Published:Updated:

பட்டுக்கோட்டை: நரபலி கொடுக்கப்பட்ட 6 மாதப் பெண் குழந்தை; போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

குழந்தை நரபலி
News
குழந்தை நரபலி

மாந்திரீகவாதியின் பேச்சைக் கேட்டு பெண் ஒருவர், தன் சகோதரி மகனின் ஆறு மாதப் பெண் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பட்டுக்கோட்டை அருகே கணவர் உடல்நிலை குணமடைவதற்காக, கேரள மாந்திரீகவாதியின் பேச்சைக் கேட்டு பெண் ஒருவர் தன் சகோதரி மகனின் ஆறு மாதப் பெண் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக, குழந்தையின் உறவினர்கள், மாந்திரீகவாதி ஆகியோரை போலீஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை
கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நசுருதீன் (32). இவர் மனைவி ஷாலிஹா (24). இந்தத் தம்பதிக்கு ஐந்து வயதில் ராஜூ முகமது என்ற மகன், ஆறு மாதப் பெண் குழந்தை ஹாஜரா என இரண்டு பிள்ளைகள். நேற்றைய தினம், தம்பதியின் இளைய மகள் ஹாஜரா, வீட்டின் பின்புறம் உள்ள மீன் வளர்க்கும் பிளாஸ்டிக் தொட்டிக்குள் விழுந்து நீரில் மூழ்கி இறந்துகிடந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. போலீஸார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது, குழந்தையின் உறவினர்கள் போலீஸாரின் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கின்றனர். அதனால், போலீஸாருக்குக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதற்கிடையில், இறந்த குழந்தையின் உடல் முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், குழந்தை தொட்டிக்குள் விழுந்து இறக்கவில்லை என்றும், நரபலிக்காகக் கொலைசெய்யப்பட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

குழந்தை உடல் புதைக்கப்பட்ட இடம்
குழந்தை உடல் புதைக்கப்பட்ட இடம்

இதையடுத்து பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன், டி.எஸ்.பி செங்கமலக்கண்ணன், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு டி.எஸ்.பி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில், புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. மேலும் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அந்த இடத்திலேயே உடற்கூறாய்வும் செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத் தொடர்ந்து போலீஸார் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``நசுருதீன் சித்தி ஷர்மிளா பேகம் (48), அவர் கணவர் அஸாருதீன் (50). வெளிநாட்டில் வேலை செய்துவந்த அஸாருதீன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

நரபலி
நரபலி
சித்தரிப்புப் படம்

இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் உடலில் நோய்கள் மற்றும் பிரச்னைகள் தீர மாந்திரீகம் செய்பவர்களை அணுக முடிவெடுத்தனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், கிருஷணாஜி பட்டினத்திலுள்ள கேரளாவைச் சேர்ந்த குறி சொல்லும் மாந்திரீகவாதியான முகமது சலீம் (48) என்பவரைச் சந்தித்து ஷர்மிளா பேகம் குறி கேட்டிருக்கிறார்.

அப்போது `கோழி, ஆடு போன்றவற்றை உயிர்பலி கொடுத்தால் உன் கணவர் உடல்நலம் குணமடைந்துவிடும்’ என முகமது சலீம் கூறியிருக்கிறார். அதை உண்மையென நம்பிய ஷர்மிளா பேகம், வீட்டைச் சுற்றி 20-க்கும் மேற்பட்ட கோழி, ஆடுகளை பலி கொடுத்தார். ஆனால், அதன் பிறகும் அவரின் கணவர் உடல்நலம் சரியாகவில்லை. மீண்டும் மாந்திரீகவாதியைச் சந்தித்திருக்கிறார். அவர் குழந்தையை நரபலி கொடுத்தால்தான் உடல் குணமாகும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

கொலை தொடர்பாக விசாரணை
கொலை தொடர்பாக விசாரணை

அதனால், தன் அக்காள் மகனான நசுருதீனின் குழந்தை ஹாஜராவை, அவர்களுக்குத் தெரியாமலேயே கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 15-ம் தேதி நள்ளிரவில் குழந்தையை தூக்கிச் சென்று மீன் தொட்டியிலிருந்த தண்ணீருக்குள் அமுக்கிக் கொலை செய்து பலிகொடுத்தார். அடுத்த நாள் விடிந்ததும் மற்றவர்களுடன் சேர்ந்து குழந்தையைத் தேடுவதுபோல நடித்திருக்கிறார். ஆனால், அவர்தான் கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதனால், ஷர்மிளா பேகம், அவர் கணவர் அஸாருதீன், குறி சொல்லும் முகமது சலீம் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தோம். மாந்திரீகவாதி விசாரணையில், `நான் கோழிகளையும் ஆடுகளையும்தான் பலி கொடுக்கச் சொன்னேன். அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு இப்படிச் செய்துவிட்டார்கள்' என்றார். தொடர்ந்து கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.