''பட்டதாரி இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி,

40 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இரண்டு வாலிபர்களை, சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்தில் சுற்றி வளைத்துப் பிடித்தோம்!'' - சில தினங்களுக்கு முன் அட்டென்ஷன் போஸில் படுபந்தாவாக மீடியாக்களுக்கு இந்தச் செய்தியை அள்ளிவிட்டனர் சேலையூர் போலீஸார்.

''சேலையூரை அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அப்பாராவ். சிமென்ட் கற்கள் தயாரிக்கும்

. தொழிற்சாலை நடத்துகிறார். இவரது மகள் அனுஷா, சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள, செம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள், அனுஷாவின் கையைப் பிடித்து இழுத்து, ஆட்டோவில் கடத்திச் சென்றனர். அனுஷாவின் தந்தைக்கு போன் வந்தது. 'உன் மகளைக் கடத்தி வெச்சிருக்கோம். . 40 லட்சம் கொடுத்தாதான் விடுவோம். இல்லைன்னா, ஆபாசமாப் படம் எடுத்து, இன்டர்நெட்ல கொடுத்துடுவோம். கொலை செஞ்சிடுவோம்’ என மிரட்டியது அந்தக் குரல். அனுஷாவின் அப்பா எங்க ஸ்டேஷன்ல புகார் கொடுத்தார். 'கடத்தல்காரங்க கேட்ட பணத்தைக் கொடுக்கிற மாதிரி கொடுங்க... மறைஞ்சு நின்னு பிடிச்சிடுறோம்’னு ஐடியா கொடுத்தோம். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு அனுஷாவோட அப்பாகிட்ட பணம் வாங்க வந்த கடத்தல்காரர்களை, மாறுவேஷத்துல பதுங்கி இருந்த நாங்க, பாய்ஞ்சுபோய் சுத்தி வளைச்சோம். இதோ நிக்கிறாங்களே... வினோத்குமார், கனகவேல்... இவங்கதான் அந்தக் கடத்தல்காரங்க. வினோத்குமார் வீட்ல அடைச்சுவெச்சு இருந்த அனுஷாவை உடனடியா மீட்டுட்டோம்!'' என்றார் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன்..
கடத்தல்காரனாக போலீஸ் கையைக் காட்டும் வினோத்குமாருக்கும் அனுஷாவுக்கும் காதல் இருந்தது... அதைப் பிரிக்க நடத்தப்பட்ட நாடகம்தான் இது என்று விவரம் அறிந்தவர்கள் ரகசியங்களை அவிழ்க்க ஆரம்பித்ததும், வினோத்குமாரின் தந்தை பால்பாண்டியைச் சந்தித்தோம்!

''அனுஷாவை காதலிச்சதைத் தவிர, என் பையன் வேறு எந்தத் தப்புமே செய்யலை சார். அந்தப் பொண்ணும் என் மகன் மேல் உயிரா இருந்தது. போலீஸ்காரங்க அந்தப் பொண்ணோட அப்பாகிட்ட பணம் வாங்கிட்டு, இப்படி என் பையனைக் கடத்தல்காரனா சித்தரிச்சு, ஜெயில்ல தள்ளிட்டாங்க சார்...'' என்று கண் கலங்கியவர், விரிவாகப் பேசினார்.

''எங்க சொந்த ஊர் கம்பம். என் பையன் வினோத்குமார், இங்கே தனியா வீடு எடுத்துத் தங்கி இருந்தான். என் பையனும் அனுஷாவும் பாரத் யுனிவர்சிட்டியில் ஒண்ணா எம்.பி.ஏ. படிச்சவங்க. அப்பவே ரெண்டு பேருக்கும் காதல். படிப்பு முடிஞ்சதும், என் பையன் ஒரு தனியார் கம்பெனியில மேனேஜரா வேலை பார்த்தான். இவங்க காதல் விவகாரம், எங்க வீட்ல எல்லாருக்குமே தெரியும். ஆனா, அந்தப் பொண்ணு வீட்ல யாருக்கும் தெரியாது. அனுஷா அடிக்கடி எனக்கும் என் மனைவிக்கும் போன் போட்டுப் பேசும்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அனுஷாவோட அக்கா கல்யாணம்... எங்களுக்கு இன்விடேஷன் கொடுத்து, 'நீங்களும் வினோத்குமாரும் கண்டிப்பா கலந்துக்கணும்’னு வற்புறுத்திக் கூப்பிட்டுச்சு. அதுக்குப் போனப்பதான் அனுஷாவோட குடும்பம் ரொம்பப் பணக்கார குடும்பம்னு எங்களுக்குத் தெரிஞ்சது. என் பையனையும், என்னையும் தன்னோட அப்பா அப்பாராவ்கிட்ட கூட்டிட்டுப் போய், ஸ்பெஷலா அறிமுகப்படுத்தியது.

அந்தக் கல்யாணம் முடிஞ்சதும், ஒரு நாள் நான் அனுஷாகிட்ட, 'ஏம்மா... நீ கோடீஸ்வரக் குடும்பத்துப் பொண்ணு. எங்களுக்குப் பெருசா வசதி கிடையாது. இது சரிப்பட்டு வராதும்மா... நீ என் பையனை விட்டுட்டு, அப்பா சொல்ற இடத்துலயே கல்யாணம் பண்ணிக்கோ. எங்களுக்கு மருமகளா வரலைன்னாலும்... காலம் முழுசும் எங்க மகளா உன்னை நினைச்சுக்கிறோம்’னேன். அதுக்கு, 'நான், வினோத்குமார் மேல உயிரையே வெச்சிருக்கேன். வாழ்க்கைன்னு ஒண்ணு இருந்தா, அவரோடதான்!’னு பிடிவாதமா சொல்லுச்சு அனுஷா.

இந்தக் காதல் விவகாரம் சமீபத்துலதான் அனுஷாவோட அப்பா அப்பாராவுக்குத் தெரிய வந்திருக்கு. உடனே, அவசர அவசரமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிருக்கார். இந்தச் சூழல்ல யாருக்கும் தெரியாம, கடந்த 9-ம் தேதி அனுஷா என் பையன் தங்கி இருந்த வீட்டுக்குக் கிளம்பி வந்திருச்சு. அப்ப, வீட்ல இருந்தது என் சின்ன மகன் அசோக் மட்டும்தான். 'எனக்குக் கல்யாண ஏற்பாடு பண்றாங்க. இனி நான் எங்க வீட்டுக்குப் போக மாட்டேன்’னு அனுஷா அவன்கிட்ட சொல்ல... 'அண்ணன் வேலைக்குப் போயிருக்காங்க... நீங்க கீழ் வீட்ல இருங்க. அண்ணனை வரச் சொல்றேன்’னு சின்னவன் சொல்லி இருக்கான். ஆனா, அனுஷா கதவைப் பூட்டிட்டு, 'நான் போக மாட்டேன்’னு அந்த வீட்டுக்குள்ளயே இருந்திருக்கு. இந்தத் தகவலை வினோத்குமாருக்கு, அசோக் சொல்லி இருக்கான். அதுக்கு அப்புறமா, அனுஷா அப்பா அப்பாராவும் என் பையனும் சேர்ந்து வந்துதான் அந்தப் பொண்ணை சமாதானப்படுத்தி, அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. போகும்போதுகூட என் பையன்கிட்ட, 'எல்லாத்தையும் பேசிச் சரிபண்ணிக்கலாம்பா’ன்னு அப்பாராவ் சொல்லி இருக்கார்!

ஆனா, அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஜீரணிக்கவே முடியலை.

மறுநாள் காலையில என் பையன் வினோத்குமாரையும் அவன்கூட வேலை பார்க்கும் கனகவேல் என்கிற பையனையும் கடத்தல்காரர்கள்னும், கைது செஞ்சிட்டோம்னும் செய்தி பார்த்தப்ப, என் நெஞ்சே நின்னுருச்சு. அனுஷாவோட அப்பா பேச்சைக் கேட்டுட்டு, என் பையன் மேல் கடத்தல் வழக்கு ஜோடிச்சு, ஜெயில்ல தள்ளத் திட்டம் போட்டு இருக்காங்க. சேலையூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மேல் எங்களுக்கு நிறைய சந்தேகம் இருக்கு. இது உண்மையான கடத்தல் சம்பவமா இருந்தா, என் பையனும் அந்தப் பொண்ணும் காதலிச்ச விவகாரத்தையும், ஒண்ணாப் படிச்ச விவகாரத்தையும் போலீஸ் ஏன் திட்டமிட்டு மறைச்சது?'' என்று கேட்டவர்,

''என் பையனும் அனுஷாவும் சேர்ந்து எடுத்துக்கிட்ட இந்த போட்டோக்களை நீங்களே பாருங்க...'' என்றபடியே கொத்தாகப் பல்வேறு புகைப்படங்களை நம் முன் அள்ளிப் போட்டார்.

''என் பையன் குடியிருந்த ஏரியாவில் கேட்டுப் பாருங்க. யாரும் எந்தக் குறையும் சொல்ல மாட்டாங்க.

எதையுமே தீர விசாரிக்காமல், கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல், ஒருதலைப்பட்சமா போலீஸ்காரங்க செயல்பட்டதுதான் மகா கொடுமை. என் பையன் முகம் பத்திரிகைகள்ல வந்தா, இது காதல் விவகாரம்னு அப்பட்டமா தெரிஞ்சிடும்னுதான் திட்டமிட்டு அவனோட முகத்தை மூடி மீடியாவுக்குக் காட்டி, என் பையனைக் கடத்தல்காரனாச் சித்தரிச்சு அவன் வாழ்க்கையையே நாசம் பண்ணப் பார்க்கிறார் இன்ஸ்பெக்டர். பணம்னா... பிணத்தைக்கூட திம்பாங்கபோல! பெத்த வயிறு பத்தி எரியுது சார்! சும்மா விடப்போறது இல்லை!'' என்று கொந்தளித்தார் மனிதர்...

இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணனிடம் கேட்டபோது, ''நான் பணம் வாங்கிட்டு அப்பாராவுக்கு சாதகமா செயல்பட்டதா சொல்றது பொய். உண்மையிலேயே அந்தப் பையன் நல்லவன் கிடையாது. அனுஷா அப்பாகிட்ட பணம் பிடுங்குறதுதான் அவனோட குறிக்கோள். அனுஷாவைக் கடத்திவெச்சிக்கிட்டு, வண்டலூர்ல ஆரம்பிச்சு நாலு இடத்தை மாத்தி மாத்திச் சொல்லி, எங்களை அலையவிட்டான். கடைசியா, செம்பாக்கம் காட்டுப் பகுதியில் பணத்தை வாங்கிட்டு ஓடின வினோத்குமாரை நாங்க துரத்திப் பிடிச்சோம். அந்தப் பொண்ணு அனுஷாவே, 'என்னைக் கடத்திட்டுப் போனாங்க. அசிங்க அசிங்கமா செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாங்க’ன்னு தெளிவா மாஜிஸ்திரேட்கிட்ட வாக்குமூலம் கொடுத்து இருக்கு...'' என்றவரிடம், ''அனுஷாவும் வினோத்குமாரும் காதலர்கள் என்ற விவரத்தை ஏன் மறைத்தீர்கள்? அனுஷாவை நாம் சந்திக்க முடியுமா?'' என்று விடாமல் கேட்டபோது, சுதி குறைந்தவராகத் தொடர்ந்தார்.

''அப்படி எல்லாம் இல்லை. காதலிக்கிற மாதிரி காதலிச்சு, பொண்ணோட தந்தை அப்பாராவ்கிட்ட பணம் பிடுங்கத் திட்டம் போட்டுச் செயல்பட்டிருக்கான். அனுஷாவை உடனடியா நாங்க அவரோட பெற்றோரிடம் ஒப்படைச்சிட்டோம்!'' என்றதோடு முடித்துக்கொண்டார்.

அனுஷா வீட்டுக்குச் சென்றோம். வாசலில் பெரிய பூட்டுதான் வரவேற்றது. அங்கே இருந்த வாட்ச்மேனிடம் விசாரித்தபோது, ''யாரும் இல்லை சார். எல்லாரும் ஊருக்குப் போயிட்டாங்க...'' என்று மட்டும் சொன்னார்.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் 'பீப்பிள்ஸ் வாட்ச்’ அமைப்பு, நடந்தது என்ன என்று தீவிர விசாரணையில் குதித்திருக்க... கலக்கத்தில் தவிக்கிறது காக்கிகள் வட்டாரம்!

- தி.கோபிவிஜய், படம்: ஜெ.தான்யராஜு