அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கிய அசன் அலி கான்

. விவகாரம் அங்கே சுற்றி... இங்கே சுற்றி இப்போது புதுச்சேரி கவர்னர் மாளிகைக் கதவையும் தட்டிவிட்டது! .
மகாராஷ்டிரா மாநிலம் பூனாவைச் சேர்ந்த குதிரைப் பண்ணை முதலாளி அசன் அலி கான் மீது, அந்நிய செலாவணி மோசடி, ஆயுதம் கடத்தல், போதை மருந்துக் கடத்தல், ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட் வைத்திருந்தது என்று பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகின்றன. இதில் அசன் அலிக்கு பாஸ்போர்ட் பெற உதவியதாக, அமலாக்கப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருக்கிறார், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்!

1992-98-ல் பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டார், புதுவையின்

இப்போதைய கவர்னர் இக்பால் சிங். அந்தக் காலகட்டத்தில்தான் இவர், அசன் அலிக்கு பாஸ்போர்ட் எடுக்க உதவி இருக்கிறார். 1997-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஐ.கே.குஜ்ரால் அலுவலகத்துக்கு அசன் அலியின் பாஸ்போர்ட் அப்ளிகேஷனைப் பரிந்துரை செய்து இவர் அனுப்பினார். அதை ஏற்று, வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரே வாரத்தில் ஏ.கான் என்னும் பெயருக்கு பாஸ்போர்ட் அளித்தது.

இதைத் தங்கள் விசாரணையில் தெரிந்துகொண்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங்கை விசாரிக்க, ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பணியில் தீவிரமாக இருந்த அரசியல் கட்சிகள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, தேர்தல் பரபரப்பையும் தாண்டி இதைக் கையில் எடுத்தது. பத்திரிகையாளர் சந்திப்பு, அறிக்கைகள், போராட்ட அறிவிப்புகள் எனத் தேர்தல் சூட்டையும் தாண்டி அனல் கிளப்பியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி செயலாளர் வி.பெருமாள் இது குறித்துப் பேசினார். ''ஆயுதம் கடத்தல், போதை மருந்து கடத்தல், வெளிநாட்டு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகள் வைத்திருந்ததுபோன்ற பல்வேறு தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டவர் அசன் அலி கான். இப்படிப்பட்டவருக்கு, ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் வழங்க வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்தவர்தான்

இந்த இக்பால் சிங். பரிந்துரைத்ததோடு மட்டும் அல்ல... அந்த பாஸ்போர்ட்டை அலுவலகத்தில் இருந்து வாங்கும்போது, பெற்றுக்கொண்டதற்கான கையெழுத்துப் போட்டவர் யார் தெரியுமா? இக்பால் சிங்கின் அன்றைய பாதுகாப்பு அதிகாரி அசோக்குமார்!

இதுபோன்று தவறான உதவிகளைச் செய்தவருக்கு துணை ஆளுநர் பதவி அளித்து, கௌரவம் கொடுத்து உள்ளது காங்கிரஸ் கட்சி மேலிடம்.

இங்கு வந்த பின்பும் இக்பால் சிங் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. தன் உறவினர் பெயரில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளார். ஏற்கெனவே புதுச்சேரியில் எட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருக்கும்போது, இவரும் துவங்க உள்ளார். இதற்கான அனுமதி எந்தத் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதும் கேள்விக்குறிதான்! இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இக்பால் சிங்கை, மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்!'' என்றார் கொதிப்பாக.

கவர்னர் மீதான குற்றச்சாட்டு புதுச்சேரி முழுவதும் பரபரப்பாகி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களின் போராட்ட அறிவிப்புகளின் மூலம் பிரச்னையின் தீவிரம் அதிகமான நிலையில், கவர்னர் இக்பால் சிங் 13-ம் தேதி வாக்களித்துவிட்டு, உடனே டெல்லி புறப்பட்டுவிட்டார். 'ஏன் இப்படி அவசரமாக டெல்லி போகிறார்?’ என்பதும் சர்ச்சையானது. பிறகு, கடந்த 16-ம் தேதி, கவர்னரின் நெருங்கிய உறவினரும் கவர்னரின் ஸ்பெஷல் டியூட்டி ஆபீஸருமான ஜே.பி.சிங், பத்திரிகையாளர்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்து, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்ற ஓர் அறிக்கையைப் படித்தார். ''கவர்னர் இக்பால் சிங் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, 1997-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்களில் ஒருவரும், மூத்த தலைவருமான அமலன்டு பாண்டே, பெயர் நிரப்பப்படாத ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தைக் கொடுத்து, 'எனது நெருங்கிய நண்பர் மருத்துவ விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால், உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’ எனக் கேட்டார். அதை இக்பால் சிங் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பினார். அந்த விண்ணப்பத்தில் பெயர் குறிப்பிடாமல் இருந்ததால், அந்த பாஸ்போர்ட் குறித்து அதற்கு மேல் அவருக்கு எந்த விஷயமும் தெரியாது. இக்பால் சிங்கின் பாதுகாப்பு அதிகாரி என்ற பெயரில் யாரோ ஆள் மாறாட்டம் செய்து கையெழுத்திட்டு, அந்த பாஸ்போர்ட்டை அலுவலகத்தில் இருந்து பெற்றுள்ளனர். மேலும் கவர்னரை விசாரணைக்கு அழைக்க எந்த அமைப்புக்கும் அதிகாரம் இல்லை. விசாரணைக்கு அழைக்கவும் இல்லை. இக்பால் சிங் டெல்லி சென்றுள்ளது முழுக்க முழுக்க அலுவல் சம்பந்தமான காரணமே!'' என்றது அவர் வாசித்த அறிக்கை. ஆனால், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் முன்னே இடத்தைக் காலி செய்துவிட்டார் அவர்!

எப்போது வேண்டுமானாலும் இக்பால் சிங் மாற்றப்படலாம்!

- டி.கலைச்செல்வன், படங்கள்: ஜெ.முருகன்