Published:Updated:

குழந்தைக் கடத்தல்... தொடரும் கொடூரம்

குழந்தைக் கடத்தல்... தொடரும் கொடூரம்

குழந்தைக் கடத்தல்... தொடரும் கொடூரம்

குழந்தைக் கடத்தல்... தொடரும் கொடூரம்

Published:Updated:
##~##

சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு காணாமல் போனவர்கள் 1,464 பேர். இதில் ஆண்கள் 718, பெண்கள் 482, சிறுவர்கள் 93, சிறுமிகள் 171 எனப் பட்டியல் வாசிக்கிறது போலீஸ்! 

''நிறைய நபர்கள் காணாமல்போவதாகப் புகார்கள் வருகின்றனவே?'' என்ற கேள்வியோடு சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி-யான அர்ச்சனாவை சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 11 வயதுச் சிறுவன் காணாமல் போய், மூன்று மாதங்களுக்குப் பிறகு அவனே தப்பித்து வந்தான். அவனிடம் விசாரித்தபோது,

குழந்தைக் கடத்தல்... தொடரும் கொடூரம்

5,000-க்காக பெற்​

குழந்தைக் கடத்தல்... தொடரும் கொடூரம்

றோரே அவனை விற்ற கொடுமை தெரிந்தது. எங்களுக்கு வரும் புகார்களில், பெரும்பாலும் 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்களே அதிகம்.

மதுரையில் உள்ள ஏழு சிறுவர்களை ஆந்திராவில் மீட்டோம். அங்கு உள்ள முறுக்கு தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் தமிழகத்தின் பல சிறுவர்கள் பிழியப்படுகின்றனர். இரவு, பகல் பாராமல் உழைக்கும் அவர்களுக்கு சரியான சாப்பாடும் கிடையாது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்​களில்தான், அதிக அளவில் சிறுவர்கள் காணாமல் போகின்றனர். சென்னை துரைப்பாக்கம் ஸ்டேஷனுக்கு போன் செய்த ஒரு பெண், 'பக்கத்து வீட்டில் திடீரென நிறையக் குழந்தைகள் நடமாடு​கின்றன’ என்று சொல்ல, போலீஸார் சென்று விசாரித்தனர். அந்தக் குழந்தைகள், வெளிநாடுகளில் இருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டவர்கள். அதில், 13 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் செக்ஸ் டார்ச்சரால் பாதிக்கப்பட்டு இருந்தனர்!' என்று தெரி​வித்தார்.

ஆதரவு இன்றித் திரியும் சிறுவர்களை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியை செய்யும் 'நண்பன்’ காப்பகச் செயலாளர் ஜேம்ஸ் உதவியோடு காப்பகத்தில் இருந்த சிலரிடம் பேசினோம்.

மதுரை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பரமக்​குடியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி, ''நாலாம் வகுப்பு வரை படிச்சேன். எங்க அப்பா, டிரைவர். அம்மா, வீட்டு வேலை செய்றாங்க. மூணு அண்ணன், ஒரு தம்பி எனக்கு இருக்காங்க. எங்க தெருவுல இருக்குற மாறன், 'ரெண்டு பேரும் ஓடிப்போயிருவோம்’னு சொன்னான். வீட்ல அம்மா வெச்சிருந்த

குழந்தைக் கடத்தல்... தொடரும் கொடூரம்

200-ஐ எடுத்துக்கிட்டு ரயில்ல

குழந்தைக் கடத்தல்... தொடரும் கொடூரம்

மதுரைக்கு வந்தோம். அவன் எனக்கு சுடிதார் வாங்கிக் கொடுத்தான். அன்னிக்கு ராத்திரி லாட்ஜுல ரூம் போட்டோம். அவன் தப்பா நடக்க முயற்சி செஞ்சான். அவன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன்!'' என்றாள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள குராயூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி, அண்ணா நகரில் மீட்கப்பட்டாள். இவளது அம்மா, போதைப் பழக்கத்துக்கு அடிமையான​தோடு, விபசாரமும் செய்திருக்கிறார். இதனால், மனமுடைந்த தந்தை தற்கொலை செய்ய, வீட்டு வேலைக்குச் செல்லுமாறு மகளைத் துன்புறுத்தி, மதுரை சக்கிமங்கலத்தில் ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்த்து இருக்கிறார் அம்மா. கொடுமை தாங்காமல் தப்பித்து வந்த சிறுமி, 'நண்பன்’ ஊழியர்களால் மீட்கப்பட்டாள்.

விருதுநகர் மாவட்டம் ஆவாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன், 6-ம் வகுப்பு பாதியிலேயே நின்றுவிட்டான். மளிகைக் கடையில் மூன்று மாதங்களாக வேலை செய்தான். 23 வயதான ஆஸ்பிரடின் என்ற ஆந்திரா முறுக்கு கம்பெனி புரோக்கர்,

குழந்தைக் கடத்தல்... தொடரும் கொடூரம்

5000-ஐ முன் பணமாகக் கொடுத்து, சிறுவனை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றார். ஆண்டுக்கு

குழந்தைக் கடத்தல்... தொடரும் கொடூரம்

22,000 கொடுத்துவிடுவதாகக் கூறியதால், மகனை அனுப்ப சம்மதித்திருக்கிறார் அந்தத் தாய். மதுரை ரயில் நிலையத்தில் அந்த சிறுவன் மீட்கப்பட்டான்.

மதுரை, மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் திரிந்த 12 வயது சிறுமி, திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்தவள். ஆறு மாதங்​களாக வீட்டு வேலை செய்து, மாதம்

குழந்தைக் கடத்தல்... தொடரும் கொடூரம்

500 சம்பள​மாகப் பெற்று, அதை அப்படியே தனது பெற்றோரி​டம் கொடுத்தாள். சிறுமியை அடிக்கடி அவளது பெற்றோர் அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார்கள். மனம் உடைந்த அவள், பஸ் நிலையத்தில் திரிந்தபோது, ஒரு பெண் அவளி​டம் பேச்சுக் கொடுத்து சிறுமியோடு மதுரை செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டார். மாட்டுத்​தாவணியில் கீழே இறங்கும்போது, அந்தப் பெண், சிறுமியை இறங்கவிடவில்லை. இதனால் பிரச்னை எழ... மற்ற பயணிகள் கவனித்து இருக்கிறார்கள். உடனே, சிறுமியை விட்டுவிட்டு அந்தப் பெண் சென்றுவிட்டார். 'நண்பன்’ ஊழியர்கள் அந்தச் சிறுமியை மீட்டனர்.

காதல், மன உளைச்சல் என எத்தனை காரணங்களைப் பட்டியல் போட்​டாலும், அடிப்படையான கல்வி கிடைத்து இருந்தால், வீட்டைவிட்டு ஓடிப் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்​கொண்டே போகாது. போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அறிவித்து நாட்டை ஆளத் துடிப்பவர்கள், கல்வியை இலவசமாக்கி இருந்தால், இந்தக் கட்டுரை தேவைப்பட்டு இருக்காது!

- வே.கிருஷ்ணவேணி

படம்: சொ.பாலசுப்பிரமணியன்