பணம்... பதவி... பலி!

சின்னாபின்னமான சேரன்!

ஆளுங்கட்சியின் ஒரு பதவியைப் பிடிக்கசினிமா வையும் மிஞ்சும் பழிவாங்கும் படலம் தலைநகரில் நடந்தேறியிருக்கிறது. அதுவும் முதல்வரின் சேப்பாக்கம் தொகுதியை ஒட்டியிருக்கும் திருவல்லிக் கேணி தொகுதிக்குள்! சென்னை மாநகராட்சி 93-வது தி.மு.க. வார்டு கவுன்சிலர் சேரன். இவர் கடந்த 27-ம் தேதி காலை 9.30 மணிக்கு, தன் வார்டு அலுவலகத்திலேயே கொல்லப்பட... இதன் பின்னணிதான் சென்னை தி.மு.க-வினரை உலுக்கிக் கொண்டிருக்கிறது!

''திருவல்லிக்கேணி பகுதி முக்கிய தி.மு.க. புள்ளி ஒருவரின் வலதுகரமாக சேரன் உலா வருவார். இவர்களுடன் கிருஷ்ணாம்பேட்டை பகுதி பிரமுகர் ஒருவரும் இருப்பார். பிரச்னைக் குரிய நில விவகாரங்களில் அதிரடியாக மூக்கை நுழைத்து, அதன் மூலம் ஆதாயம் பார்ப்பது இந்த மூவர் கூட்டணியின்

மெயின் பிசினஸ்! சில மாதங்களுக்கு முன் ராயப்பேட்டை பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்துக்கு போலிப் பத்திரம் தயார் செய்ததாம் இந்தக் கூட்டணி. அதை விற்க முயற்சித்தபோது, 'எனக்கும் பங்கு வேணும்' என திடுதிப் பென குதித்தாராம், அதே ஏரியாவின் வட்டாரப் பொறுப்பில் இருந்த புள்ளி ஒருவர். இதில் கடுப்பான மூவர் கூட்டணி, வட்டாரப் பொறுப்பாளரைக் கடத்திக் கொண்டு போய் கத்தி முனையில் மிரட்ட... திகிலடித்த இதயத்தோடு வீடு திரும்பிய அவர், அதன்பின் ஹார்ட் அட்டாக்கில் இறந்தேவிட்டார்!'' என்று ஒரு க்ரைம் வரலாறு சொல்லும் ஏரியா புள்ளிகள் சிலர்,

''இறந்துபோனவரின் மகன் சீறியெழுந்தார். 'எங்க அப்பா சாவுக்குக் காரணமான உங்களை சும்மா விடமாட்டேன்' என்று நேருக்கு நேராகவே சபதம் போட்டார். உடனே அவருக்கு, 'கட்சில உங்க அப்பா இருந்த இடத்துல உன்னை உட்கார வைக்கிறோம்' என்று ஆசை காட்டி அடக்கியது அந்த மூவர் கூட்டணி. போதாக்குறைக்கு அந்த மகனிடமே ஐந்து லட்ச ரூபாய் பணமும் கறந்துவிட்டது. ஆனால், அந்தப் பொறுப்பில் சேரனின் உறவினர் ஒருவரை உட்கார வைத்துவிட்டார்கள். 'தந்தையும் போய், பணமும் போய்விட்டதே' என விரக்தியுடன் நியாயம் கேட்கப் போயிருக்கிறார் மகன். மூவர் கூட்டணியோ, இன்னொரு கட்சிப் பொறுப்பைக் கொடுப்பதாக மீண்டும் வசூல் வேட்டை நடத்தியது. ஆனால், அந்தப் பதவியையும் அந்தக் கூட்டணி கொடுக்கவில்லை.

'குடுத்த பணத்தையாவது திருப்பி கொடுங்க' என கேட்டதற்கும் பதில் இல்லையாம். ஒரு கட்டத்தில் வெறுப்பின் உச்சத் துக்குப்போன மைந்தன், தன் கூட்டாளி களுடன் கலந்து பேசி, 'மூவர் கூட்டணியை முறித்தாக வேண்டும்' என சபதம் பூண்டார்.

திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க. முக்கியப் புள்ளியும், கவுன்சிலர் சேரனும் தினமும் காலையில் வாக்கிங் போவார்கள். அதுவே சரியான தருணம் என முடிவுசெய்து, கடந்த 27-ம் தேதி காலையில் மெரீனா கடற்கரையில் பதுங்கி இருந்தனர் பாதிக்கப்பட்ட மகனின் ஆட்கள். ஆனால், அன்று இருவருமே வாக்கிங் வராமல் போக... காத்திருந்தவர்களுக்கு, 'கவுன்சிலர் சேரன், அலுவலகத்தில் இருக்கிறார்' என்ற தகவல் எட்டு மணிக்கு கிடைத்திருக்கிறது. உடனே, ராயப்பேட்டை பாலாஜி நகரில் இருக்கும் சேரனின் அலுவலகத்துக்கே போன கொலைக் கும்பல், அவரை துள்ளத் துடிக்க வெட்டிச் சாய்த்திருக்கிறது!'' என்று கூறி முடித்தார் கள்.

இதற்கிடையே, முதல்வரை மிக நெருக்கத்தில் பார்த்துப் பழகக்கூடிய முக்கியமான ஒருவரின் அன்பை யும் சேரன் எப்படியோ பெற்றிருந்ததாகக் கூறும் சிலர், ''அந்த தைரியமும் சேர்ந்துகொள்ளவேதான் சேரன் பயப்படாமல் பலரையும் தொடர்ந்து பகைத்துக் கொண்டார். கடைசியில் அதுவே அவர் உயிரைப் பறித்துவிட்டது'' என்கிறார்கள். சேரனின் கொலையைக் கேள்விப்பட்டதுமே 'அடுத்த டார்க்கெட் நான்தானா?' என்று அந்த திருவல்லிக்கேணி தி.மு.க. முக்கியப் புள்ளி, வீட்டில் வியர்த்துக் கிடக்கிறாராம்.

மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையர் பெரியய்யா விடம் பேசினோம். ''கொலைக்கான காரணம், நில விவகாரமா அல்லது கட்சி பதவி வாங்குவதில் ஏற்பட்ட மோதலா என்பதெல்லாம் விசாரித்து வருகிறோம். கூடிய சீக்கிரம் குற்றவாளிகளைப் பிடிக்கும்போது முழு உண்மைகள் தெரியும்'' என்றார்.

தெரியுமா? தெரிந்தாலும், போலீஸால் அதை வெளியே தெரிவிக்க முடியுமா?

- தி.கோபி விஜய்