வனம் நிறைந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகம்.

. அதிலும், கோடை காலங்களில் வனப் பகுதியை ஒட்டியிருக்கும் ஊர்களுக்குக் கட்டாயம் யானைகள் உலா வரும். சர்வசாதாரணமாக ஊருக்குள் நுழையும் யானைகள், சில நேரங்களில் பொதுமக்களின் உயிருக்கும் சேதம் விளைவித்துவிடுகின்றன. அந்த வகையில், கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் மூன்று பேர் யானைகளால் தாக்கப்பட்டு உயிர் இழந்தனர். இதனால், பதற்றத்தில் இருக்கிறார்கள் மக்கள். .
முதல் சம்பவம், கடந்த மார்ச் 27-ம் தேதி நடந்தது. நாரலப்பள்ளி காப்புக் காட்டில் சுற்றித் திரிந்த

யானைக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குருபரப்பள்ளி கிராமத்துக்குள் நுழைந்தன. மாந்தோப்பில் இருந்த ஒரு குடிசையை சூறையாட ஆரம்பித்தன. அந்த குடிசையில் கெஞ்சப்பன், அவரது மனைவி மற்றும் பேரன் நரசிம்மனுடன் காவல் பணிக்காகத் தங்கி இருந்தார். யானைகளின் ஆவேசத் தாக்குதலில் கெஞ்சப்பனின் மனைவி மட்டும் அதிர்ஷ்டவசமாகத் தப்பிவிட... பேரனையும், தாத்தாவையும் மிதித்துக் கொன்றுபோட்டது யானைக் கூட்டம்.

அடுத்து கடந்த 11-ம் தேதி காரிமங்கலம் அருகே பெரியமுக்குலம் என்ற கிராம மாந்தோப்புகளில் புகுந்த இரண்டு யானைகளை ஊர் மக்கள், கூட்டமாகச் சென்று விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் சிலர் விபரீதம் எதுவும் புரியாமல், ஆர்வக் கோளாறு காரணமாக யானைகளை செல்போன் மூலம் போட்டோ எடுத்துள்ளனர். யானைகள் திடீரென ஆவேசமானதும் சிதறிய நெல்லிக்காய் மூட்டையாக அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கம் தெறித்து ஓட, எலெக்ட்ரீஷியன் சக்திவேல் என்பவர் மட்டும் அருகில் இருந்த தேக்கு மரத்தில் ஏறிப் பதுங்கி இருக்கிறார். உடனே பின்புறம் வந்த ஒரு யானை, அந்த மரத்தை வேரோடு சாய்த்து தூக்கி வீசியது. அதனால் படுகாயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், பலனின்றி இறந்துவிட்டார்.

இந்தச் சம்பவங்கள் குறித்து 'பீப்பிள்ஸ் வாட்ச்’ அமைப்பின் சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளரான செந்தில்ராஜா நம்மிடம் பேசினார். ''கர்நாடகாவில் காட்டுக்குள் இருந்து இறங்கி வரும் யானைக் கூட்டத்தை தடுத்து நிறுத்த, பெரிய அகழிகளைத் தோண்டிவைத்து இருக்கிறார்கள். அந்த அகழிகளின் மறுபுறக் கரையை உயரமான கான்க்ரீட் சுவரால் பலப்படுத்தி இருக்கிறார்கள். அதனால், யானைகள் அகழிக்குள் இறங்கினாலும் மீண்டும் காட்டுக்குள்தான் திரும்பியாக வேண்டும். விவசாய நிலத்திலும், ஊருக்குள்ளும் எளிதாக நுழைந்துவிட முடியாது. அது மாதிரியான தொழில்நுட்பத்தை இங்கேயும் கொண்டுவந்தால்தான் வனப் பகுதி கிராம மக்கள் நிம்மதியாகத் தூங்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இது குறித்து அத்தனை அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை. இனியாவது கர்நாடகாவைப் பின்பற்றி யானைகளால் உயிர்ச் சேதம் நிகழாதபடி தடுப்பார்களா?'' என்று கேள்வி எழுப்பினார்.

யானைகளின் பாதையை மீட்டுத்தர நீதிமன்றம் இருக்கிறது. மக்களின் உயிரைப் பாதுகாக்க அரசு இருக்கிறதா?

- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்செல்வன்