Published:Updated:

`வீதியில் வைத்து மூதாட்டி சுட்டுக்கொலை!' - அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள்

துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு

கொலை சம்பவத்தை வீடியோவாக எடுத்த நபர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

உத்தரப்பிரதேசத்தில் முன்விரோதம் காரணமாக 60 வயது மூதாட்டி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தை அதேபகுதியைச் சேர்ந்த மக்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். ஆனாலும் யாரும் உதவிக்கு வராததுதான் பரிதாபம். வடமாநிலங்களில் துப்பாக்கி கலாசாரம் மேலோங்கி வருகிறது.

துப்பாக்கி
துப்பாக்கி
மாதிரி படம்

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது உத்தரப்பிரதேசத்தில் நிறைய பேர் துப்பாக்கிக்குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தோட்டாக்கள் துளைத்ததில் நிறைய மரணங்கள் நிகழ்ந்திருந்தன. இதுகுறித்து அப்போது பேசிய உத்தரப்பிரதேச உயர் காவல்துறை அதிகாரிகள், `நாங்கள் துப்பாக்கிச்சூடு எதுவும் நடத்தவில்லை. போராட்டக்களத்திலிருந்து நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைக் கைப்பற்றியுள்ளோம். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர். இதற்கிடையேதான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

`இருமியதற்காக துப்பாக்கியால் சுட்டார்கள்..' - ஊரடங்கில் நேர்ந்த சம்பவத்தால் அதிர்ந்த நொய்டா

உத்தரப்பிரதேச மாநிலம் ஹோதல்பூரைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவருக்கு அந்த ஊரில் சொந்தமாக வீடு உள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சிவசங்கர் வீட்டைவிட்டு மாயாமாகியுள்ளார். அவரின் மனைவி ஷ்யாம்வதி (வயது 60) மட்டும் அந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தையில்லை. இந்த நிலையில், இன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் மாற்றுத்திறனாளி ஒருவரால் ஷ்யாம்வதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக்காட்சிகள் அனைத்தையும் எதிர்வீட்டில் வசிக்கும் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

கொலை
கொலை

அந்த வீடியோவில், அந்த மாற்றுத்திறனாளி நபர் ஷ்யாமவதியுடன் தகாராறில் ஈடுபடுகிறார். இதையடுத்து, தான் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியைக் கொண்டு அவரை சுடமுயல்கிறார். உடனே அந்த மூதாட்டி தட்டுத்தடுமாறி வீட்டுக்குள் செல்ல முயல்கிறார்.

அந்த நபரின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டுகள் மூதாட்டியின் காலை பதம்பார்க்கிறது. அவர் அலறல் சத்தத்துடன் கீழே விழுகிறார். உதவிகேட்டு தொடர்ந்து கூச்சலிடுகிறார். ஆனால், அவருக்கு உதவுவதற்கு யாரும் முன்வரவில்லை. அந்த நபர் மீண்டும் துப்பாக்கியால் சுட அவரது உடலில் குண்டு துளைக்க மூதாட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்தவர்களை எச்சரித்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து புறப்படுகிறார். இந்தக் கொடூரக்காட்சிகள் அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்களை மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

`மதுபோதையில் மனைவி, மகனை வெட்டிய தந்தை; கொலை செய்த மகன்!' -சென்னையில் நடந்த கொடூரம் #Lockdown

மூதாட்டியை சுட்டுக்கொன்ற அந்த மாற்றுத்திறனாளி நபரை போலீஸார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அந்த நபர் மூதாட்டியின் மைத்துனர் என்றும் வாரிசு இல்லாத அந்த மூதாட்டியின் சொத்தை அபகரிக்க அவர் முயன்றதாக கூறப்படுகிறது. சொத்து தகராறில் இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபருக்கு அடைக்கலம் கொடுத்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்த நபர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு