பெரிய ஊர்கள் எல்லாம் அமைதியாக இருக்க 'மண்டை உடைப்பு,

. கைகலப்பு, வாகனங்கள் அடித்து நொறுக்கல்’ என ரகளையான ரணகளங்கள் நடந்து இருக்கிறது ஒரு கிராமத்தில். திருப்பூர் மாவட்டத்தின் மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட உடுக்கம்பாளையம்தான் அது! .
அ.தி.மு.க-வின் முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் சண்முகவேலுவும், இந்நாள் தி.மு.க. அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனும்தான் இங்கே வேட்பாளர்கள். தேர்தலில் மோதவேண்டியவர்கள் நிஜத்திலும் மோதியதால், ஊரே களேபரமாகிக் கிடக்கிறது.

பிரசாரம் முடிந்த கடந்த 11-ம் தேதி 8.45 மணிக்கு மேல் தி.மு.க. வேட்பாளர் சாமிநாதன், மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட உடுக்கம்பாளையம் ஊர்க்கவுண்டர் வீட்டில் ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்துள்ளார். இந்த விஷயம், அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவேலுக்குச் சென்றது. உடனே, தனது ஆதரவாளர்களுடன் வந்து அந்த வீட்டை முற்றுகையிட... முதலில் இரு தரப்பினருக்கும் வாய்த் தகராறு ஆரம்பித்து வாக்குவாதம் முற்றி... அடிதடி, மண்டை உடைப்பில் முடிந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் சண்முகவேலுவுக்கு மண்டை உடைந்தது. தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும் அடி. சாமிநாதன் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் வாகனங்கள் சேதமாகி இருக்கின்றன.

தலையில் ஆறு தையல் போட்டு வீடு திரும்பிய சண்முகவேலுவை அவரது சொந்த கிராமத்தில்

சந்தித்தபோது, நம்மிடம் சோர்வாகப் பேசினார். ''கடந்த 11-ம் தேதி பிரசாரம் முடிச்சுட்டு, ஜீவா நகர்ல உள்ள எங்க கட்சி ஆபீஸுக்குப் போயிருந்தேன். அங்கிருந்து மடத்துக்குளம் வந்தப்ப, எங்க ஆதரவாளர்கிட்ட இருந்து தொடர்ந்து எனக்கு போன் மேல போனா வந்துகொண்டே இருந்தது. 'தி.மு.க. வேட்பாளர் போலீஸ் ஆதரவோடு பல ஊர்களில் பணப்பட்டுவாடா பண்ணிட்டு

இருக்கார்’னு சொன்னாங்க. உடனே நான் அதுபத்தி டி.எஸ்.பி-கிட்டயும் தேர்தல் அதிகாரி செல்வராஜிடமும் சொன்னேன். ஆனா, எந்த நடவடிக்கையும் இல்லை.

அதன் பிறகுதான் என்னதான் நடக்குதுன்னு நேர்ல போயே தெரிஞ்சிக்கலாம்னு நான் கட்சிக்காரங்களோடு உடுக்கம்பாளையம் கிராமத்துக்குப் போனேன். அங்க ஊர்க்கவுண்டர் வீட்ல சுய உதவிக்குழுக்களச் சேர்ந்த பெண்களுக்குப் பணம் பட்டுவாடா பண்ணிட்டு இருந்தாரு, தி.மு.க. வேட்பாளர். அவர்கிட்ட நான், 'ஏன் இப்படி பண்றீங்க?’ன்னு நியாயமாத்தான் கேட்டேன். உடனே, கண்ட வார்த்தையும் பேசி, 'கொலை பண்ணிடுவேன்’னு மிரட்டினார்.

அதுனால எங்க ஆளுங்களுக்கும் அவங்க தரப்புக்கும் கைகலப்பு ஆயிடுச்சு. கரன்ட் வேற கட் பண்ணிட்டாங்க. நாங்க எங்க ஆளுகளோட அந்த வீட்டைச் சுத்தி வளைச்சுட்டு, தேர்தல் அதிகாரி, பறக்கும்படை எல்லோருக்கும் போன் போட்டோம். யாரும் வரலை. போலீஸ்காரங்களும் எங்களை வீட்டுக்குள்ள நுழையவிடாம, அவரோட பட்டுவாடாவுக்கு பாதுகாப்பா இருந்தாங்க. அந்த சூழ்நிலைலதான் அவங்க ஆளுக என் மண்டையில வீட்டுக் கூரையின் ஓட்டை வெச்சு, அடிச்சு ஒடைச்சுட்டாங்க. இன்னும் சிலருக்கும் அடி. உடனே ஆஸ்பத்திரிக்குப் போயிட்டோம். தேர்தல் அதிகாரிங்க அப்ப ஸ்பாட்டுக்கு வந்திருந்தா, இப்படி ஆகியிருக்காது. ஒரு வகையில, இந்த அராஜகத்தால் எங்களுக்கு நல்லதுதான். கண்டிப்பா எங்க கட்சிதான் ஜெயிக்கும்!'' என்றார் ஆவேசமாக.

தி.மு.க. வேட்பாளர் சாமிநாதனிடம் பேசியபோது, ''நாட்கள் மிகக் குறைவாக இருந்ததால், தொகுதி முழுக்க உள்ள பூத் கமிட்டிக்காரங்க, கட்சி உறுப்பினர்களை எல்லாம் பிரசாரத்துக்குப் பிறகு சந்திக்கிறேன்னு லெட்டர் போட்டிருந்தேன். அதுபடி அன்னிக்கு உடுக்கம்பாளையம் போனேன். அந்த ஊர் கிளைச் செயலாளர் வீடு பேச வசதியா இருக்கும்னு அங்கே கூப்பிட்டாங்க. அங்க போயி, சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தோம். மத்தபடி பணப் பட்டுவாடா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குப் பணம் குடுத்தோம்னு சொல்றது எல்லாம் சுத்தப் பொய். அப்ப, வீட்டுக்குள்ள இருந்த என்கிட்ட கும்பலா வந்தவங்க, அசிங்க அசிங்கமான கெட்ட வார்த்தையால திட்டினாங்க. நாங்க எதுவுமே பண்ணலை. அவுங்கதான் கரன்ட் கட் பண்ணிட்டு, என்னோட வண்டிகளையும், கூட்டணிக் கட்சிக்காரங்க வண்டிகளையும் கல்லால தாறுமாறா அடிச்சு நொறுக்கிட்டாங்க. முறைப்படி ஸ்டேஷன்ல புகார் குடுக்காம, கொலைவெறியோட எங்ககிட்ட மோத வந்தது அவுங்கதான்!'' என்றார் கொதிப்பாக.

உடுக்கம்பாளையம் ஊர்த் தலைவரான பரமசிவம் நம்மிடம், ''எங்க ஊரில் கட்சிப் பாகுபாடின்றி எல்லாரும் ஒண்ணாத்தான் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். கடந்த முப்பது வருடங்களாக ஒரு சின்னச் சண்டையோ... சச்சரவோ அரசியலை வைத்து எங்களுக்குள் வந்ததே கிடையாது. அப்படியிருக்கும் எங்கள் கிராமத்தில் இந்த நிகழ்வு நடந்தது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், அந்த இடத்தில் பணப் பட்டுவாடா நடந்தது என்று சொல்வது தவறான தகவல். ஆனால், பணம் குடுக்கத்தான் அங்கே அமைச்சர் வந்தார் என ஒரு தவறான தகவலை சட்டமன்ற உறுப்பினருக்கு சிலர் அனுப்பியதால்தான் இத்தனை பிரச்னையும் நடந்துவிட்டது!'' என்றார் கவலையாக.

நடந்த சம்பவம் குறித்து சண்முகவேலு, சாமிநாதன் இருவருமே கோமங்களம் காவல் நிலையத்தில் புகார் தர... வழக்குப்பதிவு செய்திருக்கிறது காவல் துறை.

- வீ.ஜெ.சுரேஷ்

படங்கள்: வீ.சிவக்குமார்