Published:Updated:

போலீஸ் வலையில் திருச்சி தி.மு.க.!

போலீஸ் வலையில் திருச்சி தி.மு.க.!

போலீஸ் வலையில் திருச்சி தி.மு.க.!

போலீஸ் வலையில் திருச்சி தி.மு.க.!

Published:Updated:
##~##

.தி.மு.க. ஆட்சி அரியணையில் அமர்ந்த அடுத்த நிமிடமே, திருச்சியை கதிகலங்கச் செய்த துரைராஜ் கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்துவிட்டது! 

திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ், வையம்பட்டி அருகே தனது காரில் டிரைவர் சக்திவேலுடன் எரிந்த நிலையில் பிணமாகக்கிடந்த வழக்கையும், அதே தினத்தில் துரைராஜின் அண்ணன் தங்க​வேல், மணிகண்டம் என்ற இடத்தில் தனது தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில்இறந்து​கிடந்த வழக்கையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்து வருகிறார்​கள். நான்கு வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்த இந்த வழக்குகள், கடந்த ஆண்டு இறுதியில் திடீர் வேகமெடுத்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகரையும், அவரது சகோதரர் குடமுருட்டி

போலீஸ் வலையில் திருச்சி தி.மு.க.!

ஆறுமுகத்தையும் விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார், அடுத்தடுத்து அந்த ஏரியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள், புரோக்கர்கள் மற்றும் ரவுடிகள் சிலரையும் தங்களது விசாரணை வளையத்தின் கீழ் கொண்டுவந்தனர். தி.மு.க-வின் மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் பழனியாண்டியையும்  விசாரித்தனர். பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்துக் காத்திருக்க... விசாரணை சூடு பிடித்த வேகத்திலேயே, ஏனோ அடங்கிப்போனது.

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவை சந்தித்த துரைராஜின் மனைவி லீனாகுமாரி, ''என் வீட்டுக்காரரையும், அவரோட அண்ணனையும் அநியாயமாக் கொன்னுட்டாங்க. போலீஸ்காரங்க இத்தனை வருஷமா விசாரிச்சும், இன்னமும்

போலீஸ் வலையில் திருச்சி தி.மு.க.!

கொலையாளிகளைப் பிடிக்கலை. நீங்கதாம்மா இதுக்கு ஒரு தீர்வு சொல்லணும்!'' என்று வேண்டுகோள் வைத்தார். ''வருத்தப்படாதீங்கம்மா... அடுத்தது நம்மோட ஆட்சிதான். விரைவில் இந்த வழக்கை விசாரித்து குற்றவாளிகளை சிறையில் அடைப்பேன்...'' என்று உறுதி கொடுத்தார் ஜெயலலிதா.

சொன்னதுபோலவே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே, சம்பந்தப்​பட்ட வழக்கில் ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட ஆட்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டன. கடந்த 16-ம் தேதி குடமுருட்டி சேகர், அவரது சகோதரர்களான குடமுருட்டி ஆறுமுகம், கரிகாலன், பார்த்தசாரதி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது. மேலும் தி.மு.க. பிரமுகர்கள் சிலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

''சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் குறி... முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமான ஒரு முக்கியப் பிரமுகர்தான். அவரை நோக்கித்தான் மொத்த வழக்கின் விசாரணையும் செல்கிறது. அவரை வழக்கில் தொடர்புபடுத்தி வாக்குமூலம் வாங்குவதற்காகத்தான், தி.மு.க. பிரமுகர்கள் மீண்டும் மீண்டும் விசாரிக்கப்படுகிறார்கள்!'' என்கிறது போலீஸ் வட்டாரம்.

பார்ப்போம்!

- ஆர்.லோகநாதன்

படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism