Published:Updated:

தமிழக சட்ட முன்வடிவுக்கு எதிராக விவசாயிகள்!

தமிழக சட்ட முன்வடிவுக்கு எதிராக விவசாயிகள்!

தமிழக சட்ட முன்வடிவுக்கு எதிராக விவசாயிகள்!
'பட்டறிவால் சிதைந்து போகுமா விவசாயம்?'
தமிழக சட்ட முன்வடிவுக்கு எதிராக விவசாயிகள்!
தமிழக சட்ட முன்வடிவுக்கு எதிராக விவசாயிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக....' என்ற அறைகூவலுடன் வேளாண்மைத் துறையை முறைப்படுத்துவதாக, தமிழக அரசு நிறைவேற்றி யிருக்கும் 'தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்' என்ற சட்ட முன்வடிவு, தமிழக விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது!

அதென்ன.... 'தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்?'

'வேளாண்மைத் துறையில் பட்டப் படிப்பு முடித்த வர்கள் மட்டுமே இம்மன்றத்தில் உறுப்பினராகமுடியும். இவர்கள் மட்டுமே இனி தமிழகத்தில் வேளாண்மை

ஆலோசகராகவும், வேளாண்மைப் பணிகளையும் செய்ய முடியும். உறுப்பினரல்லாத யாரும் வேளாண்மைக் குறித்த ஆலோசனை மற்றும் பணிகள் செய்தால், அப ராதம், சிறைத் தண்டனை' என்று பயமுறுத்துவது தான் 'தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்.'

ஈரோடு மாவட்ட இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளரான அரச்சலூர் செல்வம் நம்மிடம், ''பாரம்பரிய விவசாயத்துக்கு எதிரான இந்த மசோதா சட்டமானால், தமிழ் நாட்டிலுள்ள விவசாய சங்கங்கள், பத்திரிகைகள்... என்று யாருமே வேளாண்மை குறித்த எந்தவொரு ஆலோசனையும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூற முடியாது. அவ்வளவு ஏன்... தங்களுடைய அனுபவத்தையும் அறிவுப் பரிமாற்றத்தையும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள விவசாயிகளைக்கூட இந்த சட்டம் தடுக்கிறது. ஆரோக்கியமான இந்தப் பட்டறிவை பாதுகாக்கும் வழிமுறைகளை விட்டுவிட்டு, தமிழக விவசாயத்தை ஒட்டு மொத்தமாக பன்னாட்டு கம்பெனி களிடம் அடகுவைக்கிற 'ரசாயன விவசாய'த்தை வளர்க்கும் வேலை யைத்தான் தமிழக அரசு இப்போது செய்துவருகிறது.

பசுமைப் புரட்சியைப் படித்து பட்டம் பெற்ற இந்த வேளாண்மன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகள் அனைத்தும் உரம், பூச்சி மருந்துகள் தயாரிக்கும் பன்னாட்டு கம்பெனிகளின் வளர்ச்சிக்குத்தான் உதவும். உணவில் நஞ்சை விதைக்கும் இந்த ரசாயன விவசாயத்தைவிட இயற்கை விவசாயம்தான் சிறந்தது என்பதை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால்தான், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு நிறைய நிதி உதவிகளும் செய்துவருகிறது. ஆனால், தமிழக அரசோ தனிப்பட்ட சில கம்பெனிகளின் லாபத்துக்காக இப்படியரு மோசடித் திட்டத்தைக் கொண்டுவந்து, 'இந்தியாவிலேயே முன்மாதிரியான திட்டத்தை கொண்டுவந்து வேளாண்மையை முறைப் படுத்தப் போகிறோம்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு சுழன்றடித்த சுனாமி அலைகளால் விவசாய நிலங்களில்

தமிழக சட்ட முன்வடிவுக்கு எதிராக விவசாயிகள்!

எல்லாம் கடல்நீர் புகுந்து அவை உவர் நிலங்களாகிப் போய்விட்டன. அந்த உவர் நிலங்களை மீண்டும் பயிர் செய்வதற்கேற்ற விவசாய நிலமாகப் பண்படுத்தும் யோசனையை இது வரையிலும் எந்த வேளாண் அதிகாரியும் சொல்லவில்லை. இயற்கை விவசாயிகளான நாங்கள்தான், 'உவர் நிலங்களில் 'சனப்பு' பயிரை தொடர்ச்சியாகப் பயிர் செய்து நிலத்தின் உப்புத்தன்மையைக் குறைக்கலாம்' என்ற பட்டறிவை எடுத்துக் கூறி, செழிக்கச் செய்தோம். ஆனால், வேளாண் துறையைச் சேர்ந்த வல்லுநர்களோ, 'சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலங்களில் இனி விவசாயமே செய்யமுடியாது' என்று அடித்துக்கூறி, ரியல் எஸ்டேட்காரர்கள் விவசாய நிலத்தை கூறுபோடத்தான் வழிவகுத்தார்கள்!'' என்று பொங்கினார் அவர்.

'வேளாண் மன்றம்' குறித்து வழக்கறிஞர் சுந்தரராஜன் பேசும்போது, ''வக்கீல்களைக் கட்டுப்படுத்தும் பார் கவுன்சில், மருத்துவர்களுக்கான மெடிக்கல் கவுன்சில் போன்று வேளாண் துறை பட்டதாரிகளின் தொழில், தகுதி, படிப்புகளைக் கட்டுப் படுத்துவது மாதிரியான மன்றங்களை அமைத்திருந்தால் வரவேற்கலாம். ஆனால், முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை ஒழித்துக் கட்டும் விதமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த வேளாண் மன்றம். 'சித்த மருத்துவர் ஆவதற்கு கட்டாயம் சித்தா பட்டம் பெற்றிருக்க வேண்டு மென்பதில்லை' என்று பாரம்பரிய மருத்துவத்தைக் காக்கும் விதமாக அறிவித்திருப்பதைப் போல, இயற்கை விவசாயத்துக்கெனவும் தனியான மன்றம் அமைத்திருக்கலாம். அதுமட்டுமின்றி, விவசாயத் துறைசார்ந்த அறிவும், ஈடுபாடும் அறவே யில்லாமல் படித்து பட்டம்பெற்று வருபவர்கள் விவசாய ஆலோசனை கொடுத்தால், எதிர்மறையான விளைவுகளைத்தான் தரும்!'' என்று எச்சரிக்கை மணியடித்தார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பட்டதாரிகள் சங்கச் செயலாளர் சுரேஷ் நம்மிடம், ''1960-களில் 'பசுமைப் புரட்சி', 1987-ல் 'நேரடி நெல் விதைப்பு' போன்ற உலக சாதனைகளை நிகழ்த்திக் காட்டியதில், வேளாண் பட்டதாரிகளின் பங்கு மகத்தானது. பெருகிவரும்

தமிழக சட்ட முன்வடிவுக்கு எதிராக விவசாயிகள்!

மக்கள்பெருக்கத்துக்கு நேர் மாறாக விளைச்சல் நிலங்களும், நீர்நிலைகளும் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டு வருகிறது. வருங்காலத்தில் ஏற்பட விருக்கும் உணவுத் தட்டுப்பாட்டை போக்குவதற்கான ஒரே வழி, நவீன வேளாண்மையோடு பாரம்பரிய விவசாயமும் கைகோக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் தான். அதற்கான முயற்சியில் முதல்படிதான் வேளாண் மன்றம்.

ஆனால், வேளாண் பட்டதாரிகளை பாரம்பரிய விவசாயத்துக்கு எதிரானவர்கள் என்பது போன்ற மாயையை உருவாக்குவது ஒருசிலருடைய வேலையாக இருக்கிறது. சில கம்பெனிகள் தங்களுடைய தனிப்பட்ட லாப நோக்கத்துக்காக தேவையே இல்லாத உரம், பூச்சி மருந்துகளை ஆலோசனை என்ற பெயரில் விவசாயிகளின் தலையில் கட்டி விடுகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் இதுபோன்ற தவறான ஆலோசனைகளால், விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் கடனாளியாகி தற்கொலை செய்துகொண்டனர்.

ஒவ்வொரு விவசாயியும் விஞ்ஞானிதான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், பட்டறிவும் படிப்பறிவும் இணையும்போதுதான் வேளாண்மைத் துறை பிரகாச மடையும்!'' என்றார் நெத்தியடியாக.

'சட்டமன்ற விவாதத்துக்குக்கூட விடாமல் அவசர அவசரமாக வேளாண் மன்றம் சட்ட மசோதாவை நிறை வேற்றக் காரணமென்ன?' என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் கேட்டோம்...

''வேளாண் மன்றம் ஏதோ திடீரென்று முளைத்துவந்த சட்டமல்ல. 1998-ல் நான் தமிழக வேளாண் அமைச்சராக இருந்த போதே, முதல்தர அடிப்படைக் குழுவை அமைப்பது சம்பந்தமான அரசு ஆணை வெளியிட்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட உறுப்பினர் குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தமிழ்நாடு முழுக்க உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், கட்சிப் பிரமுகர்கள், வேளாண் பட்டதாரிகள்... என அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்துதான் இந்த 'வேளாண் மன்ற' சட்ட முன்வடிவை அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதன்பின்னும் ஏறத்தாழ பத்தாண்டுகளாக இந்த சட்ட முன்வடிவு வேளாண்மைத்துறை, சட்டத்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுதான் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது. அதனால், அவசரம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இயற்கை விவசாயத்தை காக்கிறோம் என்ற பெயரில் சிலர் விவசாயிகள் மத்தியில் குழப்பம் விளைவித்து வருகிறார்கள். இயற்கை விவசாயம் செய்து மண் வளத்தைப் பாதுகாக்கும் விவசாயிக்கு முதல் பரிசாக ரூபாய் ஐம்பதாயிரம் வரையிலான பரிசுத்திட்டத்தையும் தமிழக அரசுதான் 0அறிவித்திருக்கிறது. அதனால், ரசாயன உரத்தைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று எந்த இடத்திலும் நாங்கள் விவசாயிகளைக் கட்டுப்படுத்தவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்றார்.

ஆனால், தமிழக அரசின் இந்த அவசரச் சட்டத்தினை திரும்பப் பெறக்கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்புவது, அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் சந்தித்துப் பேசுவது, பாதயாத்திரை செல்வது... என்று தொடர்ச் சியாக சூடு கிளப்பத் தயாராகிவிட்டன விவசாய சங்கங்கள்.

இதற்கெல்லாம் தமிழக அரசின் ரியாக்ஷன்....?

- த.கதிரவன்