Published:Updated:

புதுக்கோட்டையில் அமோக விற்பனை! - போலீஸாரிடம் சிக்கிய 6.4 டன் புகையிலைப் பொருள்கள்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், நகர்ப் பகுதியின் பல்வேறு பகுதிகளிலும் 6.4டன் (6390கிலோ) எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல்செய்தனர்.

புதுக்கோட்டையில், நகர்ப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நகர்ப் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த நிலையில்தான், போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் 6.4டன் (6,390கிலோ) எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல்செய்தனர். இவற்றை விற்பனைக்காக வைத்திருந்த முகமது அலி, வீரமணி நாராயணன், செளந்தர்ராஜன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். விற்பனைக்குப் பயன்படுத்திய ஆம்னி காரையும் போலீஸார் பறிமுதல்செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

இதுபற்றி போலீஸார் கூறும்போது, "தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருள்கள் அதிக அளவில் ஸ்டாக் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகத் தொடர்ந்து புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் ஆய்வுப் பணியை முடக்கிவிட்டோம். நகர்ப் பகுதியில் ஏராளமான இடங்களில் சோதனை செய்தோம். கடை மற்றும் குடோன்களில் கிலோ கணக்கில் இருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைசெய்யப்படுவது குறித்த தகவல் கிடைத்தால், காவல் நிலையத்தில் உடனே புகார் கொடுக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, ஆய்வு நடைபெறும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு