Published:Updated:

ஏமனில் கதறும் தமிழக நர்ஸுகள்..

எனது வலது காலுக்கு கீழே குண்டு விழுந்தது!

ஏமனில் கதறும் தமிழக நர்ஸுகள்..

எனது வலது காலுக்கு கீழே குண்டு விழுந்தது!

Published:Updated:
##~##

துனிஷியா, எகிப்து, லிபியா என ஒவ்வொரு நாடாக வெடித்துக் கிளம்பிய புரட்சி, ஏமன் நாட்டையும் விட்டுவைக்கவில்லை. கடந்த 33 ஆண்டுகளாக அதிபர் பொறுப் பில் இருந்து வரும் அலி அப்துல்லா சலே-வை பதவி விலக வலியுறுத்தி, கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் குதிக்க... அங்கு வேலை செய்யும் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 1,000 நர்ஸ்கள், சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவிக் கிறார்கள்! 

ஏற்கெனவே, அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் சொர்க்கபுரியாக இருப்பது ஏமன். இந்நிலை யில், அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையில் குண்டு வீச்சு, துப்பாக்கி சூடு என ஆயுதப் போராட்டம் நடப்பதால் பொதுமக்களும், மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களும் அரண்டுபோய் பீதியோடு இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏமன் தலைநகர் சானா நகரில் இருந்து நம்மிடம் தொலை பேசியில் பேசிய பிரியா என்பவர், ''எனது

ஏமனில் கதறும் தமிழக நர்ஸுகள்..

சொந்த ஊர் நெல்லை. எட்டு மாசங்களுக்கு முன்பு இங்கு நர்ஸ் வேலைக்கு வந்தேன். மாசம்

ஏமனில் கதறும் தமிழக நர்ஸுகள்..

25 ஆயிரம் சம்பளம். ராணுவ தலைமை மருத்துவமனையில்தான் எங்களுக்கு வேலை. திடீர்னு ஒரு வாரத்துக்கு முன்பு அதிபருக்கு எதிரான கிளர்ச்சி தீவிரம் அடைஞ்சது. இப்போ அது கடும் மோதலா மாறிடுச்சு. மருத்துவமனையை விட்டு  வெளியே போகக் கூட  முடியலை.காயம்பட்ட ராணுவத்தினருக்கு இங்கே சிகிச்சை கொடுக்கிறதால, மருத்துவமனையை தாக்குறாங்க. துப்பாக்கி சூடு நடத்துறாங்க. அதனால, உயிருக்கு உத்தரவாதம் இல்லாம இருக்கோம்...'' என்று விம்மினார்.

அனிதா என்பவர், ''மூணு நாளுக்கு முன்பு தாக்குதல் நடத்தினப்ப, கட்டிலுக்கு அடியில் ஒளிஞ்சிருந்தேன். அப்போ எனது வலது காலுக்கு அருகில் ஒரு குண்டு விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எனக்கு எதுவும் ஆகலை. இன்னிக்கு வரைக்கும் மின்சாரம் இல்லை. எங்களுக்குத் தேவையான சாப்பாடு, குடிநீர் வெளியில் இருந்து ராணுவ வாகனத்தில்தான் வரும்.  அந்த வாகனங்களை கிளர்ச்சியாளர்கள் தாக்குறாங்க. இதனால, எதுவும் கிடைக்காம தவிக்கிறோம். உயிரோட ஊருக்கு திரும்புவோமான்னு எங்களுக்குத் தெரியலை...'' என்று கதறினார்.

தமிழக நர்ஸுகளை மீட்கும் முயற்சியில் இருக்கும் நெல்லை எம்.பி-யான ராமசுப்புவிடம் பேசியபோது, ''பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விவரத்தை விளக்கி விட்டேன்.  அதோடு, வெளியுறவுத் துறை மற்றும் அந்நாட்டில் இருக்கும் தூதரகம் ஆகியவற்றையும் தொடர்புகொண்டு நர்ஸ்களைப் பத்திரமாக மீட்கக் கோரினேன். முதல் கட்டமாக அவர்களுக்கு உணவும், தண்ணீரும் கிடைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. ஏமன் நாட்டில் 10,000-க்கும் அதிகமான இந்தியர்கள் இருக்கிறார்கள். ராணுவ மருத்துவமனையில் நர்ஸுகளின் தேவை அதிகம் இருப்பதால், அந்நாட்டு அரசு அவர்களை அனுப்பாமல் காலம் கடத்துக்கிறது. இதனால் ஐ.நா. கூட்டுப் படையில் இருக்கும் இந்திய வீரர்களை ஏமனுக்கு அனுப்பி, நர்ஸுகளை மீட்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் அனைவரும் மீட்கப்படுவார்கள்!'' என்றார் நம்பிக்கையுடன்.

- ஆண்டனிராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism