Published:Updated:

நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை!

நித்தி'ஆனந்தா'!

நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை!

நித்தி'ஆனந்தா'!

Published:Updated:
##~##

ட்சி மாற்றம் நடந்ததில் உற்சாகமான​வர்​களில் ஒருவர் நித்தியானந்தா. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட தமிழகத்துக்குள் வந்தார். 

கடந்த 16-ம் தேதி, திருவண்ணாமலையில் உள்ள தனது ஆசிரமத்தில், சத்சங்கக் கூட்டம் நடத்தினார் நித்தியானந்தா. ''என் அன்புக்கு இனிய தமிழ் மக்களே...'' என்று பேச்சைத் தொடங்கியவர், '' என்னைப்பற்றி ஒரு சி.டி-யை வெளியிட்டார்கள். அதில் இருப்பது நான் இல்லை. அப்படியே இருந்தாலும் என்னைக் கேள்வி கேட்க வேண்டியது நீதிமன்றம்தான். எனக்கு மனம் அடங்கிவிட்டது, உடலும் அடங்கிவிட்டது. ஆனால், உனக்கு மனமும் அடங்கவில்லை; உடலும் அடங்கவில்லை. எங்களுடைய சாபம்தான் உங்களது ஆட்சி பறிபோயுள்ளது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் மீது எறியும் கல் என்னைக் காயப்​படுத்தும் என்று நினைத்தீர்கள். நான் அண்ணாமலை. அது, இந்த மலையை இன்னும் பெரியதாக்கிவிட்டது!'' என்று கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை மறைமுகமாகத் தாக்கிப் பேசி பக்தர்களை பீதி அடையவைத்தார்.

நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை!

''கடந்த ஆட்சியில் ரவுடியிஸம் அதிகமாக இருந்தது. இந்த ஆட்சியில் ரவுடியிஸம் இருக்காது!'' என்று வாக்குறுதியும் கொடுத்தார்.

அடுத்த நாள், நிருபர்களை சந்தித்த நித்தி​யானந்தா, ''ஒரு சதுர இன்ச் அளவுகொண்ட பொருளை (விபூதி, குங்குமம், அட்சதை) சக்தியாக மாற்றி, அதை 2,300 கி.மீ. தூரத்​துக்கு டிராவல் செய்யவைத்து, அதை மீண்டும் திருப்பிக் கொண்டுவரும் வித்தையை செய்துகொண்டு இருக்கிறேன். ஜூலை 15-ம் தேதி இன்டர்நேஷனல் மீடியா முன், இந்த வித்தையை செய்து காட்ட இருக்கிறோம்...'' என்றார். ''இப்போது அதைச் செய்து காட்ட முடியுமா?'' என்று கேட்டதற்கு, ''இப்போது செய்தால், நீங்கள் நம்ப மாட்டீர்கள்! ஆராய்ச்சியாளர்கள் முன் செய்து காட்டுவதுதான் சரியாக இருக்கும். இதில், மாயமோ மந்திரமோ இல்லை. மனோ சக்தியால் இதைச் செய்ய முடியும் என்று நிரூபிப்பேன். அதற்கு அடுத்து, நம்முடைய சித்தர்களின் யோகக் கலையையும், மருத்துவக் கலையையும் உலகுக்கு எடுத்துச் சொல்ல இருக்கிறேன்...'' என்றவரிடம் போலி சாமியார்கள்பற்றி கேட்கப்பட்டது.

''அரசியல் என்ற பெயரில் கொள்ளை, மீடியா என்ற பெயரில் ரவுடியிஸம், பிளாக்மெயில் நடப்பதைவிட, ஆன்மிகம் என்ற பெயரில் நடப்பது ரொம்ப ரொம்பக் குறைவு. என்னிடம் பணத்தைப் பிடுங்​கினார்கள். யார், எவ்வளவு என்பதை நீதிமன்றத்தில் சொல்வேன். என்னைப்பற்றி வெளியிடப்பட்ட சி.டி-யில், 8 இடங்​களில் மார்ஃபிங் செய்து உள்ளனர். எனக்கு எதிராகச் சாட்சி சொல்ல 20 கோடி பணமும், ஒரு எம்.எல்.ஏ. ஸீட்டும் தருவதாக ரஞ்சிதாவிடம் பேரம் பேசி இருக்கின்றனர். ஆனால், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.

இந்தியாவிலேயே, புகார் கொடுப்பவரின் பெயரே இல்லாமல் போடப்பட்ட கற்பழிப்பு வழக்கு என்னுடையதுதான். சன்னியாசிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏழு இடங்களில் சன்னியாசினிகளின் புடவையை உருவினார்கள். எல்லாவற்றுக்கும் வீடியோ ஆதாரம் உள்ளது. நாத்திகர்கள் வேறு; நாங்கள் வேறு. எங்களை ஏன் அட்டாக் பண்ணுகிறீர்கள்? என்னுடைய ஒழுக்கத்தைப்பற்றி சட்ட ரீதியாக நீதிமன்றம் கேட்கட்டும், சமூக ரீதியாக என் மதத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கேட்கட்டும். தான் பத்திரிகை ஆரம்பித்தால், அதில் யாருமே வரக் கூடாது. தான் டி.வி. தொடங்கினால், அந்த ஃபீல்டில் யாரும் வரக் கூடாது, தான் சினிமா தொழிலுக்குப் போனால், வேறு யாருமே வரக் கூடாது, நல்லவேளை... அந்தக் குடும்பத்தில் யாரும் சாமியார் ஆகவில்லை!'' என்றவரிடம், ''யார் அப்படிச் செய்தது?'' என்று கேட்டோம். ''எல்லாவற்றையும் நீதிமன்றத்தில் சொல்வேன். இப்போது சொன்னால், ஆதாரத்தை அழித்துவிடுவார்கள்!'' என்றார்.

ஆக, தி.மு.க. ஆட்சி மாற்றத்தால், அ.தி.மு.க-வினரைப் போலவே, நித்தி​யானந்தாவுக்கும் பரம ஆனந்தம்!

- கோ.செந்தில்குமார்

படம்: பா.கந்தகுமார்

அத்தனையும் உண்மை..!

நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை!

நித்தியானந்தா சொல்வது உண்மையா என, ரஞ்சிதாவிடம் கேட்டோம். ''சாமி என்ன பொய்யா சொல்வார்? அவர் சொல்றது அத்தனையும் உண்மைதான். என்னிடம் பேரம் பேசியது எந்தக் கட்சின்னு உலகத்துக்கே தெரியும். நான் வேற தனியா சொல்லணுமா? நான் பகிரங்கமா சொன்னா, எனக்குத் தேவை இல்லாத பிரச்னைகள் வரும். அதை சமாளிக்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. நான் உண்டு... என் வேலை உண்டுன்னு அமைதியா இருக்கேன்!'' என்றார்.

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism