Published:Updated:

''போலீஸ்காரனைப் பத்தி எழுதுவியா?''

நிருபரைக் கொல்ல கூலிப்படை வைத்த கேரள டி.ஐ.ஜி.!

''போலீஸ்காரனைப் பத்தி எழுதுவியா?''

நிருபரைக் கொல்ல கூலிப்படை வைத்த கேரள டி.ஐ.ஜி.!

Published:Updated:
##~##

கூலிப்படையினரால் பத்திரிகை நிருபர் தாக்கப் பட்ட விவகாரத்தில் ஒரு போலீஸ் உயர் அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது கேரளாவில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மாத்ருபூமி பத்திரிகையின் கொல்லம் நிருபர் உன்னிதன். கடந்த ஏப்ரல் 16-ம் தேதி இரவு, கூலிப் படை ஒன்று இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. 'அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்’ என்று வழக்குப் பதிவு செய்த போலீஸ், மேற்கொண்டு விசாரணையில் ஆர்வம் காட்டவில்லை. கேரளப் பத்திரிகையாளர்கள் மாநில அளவில் போராட்டம் நடத்திய பிறகே, கேரள மாநில குற்றப்பிரிவு டி.ஐ.ஜி. ஸ்ரீஜித் தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டது. அந்தப் படை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''போலீஸ்காரனைப் பத்தி எழுதுவியா?''

விசாரணை செய்து, 'கன்டெய்னர்’ சந்தோஷ் என்பவரைக் கைது செய்தது. அவரோ, பாலக்காடு ஆயுதப்படை டி.எஸ்.பி. சந்தோஷ் நாயரை கைகாட்டினார். அதைத் தொடர்ந்து கிளம்பிய பரபரப்பில் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் தலையீடுகளை மீறி, டி.எஸ்.பி. சந்தோஷ் நாயர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். உன்னிதன் மீதான தாக்குதலும், கொலை முயற்சி வழக்காக மாற்றப் பட்டுள்ளது.

பத்திரிகையாளரை கொலை செய்யச் சொல்லும் அளவுக்கு, ஒரு போலீஸ் அதிகாரிக்கு அப்படியென்ன ஆத்திரம்...?

கேரள பத்திரிகையாளர்கள் தரப்பில் விசாரித் தோம்.

சாராயக் கடை கான்ட்ராக்டர் ஒருவர், 2009-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி கொல்லம் அரசு பயணியர் விடுதியில், நண்பர்களுக்கு மதுவிருந்து கொடுத்தார். டி.எஸ்.பி. சந்தோஷ் நாயர் உட்பட நான்கு போலீஸ்காரர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். இதுபற்றி, உன்னிதன் விரிவான செய்தியை எழுதவே, கேரளாவில் பற்றி எரிந்தது. இதைத்தொடர்ந்து, எழுக் கன் பகுதியில் சந்தோஷ் நாயர் பணிபுரிந்தபோது, கஞ்சிரக்கோட்டில் முறைகேடாக நிலம் வாங்கியதையும், விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டியதையும், மக்கள் கவனத்துக்கு உன்னிதன் கொண்டு வந்தார். சந்தோஷ் நாயர் மீது, துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. நிழல் போல தன்னைத் தொடர்ந்துவந்து, உண்மைகளைப் பத்திரிகையில் எழுதும் உன்னிதனை, ஒழித்துக்கட்ட சந்தோஷ் நாயர் துடித்துக் கொண்டிருந்தார்.

''போலீஸ்காரனைப் பத்தி எழுதுவியா?''

இந்த நிலையில்தான் பாலக்காடு ஆயுதப்படைக்கு சந்தோஷ் நாயர் மாற்றப்பட்டார். இதன்பின்னர், நாயரின் ஆத்திரம் அதிகம் ஆனது. தனது நெருங்கிய நண்பரான 'கன்டெய்னர்’ சந்தோஷை அணுகி ஒரு கூலிப்படையை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். பல கூலிப்படைகளை அணுகியும் நிருபர் மீது கை வைக்க யாரும் முன் வரவில்லையாம். 'ஹேப்பி’ ராஜேஷ் என்பவன் மட்டும், பணம் சற்று அதிகம் கொடுத்தால், தாக்குதல் நடத்துவதாகக் கூறியுள்ளான். ஆள் கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருந்த டி.எஸ்.பி. சந்தோஷ் நாயர், கட்டுக்கட்டாகப் பணத்தை அள்ளிக் கொடுத்துள்ளார். உன்னிதன் தாக்குதல் சம்பவத்தில் டி.எஸ்.பி. சந்தோஷ் நாயர் முக்கியக் குற்றவாளி என்பது, முதல்கட்ட விசாரணையிலேயே போலீஸுக்குத் தெரிந்து விட்டது. அதனால்தான், விசாரணையைக் கிடப்பில் போட்டனர். அதற்குப் பிறகு பத்திரிகையாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மாநில குற்றப்பிரிவு களம் இறங்கியது. அதற்குப் பிறகுதான் டி.எஸ்.பி. சந்தோஷ் நாயர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

''போலீஸ்காரனைப் பத்தி எழுதுவியா?''

டி.எஸ்.பி. கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்... ரவுடி 'ஹேப்பி’ ராஜேஷ், ஒரு ஆட்டோவுக்குள் செத்துக் கிடந்தான். பிரேத பரிசோத னையில், அவன் கொலை செய்யப்பட்டதாக

''போலீஸ்காரனைப் பத்தி எழுதுவியா?''

உறுதி யானது. 'உன்னிதன் வழக்குக்கும் இந்தக் கொலைக்கும் சம் பந்தம் இல்லை. ராஜேஷ் ஒரு கூலிப்படை தலைவன். அதனால், கூலிப்படைகளுக்கு இடையே நடந்த மோதலில் ராஜேஷ், கொலை செய்யப் பட்டு உள்ளான்’ என்று போலீஸ் சொல்கிறது. ஆனால், இதை நம்ப முடியவில்லை என்று சொல்லும் பத்திரிகை யாளர்கள், 'சந்தோஷ் நாயர் மட்டும் அல்ல... இன்னும் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் உன்னிதன் வழக்கில் தொடர்பு உள்ளது’ என்றும் கூறுகிறார்கள்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு, பேசும் நிலைக்கு வந்துள்ள உன்னிதனிடம் பேசினோம். ''உண்மையை எழுதினால் இந்த மாதிரி தாக்குதல் நடக்கும் என்று தெரிந்துதானே இந்தப் பணிக்கு வருகிறோம். இப்போதும்கூட எனக்கு எந்தப் பயமும் இல்லை. மறுபடியும் எப்போது வேலைக்குப் போகலாம் என்றுதான் ஏங்கிக் கொண்டு இருக்கிறேன். மாநிலம் கடந்தும் எனக்கு தோள் கொடுக்கும் பத்திரிகை உலகத் தோழர்களுக்கு நன்றி!'' என்று நெகிந்தார்.

கேரள முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் உம்மன் சாண்டி, ''கூலிப்படை வைத்து பத்திரிகையாளரை அடிக்கும் அளவுக்கு ஒரு போலீஸ் அதிகாரியே நடந்து கொண்டது சகிக்க முடியாத விஷயம். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதி கூறி இருக்கிறார்.

- எஸ்.ஷக்தி

படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism