Published:Updated:

அழகர் சரிந்ததால் ஆபத்து?

திகில் கிளப்பும் சிவசேனா

அழகர் சரிந்ததால் ஆபத்து?

திகில் கிளப்பும் சிவசேனா

Published:Updated:

ச்சைப் பட்டு உடுத்தி அழகர் வைகை ஆற்றில் இறங்கினால், மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள் என்பது ஐதீகம்! 

கடந்த 18-ம் தேதி காலை 6.45 மணிக்கு வைகையில் இறங்கிவிட்டு வண்டியூர் நோக்கிப்

##~##
புறப்பட்டவர், 19-ம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக, சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்துக்கு வந்தார்.அங்கு இருந்து கருட வாகனத்தில் கிளம்பி முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்த பிறகு கிளம்பிய அழகரை, பல்லக்கில் சுமந்துவரும் சீர்பாதங்களின் கவனக்குறைவால் அழகரும் அதில் நின்ற அம்பி பட்டரும் கீழே சரிந்தார்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பக்தர்கள் பதறிப்போனார்கள்.

'பணம் கொடுத்தால், தனியார் மண்டகப்படி மண்டபங்​களில் அழகரை அதிக நேரம் இருக்கவைக்கிறார்கள். அழகர் மதுரைக்கு வரும் சப்பரத்தில், டிராயர் தெரிய வேஷ்டியைக் கட்டிக்கொண்டு அநாகரிகமாக உட்கார்ந்து இருக்கிறார்கள்’ என்று கடந்த ஆண்டே மதுரை உயர்

அழகர் சரிந்ததால் ஆபத்து?

நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர் சிவசேனா கட்சியின் மாநிலத் தலைவர் திரவிய பாண்டியன். ''இந்துக் கோயில்களுக்குள் மாற்று மதத்தினர் செல்ல அனுமதி இல்லை. ஆனால், அழகர் கோயில் கோபுரத்துக்கு தங்கத் தகடு பதிக்கும் பணியை முஸ்லிம் ஒருவருக்குக் கொடுத்தார்கள். அழகருக்காக செய்யப்பட்ட குதிரை வாகனத்தின் கண் சாந்தமாக இல்லை. இரவு 12 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் சாத்தான் அலையும் நேரம் என்பதால், அப்போது தமிழகத்தில் எந்தக் கோயிலிலும் நடை திறக்க மாட்டார்கள். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி

அழகர் சரிந்ததால் ஆபத்து?

பிறப்பின்போது, இரவு 12 மணிக்கு கோயிலில் நடை திறந்தார்கள். கோயிலுக்கு வெளியே பதினெட்டாம்படி கருப்பர் சந்நிதிக்கு எதிரே, ஆகம விதியை மீறி மண்டபம் கட்டி இருக்கிறார்கள். அதனால்தான், இந்த முறை அழகர் கீழே சாய்ந்துவிட்டார். இது ஆட்சியில் இருப்பவர்களுக்கும், கோயிலை நிர்வாகம் செய்பவர்களுக்கும் நல்லது இல்லை. சீர்பாதங்களின் அடாவடிகளை ஒடுக்குவதற்காக, இனி நாங்களே அழகரைப் பல்லக்கில் தூக்கி வரும் வேலைகளில் இறங்குவோம். இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராட்டமும் நடத்துவோம்!'' என்று சீறினார்.

அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், ''புது வருடம் பிறக்கும்போது மக்கள், பெருமாள் முகத்தில் விழிக்கட்டுமே என்பதற்காகத்தான் இந்த ஏற்பாட்டை விளம்பரப்படுத்தி செய்தோம். மற்றபடி சுயநலம் எதுவும் இல்லை. தங்கத் திருப்பணி நகாசு வேலைகளை சமயபுரம், ஸ்ரீரங்கம், பழநி, கோயில்களிலும் திருப்பணி வேலைகளை முஸ்லிம்களே செய்து வருகிறார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்களுக்குப் பணிகளை வழங்கினோம். பழைய குதிரையில் மரம் உளுத்துவிட்டது. அதைப் பயன்படுத்தி ஏதாவது அபசகுனம் நடந்துவிடக் கூடாது என்றுதான் புது குதிரையை ரெடி பண்ணினோம். பொதுமக்களில் சிலர் கொடுத்த இடைஞ்சல்களால் சீர்பாதங்களின் கவனம் சிதறி அழகர் சாய்ந்தார். ஆனால், சாமிக்கு எந்தச் சேதமும் இல்லை. இதனால், யாருக்கும் எந்த ஆபத்தும் வராது. தேவையான பரிகாரங்கள் செய்துவிட்டோம்!'' என்றார்.

நல்லது நடந்தால் சரி!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி