'சுமதி அன்பரசு ஆகிய உங்களை தமிழக மகிளா காங்கிரஸ் செயலாளராக நியமிப்பதில் பெரு

மகிழ்ச்சி அடைகிறேன். இப்படிக்கு... பிரபா தாக்கூர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர்!’ என்ற ரீதியில் முன்னாள் எம்.பி-யான அன்பரசுவின் மகள் சுமதி அன்பரசுக்கு, டெல்லியில் இருந்து கடந்த வாரம் ஒரு கடிதம் வர... ஆச்சர்யத்தில் மூழ்கிப்போன சுமதி அன்பரசு, உடனடியாக ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஜி.கே.வாசன், தங்கபாலு என அனைத்துத் தலைவர்களிடம் வாழ்த்துப் பெற்றார்!

இந்த நிலையில், சில நாட்களில் அதே பிரபா தாக்கூரிடம் இருந்து தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சாய்லட்சுமிக்கு, ''சுமதி அன்பரசு, தான் மகிளா காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி வருவதாகக் கேள்விப்பட்டேன். அதுபோன்ற நியமனக் கடிதம் எதுவும் வழங்கப் படவில்லை. அது

ஒரு போலிக் கடிதம். சுமதி அன்பரசுவை இதுவரை நான் சந்தித்ததே கிடையாது. எனவே, அந்தக் கடிதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்...'' என அந்தர்பல்டி அடித்து இன்னொரு கடிதம் வந்தது.

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி சாய்லட்சுமியிடம் தொடர்பு கொண்டோம்.. ''டிராவல்ல இருக்கேன். நானே உங்களைத் தொடர்புகொள்கிறேன்...'' என்றார். தொடர்பு கொள்ளவே இல்லை. மீண்டும் பல முறை அழைத்தும், ஏனோ லைனில் வரவே இல்லை.

சுமதி அன்பரசுவிடம் பேசியபோது, ''போன 6-ம் தேதி, எங்க வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'உங்களைத் தமிழக மகிளா காங்கிரஸ் செயலாளராக நியமிச்சு இருக்கிறோம். சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’னு பிரபா தாக்கூர் கையெழுத்துப் போட்டு அனுப்பி இருந்தாங்க. பதவியை எதிர்பார்த்து நான் காங்கிரஸுக்கு வரலை. ஆனாலும், அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். உடனடியா எல்லாத் தலைவர்களையும் நேரில் போய்ப் பார்த்து வாழ்த்து வாங்கினேன். இந்தச் சூழலில், அடுத்த நாள் பிரபா தாக்கூர் எனக்கு போன் பண்ணி, 'நான் எந்தக் கடிதமும் அனுப்பலை’ன்னு சொன்னார். 'இல்லை மேடம், நீங்கதான் அனுப்பி இருக்கீங்க’ன்னு சொன்னேன். 'உடனடியா டெல்லிக்கு வாங்க... அந்தக் கடிதத்தையும் எடுத்துட்டு வாங்க’ன்னு சொன்னாங்க. அதனால நான் டெல்லி போயிருக்கேன். நான் போலி கடிதம் வரவெச்சதா சொல்றது தப்பு. அப்படிப் பதவி வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏற்கெனவே எனக்கும் எங்க அப்பா, தம்பிகளுக்கும் நடக்கும் பிரச்னைகள் அனைவருக்கும் தெரியும். நான் அரசியல்லயே இருக்கக் கூடாதுன்னு திட்டம் போட்டு என்னைப் பழி வாங்குறாங்க. நான் மகிளா காங்கிரஸ் பதவிக்கு வந்ததைக் கேள்விப்பட்டதும் எரிச்சலான என் தம்பிங்க, எங்க அப்பாவுக்கு டெல்லியில் இருக்கும் செல்வாக்கை வெச்சு என் நியமன விவகாரத்தில் சிக்கலை ஏற்படுத்தப் பார்க்கிறாங்க. இந்தப் பிரச்னைக்கு காரணமும் அவங்கதான். இதை எல்லாம் மேலிடத்தில் தெளிவா சொல்லப்போறேன். அதே பதவியோட மீண்டும் திரும்புவேன்...'' என்றார்.