Published:Updated:

மாருதி அடிகளார் கொலையில் நடுங்கும் குமரி!

மாருதி அடிகளார் கொலையில் நடுங்கும் குமரி!

மாருதி அடிகளார் கொலையில் நடுங்கும் குமரி!

மாருதி அடிகளார் கொலையில் நடுங்கும் குமரி!

Published:Updated:
##~##

டந்த சில தினங்களாக உச்சகட்ட அதிர்வில் இருக்கிறது குமரி மாவட்டம்! காரணம், அகில இந்திய இந்து மகா சபையின் மாநிலத் துணைத் தலைவரான மாருதி அடிகளாரின் கொடூரப் படுகொலை! 

சுசீந்திரம் காவல் சரகத்துக்கு உட்பட்ட மேலகிருஷ்​ணன்​புதூரில், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்த மாருதி அடிகளாரை, சில மாதங்கள் முன்பு நங்கூரன்பிலாவிளையைச் சேர்ந்த ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டியது. மாருதி அடிகளார், சுசீந்திரம் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் செய்தார். மிரட்டிய நபர்களில் ஒருவராகக் கூறப்படும் கிருஷ்ணகுமார் என்பவர், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகுமார் கொலை வழக்கில் ஆறாவது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாருதி அடிகளார் கொலையில் நடுங்கும் குமரி!

குற்றவாளி​யாகச் சேர்க்கப்பட்ட மாருதி அடிகளார், 'காவல் நிலையத்தில் கையெ​ழுத்திட வேண்​டும்’ என்ற நிபந்த​னையின் பேரில் ஜாமீனில் வெளியில் இருந்தார்.

அரசியலிலும் ஆன்மிகத்திலும் அதிக ஆர்வம்கொண்ட மாருதி அடிகளார், தீவிர ஆஞ்சநேய பக்தர். அஞ்சனாவனம் என்னும் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றை நிறுவி, அன்றாட பூஜைகள் செய்துவந்தார்.

'தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும்’ என்பதற்காக, யாகம் நடத்தத் திட்டம் போட்டு வந்தார் அடிகளார்.

இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி இரவு கோயிலில் பூஜை செய்துவிட்டுத் தனியாக வீடு திரும்பிய மாருதி அடிகளாரை, மர்ம நபர்கள் சிலர் கோயில் முன்பாகவே சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது மாருதி அடிகளாரின் உடல். அகில இந்திய இந்து மகா சபையின் மாநிலத் தலைவர் த.பாலசுப்ரமணியன்

மாருதி அடிகளார் கொலையில் நடுங்கும் குமரி!

தலைமையில், அந்தக் கட்சித் தொண்டர்கள் மருத்துவமனை முன்பாக திரள... ஏரியாவே ஒருவிதப் பதற்றத்தில் இருந்தது.

ஒரு தொண்டர் நம்மிடம், '' மாருதி அடிகளாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்து மகா சபை சார்பில் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரிடம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதியே  மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதை அவர்கள் துளியும் சட்டை செய்யவில்லை. உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால், அடிகளாரை நாங்கள் பறிகொடுத்துப் பரிதவிக்க மாட்டோம்!'' என்றார் கோபமாக.

'இந்தக் கொலை வழக்கை விசாரித்து வரும் காவல் துறை ஆய்வாளர் பீட்டர்பால் துரையின் நடவடிக்கையில் எங்களுக்குத் திருப்தி இல்லை. எனவே, இந்த வழக்கை உடனடியாக வேறு அதிகாரிக்கு மாற்ற வேண்டும்’ என்று அந்தக் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். அங்கு வந்த காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் நடராஜமூர்த்தி சமாதானம் பேசினார்.

காவல் துறை ஆய்வாளர் பீட்டர்பாலிடம் பேசினோம். ''நங்கூரன்பிலாவிளையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் கொலை செய்யப்பட்டதற்குப் பழிதீர்க்கவே இந்தக் கொலை நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். கிருஷ்ணகுமாரின் சகோதரன் நகுலகுமார் இந்தக் கொலையை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகம். விரைவில் கொலையாளிகளைப் பிடித்துவிடுவோம்!'' என்றார் நம்பிக்கையாக.

குமரி மாவட்ட மக்களோ, ''வில்லுகுறி நாகராஜ், கிருஷ்ணகுமார் படுகொலைகளைத் தொடர்ந்து, மீண்டும் கொலை நடந்துள்ளது.  தொடரும் படுகொலைகளுக்கு உடனடியாகக் காவல் துறை முற்றுப்புள்ளி வைத்தால்தான் எங்களுக்கு நிம்மதி!'' என்கிறார்கள் பதற்றமாக.

உயிருக்கு ஆபத்து என்று கதறிய ஒருவரை, காவல் துறை கைவிட்டது நியாயமா?

- பி.கே.ராஜகுமார், படங்கள்: ராம்குமார்