Published:Updated:

நாவரசு யாருன்னே தெரியாது சார்!

முதலில் இருந்து ஆரம்பிக்கும் ஜான் டேவிட்!

நாவரசு யாருன்னே தெரியாது சார்!

முதலில் இருந்து ஆரம்பிக்கும் ஜான் டேவிட்!

Published:Updated:

ண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கு, தமிழகத்தை

##~##
மீண்டும் பரபரப்​பாக்கி உள்ளது. கடந்த 20-ம் தேதி ஜான் டேவிட்டுக்கு  இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். 'ஜான் டேவிட் உடனே சரணடைய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.   

இந்த தீர்ப்பு வந்தவுடனேயே ஜான் டேவிட் மீது, தேடுதல் சுற்றறிக்கை வெளி​யிட்டார் கடலூர் எஸ்.பி. அஸ்வின் கோட்​னீஸ். மேலும், தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

கரூரில் உள்ள ஜான் டேவிட்டின் மாமா மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை சோதனை செய்ததில், குறிப்​பிட்ட ஒரு எண்ணில் இருந்து மெசேஜ் மற்றும் அழைப்புகள் அதிகமாக வந்தி​ருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எண், சென்னை அடையார் 'வி வான்டேஜ் அபார்ட்மென்ட்’ என்ற முகவரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தனிப் படையில் இருந்த இன்ஸ்​பெக்டர் சதீஷிடம் பேசினோம்.

நாவரசு யாருன்னே தெரியாது சார்!

''சாமுவேல் என்ற பெயரில் இங்கு தங்கியிருந்த ஜான் டேவிட், வேளச்சேரியில் உள்ள கால் சென்டர் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அலுவலகத்தில், ஜான் மாரிமுத்து என்று பெயரை மாற்றிக் கொடுத்து சேர்ந்து உள்ளார். அபார்ட்மென்ட் ஓனரிடம் நடத்திய விசாரணையில், ஜான் டேவிட் பயன்படுத்திய செல்போன் நம்பர்களைக் கொ

நாவரசு யாருன்னே தெரியாது சார்!

டுத்தார். சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு அந்த எண்களை தொடர்ந்து கண்காணித்தோம். புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் வசந்த் நகரில் சிக்னல் காட்டியது. உடனே எஸ்.பி-க்குத் தகவல் கொடுத்தோம். சிக்னல் தொடர்ந்து ஒரே இடத்தில் காட்டியது. 22-ம் தேதி இரவு முழுவதும் ஜான் டேவிட் அங்கே தங்கி இருந்தான். அவனைச் சுற்றி வளைக்க போலீஸ் படை புறப்பட்ட நேரத்தில், சிக்னல் திடீரென கட் ஆனது. மறுநாள் காலையில் மஞ்சக்குப்பம், வண்டிப்பாளையம் என்று சிக்னல் தொடர்ந்தது. கடலூரில் பிடித்துவிடலாம் என முடிவு செய்தோம். போலீஸ் நடவடிக்​கைகளையும் நண்பர்கள் மூலம் அறிந்த ஜான் டேவிட், இதற்கு மேல் தப்பிக்க முடியாது எனத் தெரிய வந்ததும், 23-ம் தேதி கடலூர் மத்திய சிறையில் சரணடைந்து​விட்டான்!'' என்றார்.

நாவரசு யாருன்னே தெரியாது சார்!

ஜான் டேவிட் சரணடைந்த நேரத்தில் நடந்தவற்றை நம்மிடம் விளக்கினார் ஒரு காவலர். ''காரில் தனது தாயாருடன் வந்த ஜான் டேவிட், ஜூனியர் வக்கீல் ஒருவரை சிறை அதிகாரிகளை சந்திக்க அனுப்பினார். அதற்குள், காரில் ஜான் டேவிட் இருப்பதை அறிந்துகொண்ட திருப்பாப்புலியூர் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, இரண்டு காவலர்களை காருக்கு முன்னும் பின்னும் காவல் வைத்தார். இதனால் கடுப்பான ஜான் டேவிட்டின் தாயார் எஸ்தர், 'என் பையன் எந்தப் பாவமும் பண்ணலை. எங்களை ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க? சொந்த பந்தம் மூஞ்சியில முழிக்க முடியாத அளவுக்கு பண்ணிட்டீங்க. நாங்க நிம்மதியா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா?’ என்று கூச்சல் போடவே... அந்த இடத்தில் கூட்டம் கூடியது. உடனே இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு வீடியோகிராஃபரை வரச் சொல்லி, அவர்களைப் படம் பிடிக்கச் சொன்னார். அதுவரை அமைதியாக இருந்த ஜான் டேவிட் தடாலடியாக காரில் இருந்து இறங்கி, 'அமைதியா இருங்கம்மா... எனக்கு எதுவும் ஆகாது’ என்று ஆசுவாசப்படுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் வந்து சேர்ந்த எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், ஜான் டேவிட்டிடம், 'என்ன வழக்குக்காக சரண் அடைய வந்திருக்கீங்க?’ என்று எதுவும் தெரியாதவர்போல் கேட்க... 'நாவரசு யாருன்னே தெரியாது சார், யாரோ செஞ்ச கொலைப் பழி என் மேல விழுந்துடுச்சு’ என்றார் ஜான் டேவிட். அருகில் இருந்த ஒரு சீனியர் காக்கி, 'சார் நல்லா ரீல் விடுறான். நாவரசு தலையை இங்கதான் போட்டேன்னு குட்டைக்கு எங்களைக் கூட்டிட்டுப் போய் அடையாளம் காட்டினதே இவன்தான்’ என்று அவர் அவசரமாக எஸ்.பி. காதில் கிசுகிசுக்க, அமைதி​யாகக் கேட்டுக்கொண்டார்.

சிறைக்குள் எடுத்துச் செல்வதற்காக ஒரு காலேஜ் பேக், பெய்ன் ஸ்பிரே, முகம் பார்க்கும் கண்ணாடி, பக்கெட், ஆகியவற்றுடன் ஒரு சிலுவையையும் எடுத்து வந்திருந்தார் ஜான் டேவிட். ஆனால், அவற்றை சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 'சிலுவையை மட்டுமாவது கொண்டுசெல்கிறேன்’ என்று ஜான் டேவிட் எவ்வளவோ கெஞ்சியும் விதிகளைக் கூறி மறுத்துவிட்டனர். இறுதியில், தான் வைத்திருந்த பைபிள் ஒன்றை ஜான் டேவிட்டின் கையில் கொடுத்து சிறைக்குள் அனுப்பிவைத்தார் தாயார் எஸ்தர்!''

தேடுதல் வேட்டை விரைவில் முடிவுக்கு வந்ததில், அனைவருக்கும் நிம்மதி!

- க.பூபாலன், படம்: ஜெ.முருகன்