சொத்தை அபகரிக்க மிரட்டினாரா தி.மு.க. மா.செ.?

நீ திருப்பரங்குன்றத்துலயே இருக்கக் கூடாது!

''மதுரை மாநகர தி.மு.க செயலாளர் தளபதி, மு.க.அழகிரியுடன் தனக்கு இருக்கும் நெருக்கத் தைப் பயன்படுத்தி எனது சொத்துகளை அபக ரிக்க முயற்சி செய்கிறார். 'மரியாதையா எல்லா சொத் துகளையும் எழுதிக் கொடுத்துட்டு... ஊரைக் காலி பண்ணிட்டு ஓடிப் போ... இல்லேனா உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைச்சுப்புடுவேன்'னு மிரட்டுகிறார். உயிருக்கு பயந்து நானும் என் குடும்ப மும் ஊர்ஊரா தலைமறைவாக ஓடிக்கொண்டு இருக்கிறோம்...'' - நமது ஆக்ஷன் செல்லுக்கு இப்படி ஒரு கதறல் போன்கால் வரவும்... 'இது என்ன மதுரைக்கு மறுபடி வந்த சோதனை' என்று விசாரணையில் இறங்கினோம்!

திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர், கந்தசாமி என்ற சேகர். ஸ்டீல், சிமென்ட் மொத்த வியாபாரம், அடகுக் கடை என இவருக்குப் பல பிசினஸ்கள். மனைவி மக்களோடு சந்தோஷமாக வாழ்ந்தவருக்கு, தொழிலில் திடீர் சறுக்கல். அதை சரிசெய்ய நிறைய பேரிடம் கடன் வாங்கினார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள், ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுத் தனர். இன்னொரு பக்கம், சுமார் ஒன்றரைக் கோடி

பெறுமானம் உள்ள கடையையும் வீட்டையும் வளைக் கும் நோக்கில் ஆளும் கட்சிப் புள்ளிகள் சிலரும் சேர்ந்து முயற்சிக்க... ஏறக்குறைய மூன்று மாதமாகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் சேகர்.

தேடிப் பிடித்து தகவல் கொடுத்ததும், நம்மைத் தேடி நெல்லை ஏரியாவுக்கு வந்து சேர்ந்தார் சேகர். ''தொழிலில் கொஞ்சம் நஷ்டம் வந்ததால் கடன் கொடுத்தவங்க என்னை நெருக்குனாங்க. ஏன் இப்படி செய்யுறாங்கன்னு விசாரிச்சப்ப, 'தி.மு.க-வின் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி, உங்க சொத்து களை எல்லாம் வாங்கப் போறதா சொல்றார். எல்லாத் தையும் வித்துட்டீங்கன்னா, எங்க பணத்துக்கு என்ன பொறுப்பு?'ன்னு கேட்டாங்க. அப்பத்தான் எனக்கு இந்த வில்லங்கத்தின் பின்னணியே புரிஞ்சுது. 'அப்படி எல்லாம் நான் யாருக்கும் சொத்துகளை கொடுக்கறதா இல்லை'னு சொல்லிட்டுத் தொழிலை கவனிச்சேன்.

யூனியன் பேங்க் கடனுக்காக என் வீடு ஏலத்துக்கு வந்தப்ப, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த வீட்டை என் ஃபிரெண்ட்ஸ் சிலரே நியாயமான விலைக்கு வாங்க வந்தாங்க. அவங்களை வாங்கவிடக் கூடாது என்பதற்காக தளபதியோட

ஆட்கள், அதிகாரிகளைச் சரிக்கட்டி 'ஏலம் கேட்க யாருமே வரலை'ன்னு சொல்ல வச்சு, ஏலத்தை நிறுத்திட்டாங்க. வங்கியின் தலைமை அலுவலகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இது பற்றி புகார் அனுப்பியிருக்கேன்...'' என்று குமுறிப் பெருமூச்சு விட்டவர், தொடர்ந்து...

''அதன் பின்னர் தளபதியின் உறவினர் ஒருவர் என்னை சந்தித்து, ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள வீட்டையும் பிசினஸ் காம்ப்ளெக்ஸையும் 45 லட்சத்துக் குக் கேட்டார். நான் ஒப்புக்கலை. உடனே பிசினஸை முடக்கும் நோக்கோடு... தினந் தோறும் கடன்காரங்களை என் வீட்டுக்கு அனுப்பினாங்க. மார்ச் 22-ம் தேதி அதி காலையில் 'திமுதிமு'ன்னு 10 பேர் வீட்டுக் குள் வந்தாங்க. 'தளபதி அண்ணன் உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னார்'னு இழுத்துட்டுப் போகாத குறையா என்னை காரில் தூக்கி போட்டுட்டுப் போனாங்க. தளபதி என்னைப் பார்த்ததும், 'வாங்குன கடனைத் திருப்பிக் கொடுக்க வக்கில் லாம என்னடா பிசினஸ் செய்ற? உன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸையும் வீட்டையும் வித்துட்டு ஒழுங்கு மரியாதையா ஊரைக் காலி பண்ணிட்டு ஓடிடு. நீ திருப்பரங்குன்றத்துலேயே இருக்கக்கூடாது'ன்னு மிரட்டினார். 'நான் அழகிரி அண்ணனிடம் புகார் செய்வேன்'னு சொன்னதுக்கு, 'அண்ணனுக்கு எல்லாம் தெரியும். உன்னால் எதுவும் செய்ய முடியாது. ரொம்பப் பேசினா கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிருவேன்'னு சொன்னார்.

'இப்படி நெருக்கடி கொடுத்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'ன்னு கெஞ்சியும்... மனமிரங்காமல், 'தற்கொலை செய்யணும்னா செஞ்சுக்கோ. வேணும்னா அதுக்கு நான்தான் காரணம்னு எழுதிக் கையெ ழுத்துப் போட்டுக் கொடுக்கட்டா?'ன்னு அதட் டலாகக் கேட்டார். இடையிடையே யார் யாரோ ரவுடிகளுக்கு போன் போட்டு, 'இவனைப் போட்டுத் தள்ளிருங்கடா'ன்னு சொன்னார். நான் உயிருக்கு பயந்து, அங்கிருந்து தப்பினால் போதும்னு வீடு வந்து சேர்ந்தேன்.

இதை எல்லாம் விரிவா எழுதி அழகிரி அண்ணனுக்கு 10 இ-மெயில் போட்டேன்.

அதுக்கு ரெஸ்பான்ஸ் இல்லாததால், மனைவியையும் குழந்தைகளையும் தனித்தனி இடங்களில் ஒளிச்சு வெச்சுட்டு நானும் ஊர்ஊரா திரியறேன். தளபதி ஆட்கள் என்னைத் தேடிட்டு இருப்பதால் எந்த நேரத்திலும் என் உயிர் போகலாம்...'' என்று விம்மினார்.

இந்த பகீர் குற்றச்சாட்டு பற்றி தளபதி யிடம் கேட்டதற்கு, ''அந்த ஆள் சுத்த ஃபிராடுங்க. அவனை நம்பி நிறைய பேர் ஏமாந்திருக்காங்க. யூனியன் பேங்க் மேனேஜர் ஒருத்தருக்கு எப்படியோ இந்த சேகர் பழக்கமாகி இருக்கான். நல்லவன் மாதிரி நடிச்சு, அவருக்கு வீடு கட்ட சிமென்ட் கொடுத்திருக்கான். அதை நம்பி அவர் ஏமாந்த சமயம் பார்த்து, 'எனக்கு அவசரமா 30 லட்சம் தேவைப்படுது. அந்தத் தொகை இருந்தால் நிறைய லாபம் சம்பாதிக்க முடியும்'னு சொன்னான். இவன் மேல் பரிதாபப்பட்ட அந்த மேனேஜர், இன்னொரு ஆள் போட்டிருந்த ஒன்றரை கோடி ரூபாய் டெபாசிட்டை கேரண்டியாகக் காட்டி, பேங்கில் இருந்து 30 லட்சம் தந்திருக்கார். அதை இன்னிக்கு வரைக்கும் கொடுக்காததால் மேனேஜர் மீது மோசடி வழக்குத் தொடரப்பட்டு, வேலையே போயிருச்சு. இதே மாதிரி பேங்குக்கு வந்த ஒரு இளம் தம்பதிகிட்ட பழக்கம் பிடிச்சு, '30 லட்சம் கொடுத் தால் பேங்க் லோனை அட்ஜஸ்ட் செஞ்சுட்டு, 10 நாளில் வட்டியோடு உங்களுக்குத் திருப்பி தந்துட றேன்'னு வாங்கி இருக்கான். அதையும் இதுவரை கொடுக்கலை.

இதுமாதிரி ஏகப்பட்ட பேர்கிட்ட ஏமாத்தி இருக்கான். அஞ்சு பேங்குகளில் கடன் வாங்கி இருக் கான். கடன் கொடுத்த சிலர் என்னிடம் வந்து முறையிட்டதால், அவனைக் கூட்டிவந்து சமரசம் பேசினேன். ஆனா, மிரட்டவில்லை. பிளான் பண்ணி இப்படி எல்லாரையும் ஏமாத்திட்டு ஊரைக் காலி செஞ்சுட்டு ஓடிட்டான். விசாரிச்சுப் பார்த்ததில், அவன் ராஜபாளையத்தில் ஏதோ ஃபேக்டரி கட் டிட்டு இருக்கறதா சொல்றாங்க. சொல்லிக்கிற மாதிரி அவன்கிட்ட எந்தச் சொத்தும் இல்லைங்க. பாவமேனு பஞ்சாயத்துப் பேசிய என்னையே குத்தம் சொல்றான்னா நான் என்னத்த சொல்ல..!?'' என்றார்.

'கட்டப் பஞ்சாயத்து செய்தார்கள்' என்று அவ் வப்போது போலீஸ் சிலரைக் கைது செய்கிறது. அப்போ தெல்லாம், 'போலீஸ் ஒழுங்காக பிரச்னைகளை விசாரித்துத் தீர்த்தால் நாங்கள் ஏன் கட்டப் பஞ் சாயத்து ஆசாமிகளிடம் போகிறோம்?' என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்வதையும் கேட்க முடிகிறது!

இந்த விவகாரம் எதில் சேர்த்தி?

- ஆண்டனிராஜ்
படங்கள் எல்.ராஜேந்திரன்