'எண்டோ சல்ஃபான் (Endo Sulfan)’ என்பது அதிபயங்கர பூச்சிக் கொல்லி. உலகின் 81 நாடுகளில் தடைசெய்யப்பட்டது. இதை இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும்’ என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசிய இணைச் செயலாளரும், கேரள மாநில செயலாளருமான டி.வி.ராஜேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இருக்கிறார்!

முந்திரி, பருத்தி, புகையிலை உள்ளிட்ட பணப் பயிர்களுக்கு வேட்டுவைக்கும் சிறியவகைப் பூச்சிகளை அழிக்க எண்டோ சல்ஃபானைப் பயன்படுத்துகிறார்கள். 1950-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பூச்சிக் கொல்லி, 1970-ல் இந்தியாவுக்கு வந்தது. இங்கு, ஆண்டுக்கு 8,500 டன் எண்டோ சல்ஃபான் உற்பத்தி செய்யப்பட்டு 4,000 டன் வெளிநாடுகளுக்கு செல்கிறது, எஞ்சியது இந்தியாவுக்கு. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் முந்திரிக் காடுகள் அதிகம். இங்கு ஹெலிகாப்டர் மூலம் இந்த மருந்தைத்

தெளித்ததில், இதுவரை 400 பேருக்கு மேல் இறந்துவிட்டார்கள். இதனால் எண்டோ சல்ஃபானுக்கு இந்தியாவில் தடை விதிக்கக் கோரி, ஆளும் மார்க்சிஸ்ட்களே கேரளத்தில் போராடுகிறார்கள்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழக முன்னாள் துணைத் தலைவரான டாக்டர் ஸ்ரீதர், ''நார்வே நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், கடந்த மாதம் நடந்த உலக சுகாதார மாநாட்டில், 2012 மத்தியில் எண்டோ சல்ஃபானுக்கு உலக அளவில் தடை விதிக்கத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இது உடலுக்குள் போய்விட்டால், முதலில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். வலிப்பு, நடை தடுமாற்றம், மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு, நினைவு இழத்தல் எனத் தொடங்கி இறுதியில் கோமா நிலைக்குக் கொண்டுபோய்விடும். கருவுற்ற தாய்மார்களுக்கு முதல் எட்டு வாரங்களிலேயே இது கருவைப் பாதிக்கும். ஹார்மோன் சுரப்பதில்

சிக்கலை உண்டாக்குவதால், ஆண் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி பெண் சுரப்பிகளை அதிகப்படுத்தும். அதனால், பிறக்கும் ஆண் குழந்தைகள்கூட அதிகப் பெண்மைத்தன்மையுடன் இருப்பார்கள். இந்தக் குழந்தைகளுக்கு தைராய்டு ஒழுங்காக இருக்காது. இன்சுலின் சுரக்காது. வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. ஆண் குழந்தைகளுக்கு விரைகள் முதிர்ச்சியடையாமல் இருக்கும். இவர்களுக்கு வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டு பிறவியிலேயே இவர்கள் பார்வை இழக்கலாம். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், சொர்க்கா என்ற கிராமத்தில், சந்தியா என்ற குழந்தை, எண்டோ சல்ஃபானால் பாதிக்கப்பட்டு பிறக்கும்போதே குருடாகப் பிறந்தாள். நான்கு வயதான அஞ்சனாவுக்கு சிறுநீர்ப் பை வயிற்றுக்கு வெளியே தொங்கியபடி இருக்கிறது. 20 வயதான முகமது ஆசிப், வலிப்பு நோயால் சுருண்டுகிடக்கிறார். 28 வயதான சுஜாதாவுக்கு, நான்கு வயது குழந்தைக்கான மன வளர்ச்சிகூட இல்லை. மனித உடலில் கலக்கும் எண்டோ சல்ஃபான் கழிவுகள், சிறுநீரகம் மற்றும் ஈரல் மூலம்

வெளியேறுவதால், அவையும் பாதிக்கப்பட்டு இதயம் பலவீனமாகலாம்...'' என்று அதிர்ச்சி அளித்தார்.

வழக்குத் தொடுத்த டி.வி.ராஜேஷ், ''எண்டோ சல்ஃபானுக்கு நிரந்தரத் தடை விதிப்பது குறித்து கேரள அரசு இதுவரை 11 கமிட்டிகளை நியமித்தும், தடை செய்ய முடியவில்லை. உற்பத்தி ஆலைக்கு மட்டும் தடை விதித்து இருக்கிறார்கள். எங்களது இறுதி முயற்சியாகத்தான் கோர்ட்டை அணுகி இருக்கிறோம். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, இந்தியாவில் எண்டோ சல்ஃபானுக்கு இடைக்கால தடை அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பெரும்பாலான மாநிலங்களும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்...'' என்றார்.

எண்டோ சல்ஃபான் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு மருந்துகள் உண்டா? என்று டாக்டர் ஸ்ரீதரிடம் கேட்டால், ''குணப்படுத்த மருந்துகள் இல்லை; சப்போர்ட்டிவ் மருந்துகளை வைத்தே நாட்களைத் தள்ளலாம். மும்பையில் உள்ள டாடா எனர்ஜி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், ஒரு பாக்டீரியாவைக் கண்டுபிடித்து இருக்கிறது. இதை எண்டோ சல்ஃபானுடன் சேர்த்து நிலத்தில் தெளித்தால், மூன்று மாதங்களுக்குள் அது எண்டோ கழிவுகளை அழித்துவிடும் என்கிறார்கள். என்றாலும் அது இனிமேல் வரப்போகும் தலைமுறைக்கான விடியலே தவிர, இப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு விமோசனமாக இருக்காது!'' என்கிறார்.

உச்ச நீதிமன்றம் உடனே சாட்டையைச் சொடுக்கட்டும்!

- குள.சண்முகசுந்தரம்,

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்