Published:Updated:

நாமக்கல்: போர்டில் `ஸ்பா மசாஜ்’; உள்ளே பாலியல் தொழில்! - அதிரடிகாட்டிய போலீஸார்

நாமக்கல்
நாமக்கல்

வெளியே போர்டில் `ஸ்பா மசாஜ் சென்டர்’ என்று எழுதிவைத்துவிட்டு, உள்ளே பாலியல் தொழில் நடைபெறுவதைக் கண்டறிந்தனர். அங்கிருந்த ஆறு இளைஞர்கள், ஆறு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாமக்கல்லில் `ஸ்பா மசாஜ் சென்டர்’ என்ற பெயரில் பாலியல் தொழில் செய்ததாக, ஆறு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆறு பெண்களையும் மீட்டு, காப்பகத்துக்கு காவலர்கள் அனுப்பிவைத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள்
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள்
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை!

நாமக்கல் நகர், சேலம் சாலையில் `மசாஜ் சென்டர்’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் கிடைத்தது. அப்படி வந்த தகவலின் அடிப்படையில், அங்கு சோதனை மேற்கொள்ளும்படி அவர் நாமக்கல் போலீஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறார். அவரின் உத்தரவைத் தொடர்ந்து, நேற்று இரவு நாமக்கல் நகர காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமையிலான போலீஸார், சேலம் சாலையிலுள்ள பிரபல செல்போன் விற்பனையகத்தின் 2-வது மாடியிலுள்ள 'ட்ரீம் ஸ்பா' என்ற அந்த மசாஜ் சென்டரில் சோதனையிட்டனர். அப்போது, வெளியே போர்டில் `ஸ்பா மசாஜ் சென்டர்’ என்று எழுதிவைத்துவிட்டு, உள்ளே பாலியல் தொழில் நடைபெறுவதைக் கண்டறிந்தனர். அங்கிருந்த ஆறு இளைஞர்களும், ஆறு பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இதனால், அந்த 12 பேரையும் நாமக்கல் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

நாமக்கல்
நாமக்கல்

அதில், நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டியைச் சேர்ந்த ராம்பிரகாஷ், கேரளாவைச் சேர்ந்த சில்பி ஜான், பரமத்தி, சேலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் என மொத்தம் ஆறு பேர், பெண்களை வைத்து, `மசாஜ் சென்டர்’ என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்த நாமக்கல் போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். ஆறு பெண்களையும் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர். அதோடு, இந்த மசாஜ் சென்டரின் முக்கியப் பங்குதாரர் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். `மசாஜ் சென்டர்’ என்ற பெயரில் இளைஞர்கள், இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துள்ள சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு