக்கப்பட்ட 'தாலிபன்' தலைவர்!
அழிக்கப்பட்ட 'தாலிபன்' தலைவர்!

'உலகை அமைதிப்படுத்த ஜிகாத் ஒன்றே வழி' என துப்பாக்கியால் எழுதிக் கொண்டிருந்த தாலிபன் தலைவன் பைதுல்லா மெஹசூத், அமெரிக்காவின் ஆள் இல்லா மிசைல் தாக்குதலில் சிக்கிச் சிதறி இறந்திருக் கிறான்!

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை, அதை ஒட்டி யுள்ள ஆப்கானிஸ்தான் பகுதிகளில் பஷ்து, மெஹசூத் போன்ற மலை சாதியினர் பரவியுள்ளனர். அவர்களை தன்னுடைய தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தி வருகிறது தாலிபன் இயக்கம். அந்த மலைசாதி மக்களில் ஒருவனாக, பாகிஸ்தானின்

வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள பாணூ கிராமத்தில் 1974-ல் பிறந்தவன் பைதுல்லா மெஹசூத். முஸ்லிம் மதத்தில் தீவிரப் பற்றுக் கொண்ட மெஹசூத்தை, தாலிபன்களின் 'ஷரீயத் சட்ட ஆட்சி' அதிகமாக ஈர்த்தது.

இதே கொள்கையை பாகிஸ்தானிலும் அமல்படுத்த வடமேற்கு எல்லைப் பகுதியில் பல்வேறு அமைப்புகள் போராடி வந்தன. அவற்றில் 13 அமைப்புகளை ஒன்று சேர்த்து ஒரு படையை உருவாக்கிய மெஹசூத், அதற்கு தலைவனானான். டிசம்பர் 2007-ல் இதற்கு 'தெஹரீக்-ஏ-தாலிபன்-பாகிஸ்தான்' எனப் பெயரும் வைத்தான்.

இந்த அமைப்புக்கு ஆப்கன் தாலிபன் தலைவன் முல்லா உமரின் அங்கீகாரம் எளிதாகக் கிடைத்தது. தன்னை எதிர்த்த சுமார் 300 மலை சாதி பெரிசுகளைப் போட்டுத் தள்ளிய மெஹசூத், அல்-கெய்தா உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடனும் நட்பு வளையத்தை உரு வாக்கிக்கொண்டான்.

2007-ல் பாகிஸ்தானின் சிவப்பு மசூதியை தாக்கி, நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற சம்பவம்தான் மெஹசூத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அதே வருடம் பாகிஸ்தானின் 300 ராணுவத்தினரை பிணைக் கைதிகளாகப் பிடித்து, பாகிஸ்தானையே படபடக்க வைத்தான். ஒரு கட்டத்தில், 'மெஹசூத் இந்திய அரசின் ஒரு உளவு ஏஜென்ட்' எனவும் ஒரு முறை சந்தேகப் பட்டது பாகிஸ்தான். கடைசியில் மெஹசூத்தைக் கொல்ல, அமெரிக்காவின் உதவியை நாடியது.

இதையடுத்து அமெரிக்க ராணுவம் வஜீரஸ்தான் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டைக்குக் கடந்த ஆகஸ்ட் 5-ல் வெற்றி கிடைத்துள்ளது.

அன்று, தென் வஜீரஸ்தானின் லாதாவுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன் இரண்டாவது மனைவி வீட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தான் மெஹசூத். அப்போது அங்கே பறந்து வந்த அமெரிக்காவின் ஆள் இல்லா விமானம், 'மிசைல்' அனுப்பித் தாக்கியது. அதிலி ருந்து தப்பி ஓடிய மெஹசூத், அடுத்து வந்த மிசை லிடம் மாட்டிக் கொண்டான். மெஹசூத்தின் உடல் பல துண்டுகளாகச் சிதற, உடன் இருந்த அவனுடைய இரண்டா வது மனைவி மற்றும் ஏழு பாதுகாவலர்களும் மடிந்தனர். இந்தத் தகவலை இரண்டு நாட்களுக்குப் பின் தாலிபனின் கமாண்டர் கைய்ஃபியத்துல்லா அமெரிக்கச் செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்தார்.

''ஆரம்பத்தில் வடமேற்கு எல்லைப் பகுதியில் ஷரீயத் ஆட்சி கேட்டுக் கிளம்பிய புரட்சியை அடக்க பாகிஸ்தான் ராணுவத்தின் கமாண்டராக இருந்தவர் மெஹசூத். இதற்காக, 'அமைதி வீரன்' என பாகிஸ்தான் அதிபரால் பாராட்டப்பட்டவர். பெனாசிர் புட்டோ, ஷரீயத் சட்டத்துக்கு எதிரானவர் என்பதால், அவரை மெஹசூத் கொலை செய்தார். அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த மலை சாதியினர்தான் மெஹசூத்தின் இருப்பிடத்தை அமெரிக்காவிடம் காட்டிக்கொடுத்தனர்!'' என பாகிஸ்தான் இணைய தளங்கள் கூறுகின்றன.

அடுத்து, மெஹசூத்தின் இடத்துக்கு யார் வருவது என போட்டியாகி... அந்த அமைப்பில் உள்ளவர்களே, ஒருவருக் கொருவர் சுட்டுக் கொண்டு சாக... யார் தலைவராக வந்தா லும் அவருக்கென ஆள் இல்லா மிசைலை ரெடியாக வைத்துக் காத்திருக்கிறது அமெரிக்கா!

- ஆர்.ஷஃபி முன்னா    
     
 
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு