Published:Updated:

கச்சத் தீவில் விநாயகர் சதுர்த்தி...

கச்சத் தீவில் விநாயகர் சதுர்த்தி...

அரசுக்கு புதுக் குடைச்சல்!
கச்சத் தீவில் விநாயகர் சதுர்த்தி...
கச்சத் தீவில் விநாயகர் சதுர்த்தி...
கச்சத் தீவில் விநாயகர் சதுர்த்தி...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ழ விவகாரத்தைப் பற்றி வாய் கிழிய பேசிக் கொண் டிருந்த பலரும், தங்கள் வாயில் கொழுக்கட்டை வைத்தது போல் அமைதியாகிவிட... வரப்போகும் விநாயகர் சதுர்த்தியை ஈழ விநாயகர் சதுர்த்தியாக அறிவித்துக் கிளம்பி விட்டது, இந்து மக்கள் கட்சி.

வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'தமிழ் ஈழ விநாயகர்' என்ற பெயருடன் கூடியவிநாயகர் சிலைகளை நிறுவ திட்டமிட்டு வருகிறார்கள், இந்து மக்கள் கட்சியினர். ஈழத்து துயரங்களை 'சிம்பாலி'க் காக காட்ட, அந்த விநாயகரை கறுப்பு நிறத்தில் தயார் செய்து வைத்துள்ளனர். இது போதாதென்று விநாயகர் சதுர்த்தியன்று கச்சத் தீவுக்குச் சென்று, சதுர்த்தி விழா கொண்டாடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த ஐடியா பற்றி நம்மிடம் விளக்கிய இ.ம.க-வின் மாநில பொதுச் செயலாளரான அண்ணாதுரை, ''எங்க ளுக்கு இருக்கிற வேதனைக்கும், வெறிக்கும் இலங் கைக்கே நேரா போயி சிங்கள அரக்கனுங்க பிடியிலிருந்து நம்மவர்களை மீட்டுடுவோம். ஆனா, அதுக்கு முன்னாடி தமிழ்நாட்டுலேயே இருக்கிற தமிழின

துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்க 'வேண்டி'தான் இந்த தமிழ் ஈழ விநாயகரை மாநிலம் முழுக்க நிர்மாணிச்சு, பூஜை பண்ணப் போறோம். இலங்கை வதை முகாம்ல சிக்கி இன்னல் படுற தமிழ் மக்களை உடனடியா அதுல இருந்து மீட்டு, இந்தியா கொண்டு வர்றதுக்காக சிறப்பு யாகங்கள் நடத்தப் போறோம். ஈழத்துக்கு ஆதரவா குரல் கொடுத் தாலே கழுத்தை நெரிக்கிற தமிழக அரசு, இந்த சிலையை அமைக்குற விஷயத்துல ஏதாச்சும் சிக்கல் பண்ணினா நாங்க அடங்கி நிற்க மாட்டோம்!'' என்று காட்ட மானவர், தொடர்ந்து...

''ஈழப் பிரச்னைக்கு நிகரான விஷயம்தான் கச்சத் தீவை நாம இழந்து நிக்குறதும். 'இலங்கைக்கு அந்தத் தீவை விட்டுக் கொடுத்தது ஏன்?'னு கேள்வி கேட்டா, இதுவரை அரசாங்கத்துகிட்ட இருந்து விரிவான பதில் இல்லை. இருந்தாலும், நாம நம்மளுடைய உரிமையை விட்டுக் கொடுக்கலாமா? அதனால தான், கடந்த வருட சுதந்திர தினத்தன்னிக்கே கச்சத்தீவை நோக்கி ராமேஸ்வரத்துல இருந்து தேசியக் கொடியோட படகுல கிளம்ப தயாரானோம். ஆனா, எங்களுக்கு யாரும் படகு கொடுக்கக் கூடாதுன்னு மிரட்டுன அரசாங்கம், கடற்கரையில எங்களை கைதும் பண்ணிட்டாங்க. ஆனாலும், இந்த அடக்குமுறைக்கு நாம அஞ்சக்கூடாதுன்னு சொல்லிட்டு, இதோ... இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை கச்சத்தீவுல

கச்சத் தீவில் விநாயகர் சதுர்த்தி...

கொண்டாடத் தயாராகிட்டுஇருக்கோம். கச்சத்தீவுல, கோயில் விழாக்கள் நடத்தவும், மீனவர்கள் தங்களோட வலைகளை உலர்த்தவும் எந்த தடையுமில்லை. ஆக, நாங்க விழா நடத்தவும் எந்த தடையும் நியாயப்படி விதிக்கக் கூடாதுதான். ஆனாலும், தமிழக அரசாங்கம் எங்களை போக விடாம தடுக்கும். அப்போ வச்சுக்கிறோம், எங்க கச்சேரியை!'' என்றார் ஒரு முடிவோடு.

போலீஸ் தரப்பில் இதுபற்றி விசாரித்தால், ''கச்சத்தீவு என்பது இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச விவகாரம். பாதுகாப்பு விவகாரம் தொடர்பான இந்த சென்சிட்டிவ் மேட்டரில் ஏதோ 'பிக்னிக்' போவது போல் இவங்க ஏற்பாடு பண்றதெல்லாம் ரொம்பதப்பு. இந்த மாதிரியான போக்குகளை அரசாங்கம் கடுமையா கண்டிச்சுத் தடுக்கிறதோட, எச்சரிக் கையும் பண்ணும்... சட்டத்துக்கு விரோதமா யார் நடந்துகிட்டாலும் கடுமையா நடவடிக்கை எடுக்கப்படும்...'' என்கிறார்கள் கறார் குரலில்.

- எஸ்.ஷக்தி
படம் வி.ராஜேஷ்