Published:Updated:

'எங்க மதத்தை புண்படுத்தலாமா?'

'எங்க மதத்தை புண்படுத்தலாமா?'

சேரனுக்கு எதிராக முஸ்லிம்கள்...
'எங்க மதத்தை புண்படுத்தலாமா?'
'எங்க மதத்தை புண்படுத்தலாமா?'

பெங்களூரு 'மயோ ஹால்' கோர்ட் வளாகத்தில் இருந்த கடையில் தயிர் சாதமும், மிளகாய் பஜ்ஜியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் ராகவனும் சுதாவும். எப்போதுமே ஏ.சி. போட்டது போன்ற பெங்களூருவின் க்ளைமேட்டை ரசித்தபடி சாப்பிட்டுவிட்டு ராகவன் தன் வக்கீல் நண்பரை பார்க்கச் சென்றதும், சுதாவின் செல் சிணுங்க... எடுத்துப் பேச ஆரம்பித்தாள். அவள் செல்லை கட் பண்ணும்போது, சரியாக ராகவன் வந்து நின்றான்.

ஆரம்பித்தாள் சுதா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'எங்க மதத்தை புண்படுத்தலாமா?'

''சேலம் விநாயகா மிஷன் காலேஜ் சேர்மன் சண்முக சுந்தரம் தன் எழுபதாவது பிறந்த நாளை குதிரைகள், யானைகள்னு ஆடம்பரமா கொண்டாடினதைப் பத்தி

சொன்னேன் ஞாபகம் இருக்கா? அந்த விநாயகா மிஷன் நிறுவனத்துல இரண்டு நாளா தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிங்க ரெய்டு நடத்தியிருக்காங்க. விநாயகா மிஷன் நிறுவனம் எங்கெல்லாம் இருக்கோ... அத்தனை இடத்துலேயும் ஒரே டைம்ல ரெய்டு நடந்திருக்காம். ரெய்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி சேலம் லோக்கல் சேனலான பாலிமர் சேனல் ஆபீஸுக்கு வருமான வரித்துறை அதிகாரிங்க நுழைஞ் சிருக்காங்க. விநாயகா மிஷன் சேர்மன் சண்முகசுந்தரத்தோட ஆடம்பரப் பிறந்த நாள் விழாவை அவங்கதான் நேரடியா ஒளிபரப்பி னாங்களாம். பதிவு செய்யப்பட்டு இருந்த ஒட்டு மொத்த கேஸட்களையும் எடுத்துக்கிட் டவங்க, இது பத்தி வெளியில யாருகிட்டேயும் மூச்சு விடக்கூடாதுன்னு அந்த சேனல் தரப்புக்கு எச்சரிக்கையும் பண்ணிட்டுப் போயிருக்காங்க!''

''ஓ...''

''ஒட்டுமொத்த வீடியோவையும் பார்த்த வருமான வரித் துறை அதிகாரிங்க...

'எங்க மதத்தை புண்படுத்தலாமா?'

பிறந்தநாள் விழாவுக்கு ஆன செலவு எப்படியும் ரெண்டு கோடியைத் தாண்டும்ங் கிறதை உறுதிப்படுத்திக்கிட்டுதான் களத்துல குதிச்சதா சொல்றாங்க. 'இப்படி கோடிக் கணக்கில் செலவு பண்ணி பிறந்தநாள் கொண்டாடிய பணத்துக்கு என்ன கணக்கு..?'ன்னு விசாரணை நடந்ததாம். ரெண்டு நாள் சோதனைக்குப் பிறகு, சில ஆவணங்களையும் மதிப்புள்ள பொருட்களையும் வருமானவரித் துறையினர் அள்ளிக்கிட்டுப் போனதாவும் சொல்றாங்க!'' என்று சுதா சொல்ல...

''பொதுவா கல்வி நிறுவனம் நடத்துறவங்க எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அனுசரிச்சுப் போயிடுவாங்களே... அப்புறம் எப்படி?'' என்றான் ராகவன். ''விநாயகாமிஷன் அதிபர் இப்படி ஆடம்பர பிறந்தநாள் கொண்டாடினது ஆளுங்கட்சியைச் சேர்ந்த வி.ஐ.பி. ஒருத்தர் கண்ணை ரொம்பவே உறுத்திச்சாம். அது மட்டுமில்லாம, அந்த ஆளுங்கட்சி வி.ஐ.பி. இந்த வருஷம் புதுசா கட்டி முடிச்சிருக்கிற காலேஜ், விநாயகா மிஷன் பக்கத்துலேயே இருக்குதாம். இதனால அவரோட காலேஜுக்கு அட்மிஷன் ரொம்பவே குறைஞ்சிடுச்சாம். அந்தத் தகவல் ஆளுங்கட்சி வி.ஐ.பி-யை உறுத்திக்கிட்டு இருக்கிறப்பதான், வருமானவரித் துறை அதிகாரிங்க ரெய்டு நடத்தத் திட்டமிட்டிருக்காங்க. அதனால ரெய்டுக்கு 'கிரீன் சிக்னல்' காட்டியதே இந்த வி.ஐ.பி-தான்னு அரசியல் வட்டாரத்துல பேசிக்கிறாங்க!'' என்று சுதா தனக்கு வந்த தகவலை விளக்கமாகச் சொன்னாள்.

''அதானே பார்த்தேன்...'' என ராகவன் வியப்புகாட்ட, ''கோவை சட்டம்-ஒழுங்கு இன்ஸ் பெக்டர் ஒருத்தரைப் பத்தி ஒரு தகவல்...'' என்று அடுத்த விஷயத்துக்குத் தாவினாள் சுதா.

''கோவை நகர்ல அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் அதிகளவுல ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துறது, இவர் இன்ஸ்பெக்டரா இருக்கும் ஏரியா லிமிட்லதான். அரசு அதிகாரிங்க வீடுகளும் அங்கதான் அதிகமா இருக்குது. அங்க குற்றப்பிரிவுல பணியாற்றின நம்மாளு, சில மாசங்களுக்கு முன்னாடிதான் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு பணி மாறுதலாகி வந்திருக்கார். அவர் குற்றப்பிரிவுல பணியாற்றினப்போ... திருட்டு, கொள்ளை வழக்குல தொடர்புடையவங்களை வெளியில ரூம் போட்டுத்தான் விசாரிப்பாராம். அங்கேயே அவங்க கிட்ட இருந்து கறக்க வேண்டியதைக் கறந்துட்டு, மீதியைத் தான் டிபார்ட்மெண்டுக்கு கணக்குக் காட்டுவாராம். திருட்டு கார், பைக் பிடிபட்டுட்டா... முதல்ல நம்பர் பிளேட்டை அழிச்சிடுவாராம். யாராவது பைக் தொலைஞ்சு போனதா புகார் கொடுக்க வந்தா... 'உன்னோட பைக்கைக் கண்டுபிடிக்குறதுக்கு பல வருஷம் ஆயிடும். கிடைக்கும்போது எந்த நிலைமையில இருக்கும்னு சொல்ல முடியாது. இப்போதைக்கு கைவசம் ஒரு பைக் இருக்கு. ஒரு அமௌண்ட்டை வெட்டிட்டு, அந்த பைக்கை எடுத்துட்டு போ...'ன்னு நைஸா தள்ளி விட்டுடுவாராம். சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு வந்த பிறகும், குற்றப்பிரிவுல சில விவகாரங்கள்ல அவர் தலையிடவும்,இப்போ இந்த விஷயத்தையெல்லாம்மேலதிகாரிங்க கவனத் துக்குக் கொண்டுபோயிட்டாங்களாம் சில காக்கிகள்!'' என்று சுதா சொல்லி முடிக்க...

தான் பார்க்கப்போயிருந்த வக்கீல் மேட்டருக்கு வந்தான் ராகவன்.

''அந்த வக்கீல் சொன்ன விஷயம் பகீர் ரகம்ப்பா. போன வாரத்துல பெங்களூரு சிட்டிக்குள்ள இருக்கிற அல்சூரு ஏரியாவுல அஞ்சு வயசு கூட முழுசா முடியாத ரெண்டு குழந்தைகளை, அவங்க பேரண்ட்ஸ் வீட்டுல வச்சு பூட்டிட்டு, வேலைக்குப் போயிருக்காங்க. அந்த குழந் தைங்க சமையல் கேஸை எப்படியோ தவறுதலா பத்த வச்சு, அது வெடிச்சு பூட்டிய வீட்டுக்குள்ளேயே ரெண்டு குழந்தைகளும் கரிக்கட்டையாகிட்டாங்களாம். இவங்க மட்டுமில்ல... பெங்களூருல கணவனும் மனைவியும் வேலைக்குப் போற பல குடும்பங்கள்ல இன்னிக்கு இதே கதைதான் நடந்துட்டு இருக்காம்...'' என்று ராகவன் வேதனையோடு சொல்லிவிட்டு,

'எங்க மதத்தை புண்படுத்தலாமா?'

''சேரன் இயக்கி நடிச்சிருக்கும் 'பொக்கிஷம்' படக் காட்சிகள் முஸ்லிம் மதத்தைப் புண்படுத்துற மாதிரி அமைஞ்சிருக்கு'ன்னு, கோவை முஸ்லிம்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கு!'' என சினிமா பக்கம் போனான் ராகவன்.

''அந்தப் படத்தில... சேரன், பத்மப்ரியாவை காதலிக் கிறார். முஸ்லிம் மதத்தைச்

'எங்க மதத்தை புண்படுத்தலாமா?'

சேர்ந்த பெண்ணாக நடிக்கும் பத்மப்ரியா, காதலுக்காக சேரனை நினைத்து உருகி, அன்றாடத் தொழுகையை கடைப்பிடிக்காமல் விட்டு விடுவாராம். அதேபோல 'படக் காட்சிகளின்படி திருமணத்துக்கு முன்பாக பர்தாவுக்குரிய மரியாதையையும் பத்மப்ரியா காட்டலை' அப்படினும் சொல்றாங்களாம். இதெல்லாம் தங்கள் மத வழக்கங்களை கொச்சைப் படுத்தும் விதமாக சேரன் படமாக்கி இருக்கிறார். அது தவறு என்று கொதிக்கிறார்கள் முஸ்லிம்கள். அந்த காட்சிகளை சரி செய்யாவிட்டால் சேரனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவும் தீர்மானித்து இருக்கிறார்களாம் முஸ்லிம்கள் தரப்பில்!'' என முடித்தான் ராகவன்.