Published:Updated:

ரிட்டையர்டு ஆன நடராஜ் மீண்டும் டி.ஜி.பி. ஆவாரா?

ரிட்டையர்டு ஆன நடராஜ் மீண்டும் டி.ஜி.பி. ஆவாரா?

ரிட்டையர்டு ஆன நடராஜ் மீண்டும் டி.ஜி.பி. ஆவாரா?

ரிட்டையர்டு ஆன நடராஜ் மீண்டும் டி.ஜி.பி. ஆவாரா?

Published:Updated:
##~##

'பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர்,மீண்டும் யூனிஃபார்ம் போட்டு பதவிக்கு வரப்போகி றாரா?’ என்ற பரபரப்பில் இருக் கிறது, தமிழக காவல்துறை வட் டாரம். கடந்த மே 30-ம் தேதி மத்திய நிர்வாக தீர்ப்பாணையம் அளித்த தீர்ப்பில், 'தமிழக காவல் துறைத் தலைவர்மற்றும்சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பதவியில் லத்திகா சரணை நியமித்த உத்தரவு ரத்து செய்து, அந்தப் பதவியில் நடராஜை நியமிக்க வேண்டும்’ என்று உத்தர விட்டு இருப்பதுதான் இந்தப் பரபரப் புக்குக் காரணம். 

முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஆர்.நடராஜையே காவல் துறைத் தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிப்பார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அ.தி.மு.க. அனுதாபி. ஜெயலலிதாவை புகழ்ந்து பொதுமேடையில் பேசியவர் என்பதைக் கருத்தில் கொண்டு அவரை நியமிக்க கருணாநிதி அரசு விரும்பவில்லை. அப்போது, காவல் துறைத் தலைவர் பதவியில் இருந்த ஜெயினை நீண்ட விடுப்பில் போகச் சொல்லிவிட்டு, லத்திகா சரணை அந்தப் பதவிக்கு நியமித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிட்டையர்டு ஆன நடராஜ் மீண்டும் டி.ஜி.பி. ஆவாரா?

இதைக் கண்டு அதிர்ச்சியான நடராஜ், உடனே நீதிமன்றத்தை அணுகி, 'எனக்குத்தான் எல்லாத் தகுதியும் இருக்கிறது. என்னைப் புறக்கணித்தது தவறு' என்று வாதாடினார். முதலில் நடரா ஜுக்கு ஆதரவாகவும், பிறகு எதிர்ப்பாகவும் தீர்ப்புகள் வந்தது. இதன் அடிப்படையில், லத்திகா சரணையே காவல் துறைத் தலைவர் பதவியில் நியமித்தது தமிழக அரசு. இதையும் எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாணையத்தில் வழக்குப் போட்டார் நடராஜ். இந்தச் சூழ்நிலையில், சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது  தேர்தல் கமிஷன், லத்திகா சரணை விடுமுறையில் போகச் சொல்லியது. அவரும் விடுப்பில் போனார். சம்பந்தப்பட்ட பதவியை கூடுதலாக கவனித்துக்கொள்ளும்படி போலோநாத் பணிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து அ.தி.மு.க. ஜெயித்து வந்ததும், போலோநாத் வேறு பதவிக்கு மாற்றப்பட்டார். அதே நேரத்தில், லீவு முடிந்து பணிக்கு வந்த லத்திகா சரண், ஏனோ மீண்டும் ஒரு மாதம் லீவில் போய்விட்டார். ஆக, காவல் துறைத் தலைவர் பதவி காலியாகத்தான் இப்போது இருக்கிறது. உளவுத்துறை டி.ஜி.பி.யான ராமானுஜம், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

ஆர்.நடராஜ் தொடுத்த வழக்கின் பின்னணி இதுதான்!

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரிட்டயர்டு டி.ஜி.பி-யான பிரகாஷ் சிங், 1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், 'இந்திய போலீஸ் நிர்வாகத்தில் சீர் திருத்தம் செய்ய வேண்டும்’ என்று பொதுநல வழக்கு ஒன்றை போட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கோரிக்கையைத் தீவிரமாக பரிசீலித்த உச்ச நீதிமன்றம், சீர்திருத்த வழிகாட்டுதல்களை 2006-ல் அறிவித்து, அவற்றை மாநில அரசுகள் ஏற்று செயல்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அந்த வழிகாட்டுதலில், மாநில அளவில் காவல்துறை தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பதவியில் நியமிக்கப்படுகிறவர்கள், ஓய்வு வயதை எட்டினாலும்இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடிக்க வழிவகை செய்துள்ளது.

ரிட்டையர்டு ஆன நடராஜ் மீண்டும் டி.ஜி.பி. ஆவாரா?

அந்த வழிகாட்டுதல்படி, லத்திகா சரணை நியமித்த உத்தரவை ரத்து செய்து, அந்த தேதி முதல் தன்னை அந்தப் பதவியில் நியமிக்கவேண்டும் என்பதை நடராஜ் தனது கோரிக்கையாக நீதிமன்றத்தில் வாதாடினார்.  

அரசு அதிகாரிகள் சம்பந்தமான நிர்வாகச் சட்ட நிபுணரான என்.எஸ்.நந்தகுமாரிடம், ''ரிட்டயர்டு ஆன நடராஜை மீண்டும் நம்பர் ஒன் போலீஸ் பதவியில் உட்காரவைக்க முடியுமா?'' என்று கேட்டோம்.

''நிச்சயமாக முடியும். பிரகாஷ் சிங் வழக்குத் தீர்ப்பே இதற்கு முன் உதாரணம். இந்தத் தீர்ப்பு அடிப் படையில்தான் நடராஜ் நீதிமன்றம் போனார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, மத்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தரப்பில் தகுதி உள்ள டி.ஜி.பி-கள் மூன்று பெயர்களை, ரேங்க் படி வரிசைப்படுத்தி பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பியது. இதை பரிசீலித்த முந்தைய தமிழக அரசு, முதல் ரேங்கில் இருந்த நடராஜை வேண்டும் என்றே புறக்கணித்து, மூன்றாம் ரேங்கில் இருந்த லத்திகா சரணை 27.11.2010 தேதியில், சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவியில் நியமித்தது. இதே தேதியில், வேறு ஒரு போலீஸ் பிரிவில் நடராஜ் மூத்த டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கிறார். 31.03.2011 அன்று ரிட்டயர்டு ஆகும் தேதி குறுக்கிட்டது. பதவி உயர்வு தொடர்பான அவருடைய வழக்கு, மத்திய தீர்ப்பாணையத்தில் நிலுவையில் இருந்ததை அரசு மறக்கவில்லை. அதன் முடிவுகளை எதிர்நோக்கித்தான் இத்தனை நாளும் காத்திருந்தார். எனவே, இடையில் வந்த ரிட்டயர்டு தேதி, சட்டப்படி செயல் இழந்துவிடுகிறது. எனவே, 27.11.2010 தேதி முதல், இரண்டு ஆண்டுகளுக்கு நடராஜ் காவல் துறைத் தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பதவி வகிக்க தகுதி உடையவர். எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை இவர்கள் அமல்படுத்தியாகவேண்டும்!'' என்றார்.  

தமிழக போலீஸின் சீனியர் அதிகாரி ஒருவர், ''பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு விவரங்கள் எங்களுக்கும் தெரியும். அதைத் தமிழக அரசு முறைப்படி சட்டமாக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லையே! ஒருவேளை, வழக்கு போடுவதற்கு முன்பே ஏற்றுக்கொண்டு இருந்தால், நடராஜ் நிச்சயமாக இப்போது யூனிஃபார்ம் போடலாம். 'அந்தத் தேதியில்... அந்தப் பதவியில் என்னை நியமித்து இருத்தால்..?' என்கிற யூகங்களின் அடிப்படையில் நடராஜ் வாதாடுவது சரியல்ல! பண ரீதியான சலுகைகளை அவர் பெறுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், யூனிஃபார்ம் போடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரும் இதுவரை நடக்காத ஒன்றுக்கு ஆசைப்படுவது ஆச்சர்யமாக உள்ளது. சீருடை பணியாளர் வாரியத் தலைவர், காவலர் வீட்டு வசதி வாரியம்... போன்ற யூனிஃபார்ம் அணியாத பதவிகள் தமிழக அரசு வசம் உள்ளன. அந்த மாதிரி ஏதாவது பதவிகளில் நடராஜை நியமிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை!'' என்கிறார்கள்.

இது தொடர்பாக முதல்வரிடம் நிருபர்கள் கேட்ட போது, ''அரசு பரிசீலனை செய்து வருகிறது!'' என்றார். என்ன செய்யப்போகிறது அரசு?

- சூர்யா

படம்: கே.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism