Published:Updated:

தாவூத் இப்ராகிம் பாக்.கில் இருப்பதற்கான ஆதாரம் வெளியீடு!

தாவூத் இப்ராகிம் பாக்.கில் இருப்பதற்கான ஆதாரம் வெளியீடு!
தாவூத் இப்ராகிம் பாக்.கில் இருப்பதற்கான ஆதாரம் வெளியீடு!

தாவூத் இப்ராகிம் பாக்.கில் இருப்பதற்கான ஆதாரம் வெளியீடு!

தாவூத் இப்ராகிம் பாக்.கில் இருப்பதற்கான ஆதாரம் வெளியீடு!

புதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதற்கான ஆதாரம் வெளியாகி இருப்பதால், அவனை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் 350 பேர் பலியாகினர். 1,200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சதி திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக இந்தியா பாகிஸ்தானிடம் கூறியது. மேலும், அதற்கான ஆதாரங்களையும் வழங்கி, அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை பாகிஸ்தானை கேட்டு வருகிறது. ஆனால், பாகிஸ்தான் தாவூத் இப்ராகிமை ஒப்படைக்க மறுத்து வருகிறது. அவன் பாகிஸ்தானில் இல்லை எனக் அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

இந்நிலையில், தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசித்து வருவதற்கான ஆதாரம் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் வசம் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று ஆதாரமாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், தாவூத் இப்ராகிமின் பெயரில் உள்ள வீட்டுக்கு வரும் தொலைபேசியின் பில்கள், தாவூத் தனது குடும்பத்தாருடன் துபாய்க்கி சென்று வந்த விமான முன்பதிவு, விமான டிக்கெட் போன்றவற்றை ஆதாரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கூறுகையில், ''தாவூத் இப்ராகிம் எங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் மறுத்து வருகிறது. ஆனால், தற்போது, அவன் கராச்சியில் தங்கியிருப்பதற்காக ஆதாரங்களை நாங்கள் அளித்துள்ளோம்.

இதன் பிறகாவது தாவூத் இப்ராகிமை பாகிஸ்தான் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு