Published:Updated:

திருக்குறள் பரிசு என்னாச்சு?

முடிவு சொல்வாரா முதல்வர்?

திருக்குறள் பரிசு என்னாச்சு?

முடிவு சொல்வாரா முதல்வர்?

Published:Updated:

''திருக்குறளில் தங்களுக்குள்ள திறமையைக் காட்டிய இந்த 22 மாணவர்களுக்கும், தலா

திருக்குறள் பரிசு என்னாச்சு?

1,000 ஒரு முறை மாத்திரம் அல்ல...

##~##
மாதம்தோறும் வழங்கப்படும். இதைப்போன்ற திறமைசாலிகள் இன்னும் வருவார்​களே​யானால், மாதம்தோறும் தலைமைச் செயலகத்தில் இருந்து அவர்கள் வீடுகளுக்கே தொகை அனுப்பிவைக்கப்படும். இதற்கு 'குறள் பரிசு’ என்று பெயர். இந்த ஆட்சி இருந்தாலும், எந்த ஆட்சி வந்தாலும்... இந்தத் திட்டம் தொடரும்; தொடர வேண்டும்; தொடர்ந்தே தீரும்!'' - 2000-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி குமரி முனையில் திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்து, முதல்வர் கருணாநிதி தந்த இனிப்பான செய்தி இது. இப்போதும் அவரது ஆட்சிதான் நடக்கிறது. ஆனால், 'குறள் பரிசு’க்காக தேர்வான மாணவர்கள்தான் பரிசு வந்து சேராமல் ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள்! 

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின்போது, பள்ளி மாணவர்கள் திருக்குறளின் அத்தனை அதிகாரங்களையும் ஒப்புவித்தல் செய்யும் நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. ஒன்றரை மணி நேரத்தில் அத்தனை குறள்களையும் தங்கு தடையின்றி ஒப்புவித்தல் செய்ய வேண்டும். குறளுக்கான

திருக்குறள் பரிசு என்னாச்சு?

பொருளையும் விளக்க வேண்டும். இந்தத் தகுதிகளுடன் மாநிலம் முழுவதும் இறுதியாகத் தேர்வானவர்கள் 22 பேர். முதல்வரும் இந்த மாணவர்களின் திறமையைப் பார்த்து அசந்து, மேலே சொன்ன அசத்தலான அறிவிப்பை வெளியிட்டார். ஒரே வாரத்தில் அந்த 22 பேரையும் சென்னைக்கு வரவழைத்து தலா

திருக்குறள் பரிசு என்னாச்சு?

2,000-க்கான காசோலையையும் வழங்கினார். இந்தப் பரிசு 21 வயது வரை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அப்போது சொன்னார்கள்.

அடுத்து வந்தது அ.தி.மு.க. ஆட்சி. அவர்கள் பங்குக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே! மாதம்

திருக்குறள் பரிசு என்னாச்சு?

1,000 என்பதை மாற்றி, 22 பேருக்கும் குறிப்பிட்ட தொகையை மொத்தமாகக் கொடுத்துக் கணக்கை முடித்தார்கள். அதன் பிறகு, இதுபோன்ற குறள் ஒப்புவித்தல் தேர்வுகள் நடந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை. மீண்டும் 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், 'குறள் ஒப்புவித்தல் செய்யும் மாணவர்களுக்கு மொத்தமாக  

திருக்குறள் பரிசு என்னாச்சு?

5,000-மும், அரசு சான்றிதழும் வழங்கப்படும்’ என்று ஓர் அரசு ஆணை வந்தது. அதன்படி, 2007-ம் வருடம் ஏப்ரல் மாதம் குறள் பரிசுக்கான தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற ஏராளமான மாணவர்களுக்கு, இது வரை பரிசும், பட்டயமும் வந்து சேரவில்லை.

இதற்கிடையில், 03.07.2008-ல், 'குறள் ஒப்புவித்தல் செய்யும் மாணவர்களுக்கு மாதம்

திருக்குறள் பரிசு என்னாச்சு?

1,000-மும் அரசு சான்றிதழும் வழங்கப்படும்’ என்று புதிதாக இன்னொரு ஆணை போட்டார்கள். அதையும் நம்பி ஏற்கெனவே தேர்வாகிப் பரிசு கிடைக்காமல் இருந்த மாணவர்களுக்கும், புதிய மாணவர்களுக்கும்  தேர்வுகள் கடந்த ஆண்டு மே மாதம் நடந்தது. அவர்களுக்கும் குறள் பரிசு இன்னும் வரவில்லை. இதற்கிடையில், நிதிப் பற்றாக்குறை காரணமாக, மாதம் 1,000 ரூபாய்க்குப் பதிலாக ஒன் டைம் செட்டில்​மென்ட்டாக

திருக்குறள் பரிசு என்னாச்சு?

10,000 கொடுக்கப்படுவதாக ஓசைப்படாமல் இன்னொரு ஆணையையும் போட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். 'சொல்லாததையும் செய்வோம்’ என்பது இதுதானோ?

காரைக்குடியைச் சேர்ந்த திலீபன், ப்ளஸ் டூ மாண​வர். பஸ் கண்டக்டரின் மகனான இவரும், 2007 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் குறள் பரிசுக்கான தேர்வு​களில் பங்குபெற்றுத் தேர்வானவர். இவருக்கும் பரிசு வரவில்லை.

நம்மிடம் பேசிய திலீபனின் அம்மா சுமதி, 'நாடே கான்வென்ட் யுகமா இருக்கிற இந்தக் காலத்துல, திருக்குறளைப் படிக்கிறதுக்கும் மாணவர்கள் வர்றாங்​கன்னா, அவங்களைப் போற்றிப் புகழ வேண்டியது அரசின் கடமை. எங்களுக்குப் பணம் முக்கியம் இல்லை. இருந்தும், அரசின் சான்றிதழை ஆவலோடு எதிர்பார்க்​கிறோம். சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி​களிடம் பல முறை கேட்டோம். 'இப்ப வந்துரும் அப்ப வந்துரும்’னு சொல்லியே காலத்தைக் கடத்து​றாங்க. முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு நாங்கள் அனுப்பிய கடிதத்துக்கும் பலன் இல்லை!'' என்று வேதனைப்​பட்டார்.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் எழிலரசுவிடம் கேட்டதற்கு, ''குறள் பரிசு கொடுப்பதை நிறுத்தவில்லை. மாதா மாதம் 1,000 ரூபாய் என்பதை மொத்தமாக

திருக்குறள் பரிசு என்னாச்சு?

10 ஆயிரமா கொடுக்கச் சொல்லி திருத்த ஆணை ஏற்கெனவே வந்திருக்கிறது. அதன்படி, 2009-10-ம் ஆண்டில் தேர்வானதில் 25 பேருக்குப் பரிசு கொடுக்க ஆணை வந்துவிட்டது. மேலும், 35 பேருக்கு பரிந்துரை அனுப்பி இருக்கிறோம். அதில் திலீபனின் பெயரும் இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளால், சற்றுக் கால தாமதம். தகுதியான அனைவருக்கும் கட்டாயம் பரிசு வந்து சேரும்!'' என்றார்.

'திருக்குறள் போராளி’ என்று பட்டம் வாங்கிக்கொண்ட முதலமைச்சர் கருணாநிதி இதற்கு என்ன பதில் சொல்லப்​போகிறார்?

- குள.சண்முகசுந்தரம், படம்: எஸ்.சாய் தர்மராஜ்