திருவண்ணாமலையில் உள்ள கம்பன் பொறியியல் கல்லூரி, உணவு அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமானது. இங்கே, 'பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் பிரிவில் படிக்கும் ஒரு மாணவர், வகுப்புக்கு வராமலும் தேர்வு எழுதாமலும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்!’ என்று ஒரு மாணவி, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹருக்கு புகார் அனுப்பிவைக்க... பிரச்னை விஸ்வரூபம் எடுக்கிறது!

குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவர் பெயர் அருண்குமார் ரெட்டி. அவர் பாலிடெக்னிக் படித்துவிட்டு, பி.இ. 2-வது ஆண்டில் சேர்ந்து இருப்பதும், வகுப்புக்கு வராமலே மற்ற மாணவர்களைவிட அதிக மார்க் எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவரது விடைத்தாளை சோதனையிட்டபோது, ஒவ்வொரு விடைத்தாளிலும் ஒவ்வொரு மாதிரி கையெழுத்துகள். அவருக்குப் பதில் யாரோ தேர்வு எழுதி இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இது குறித்துக் கல்லூரி மாணவ-மாணவியர்களிடம் கேட்டபோது, ''சார், எங்க போட்டோ, பெயர்

வேண்டாம்! இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அந்த அருண்குமார் ரெட்டியை நாங்கள் யாருமே வகுப்பறையில் பார்த்தது கிடையாது. அவர், கல்லூரிக்கோ, தேர்வுக்கோ, வரவே இல்லை. ஆனால், அவர்தான் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக எப்போதும் அறிவிப்பார்கள். இந்த அருண்குமார் ரெட்டி, எங்கள் கல்லூரி வைஸ் சேர்மன் குமரனுக்கு உறவினராம். அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த விசாரணைக் குழுவினர், அந்த மாணவர் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து ஆள் மாறாட்டத்தை உறுதிசெய்துள்ளனர். மாணவர் மீது மட்டும் இல்லாமல், தவறுக்கு உடந்தையாக இருந்த அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்றனர் ஆவேசமாக.

துணைவேந்தர் மன்னர் ஜவஹரிடம் பேசியபோது, ''அந்தக் கல்லூரி மாணவியிடம் இருந்து எனக்கு ஒரு புகார் வந்தது. அது சம்பந்தமாக விசாரணை கமிஷன் அமைத்து இருக்கிறேன். இரண்டு கட்ட விசாரணை முடிந்துவிட்டது. விசாரணை முழுமையாக முடிவடைந்ததும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று சொன்னார்.

கம்பன் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்துப் பேச முயன்றபோது, கல்லூரி சார்பில் பேச யாருமே முன்வரவில்லை. அமைச்சர் வேலுவிடம் கேட்க முயன்றபோதும், அவரது உதவியாளர் செல்வராஜ்தான் போனை எடுத்து, ''அமைச்சர் மீட்டிங்கில் இருக்கிறார். சந்திக்க முடியாது...'' என்று தட்டிக் கழித்தார்.

இதைத்தான் 'வெரி பேட்’னு சொல்றான் வெள்ளைக்காரன்!

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்