Published:Updated:

வீடியோ தயாரித்தாரா ஆர்த்தி ராவ்?

ரஞ்சிதா விவகாரத்தில் புதிய அறிமுகம்

வீடியோ தயாரித்தாரா ஆர்த்தி ராவ்?

ரஞ்சிதா விவகாரத்தில் புதிய அறிமுகம்

Published:Updated:
##~##

நித்யானந்தாவுடன் சேர்த்துப் பரபரப்​பாகப் பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா சம்பந்தப்​​பட்ட வீடியோ குறித்து தொடர்ந்த வழக்கு, நீதிமன்ற விசாரணையில் மீண்டும் அனல் கக்குகிறது! 

நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா இருப்பதுபோன்றஒரு வீடியோ, கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த லெனின் கருப்பன், அந்த வீடியோவை வெளியிட்டார். கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ''நான் சுவாமி நித்யானந்தாவுடன் இருப்பதைப்போன்ற மாஃர்பிங் செய்யப்பட்ட வீடியோவை வைத்து, லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ், வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் பணம் கேட்டு என்னை மிரட்டினார்கள். நான் பணம் கொடுக்க சம்மதிக்காததால், அந்த வீடியோவை வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்​தினார்கள். எனவே, அந்த மூன்று நபர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என வழக்குத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடியோ தயாரித்தாரா ஆர்த்தி ராவ்?

தொடர்ந்தார் ரஞ்சிதா.

வழக்கின் விசாரணை கடந்த நான்காம் தேதி, நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் ஆகஸ்ட் முதல் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

ரஞ்சிதாவால் குறிப்பிடப்பட்ட ஆர்த்தி ராவ், இதுவரை நித்யானந்தா விவகாரத்தில் வெளியே தெரியாதவர். யார் அந்த ஆர்த்தி ராவ்?

''ஆர்த்தி ராவுக்கு சொந்த ஊர் சென்னை. இன்ஜினியரிங் படித்தவர். ஆசிரமத்துக்கு வருவதற்கு முன்பே லெனின் கருப்பனின் தோழி. லெனின் மூலமாகத்தான் ஆசிரமத்துக்கு வந்து, சுவாமியின் தீவிர பக்தரானார்.

சில வருடங்களுக்கு முன் திருமணமான ஆர்த்தி, அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அதன் பிறகும், ஆசிரமத் தொடர்பில்தான் இருந்தார். சுவாமி மீது பக்தி இருந்தாலும், அதையும் தாண்டி லெனின் கருப்பனுடன் இருந்த நட்பினால்... அவர் போட்ட திட்டத்துக்கு ஆர்த்தி உடந்தையாக இருந்தார். பிரச்னையைக் கிளப்பிய வீடியோவை உருவாக் கியதில் ஆர்த்திக்கு முக்கியப் பங்கு இருக்கிறது...'' என்கிறார்கள் ஆசிரம வட்டாரத்தில்.

வீடியோ தயாரித்தாரா ஆர்த்தி ராவ்?

ரஞ்சிதா என்ன சொல்கிறார்? ''ஆரம்பத்தில் இருந்தே அது மாஃர்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று சொல்லி வந்தேன். அந்த வீடியோவை உருவாக்கியதில் ஆர்த்தி ராவுக்குப் பெரும் பங்கு உண்டு. அமெரிக்காவில் இருக்கும் ஆர்த்தி ராவ் உதவியோடுதான் லெனின் கருப்பன் அந்த வீடியோவைத் தயாரித்தார். வீடியோ வெளியாவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன், சுவாமியின் ஒரு கூட்டத்தில் அந்த ஆர்த்தி என் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார். கூடவே இருந்து குழி பறிக்கக்கூடிய பெண் என எனக்கு அப்போது தெரியாது.

மாஃர்பிங் செய்யப்பட்ட வீடியோவைவைத்து, லெனின் கருப்பனும் வழக்கறிஞர் ஸ்ரீதரும் சேர்ந்து​தான் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள். நான் எந்த தப்பும் செய்யவில்லை. அப்புறம் எதற்காக

வீடியோ தயாரித்தாரா ஆர்த்தி ராவ்?

பயப்படணும்? அதனால், அவங்க மிரட்டலை நான் ஒரு பொருட்டாவே எடுத்துக்கொள்ளவில்லை. என்னோட பேரை டேமேஜ் பண்ணும் ஒரே நோக்கத்தில் வீடியோவை வெளியிட்டாங்க. ஒரு பெண்ணாக, என் நிலையில் இருந்து அந்த சூழ்நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எப்படிப்பட்ட அவமானங்களை எல்லாம் சந்திக்கக் கூடாதோ... அவ்வளவும் நான் சந்தித்​தேன். இதற்கு, அந்த மூணு பேரும் பதில் சொல்லியே ஆகணும். எத்தனை வருடங்கள் ஆனாலும், உண்மை ஜெயிக்கும்!'' என்று படபடவெனப் பேசினார்.

ஆர்த்தி ராவ், இப்போது அமெரிக்காவில் இருக்கிறாராம். அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ள நிலையில்... ஆர்த்தி ராவ் தரப்பினரோ, இதை முற்றிலும் மறுக்கின்றனர். ''ஆரம்பத்தில் ஆர்த்தி, நித்யானந்தாவின் பக்தையாக இருந்தது உண்மை. எப்போது ஆசிரமத்தில் தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சதோ... அப்பவே ஆசிரமத்துக்குப் போவதை நிறுத்திட்டாங்க. மத்தபடி அவங்களுக்கும் அந்த வீடியோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவைப்படும்பட்சத்தில், நீதிமன்றத்தில் எல்லா உண்மைகளையும் சொல்வோம்...'' என்கிறார்கள்.

லெனின் தரப்பும் இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறது.

ரஞ்சிதா குறிப்பிடும் வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் பேசினோம். ''எனக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவங்க சொல்ற லேடி யாருன்னே எனக்குத் தெரியாது. தேவை இல்லாமல், என் பேரை இழுத்து இருக்காங்க. இதுவரைக்கும் எனக்கு எந்த சம்மனும் வரலை, வந்தால், சட்டப்படி சந்திப்பேன்!'' என்றார்.

ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, வீடியோவை வைத்து யாரெல்லாம் மிரட்டினார்கள்? தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்படி எல்லாம் பணம், பதவி ஆசை காட்டி, நித்யானந்தாவுக்கு எதிராகப் பேசவைக்க முயற்சி செய்தார்கள் என்பதை நித்யானந்தா தரப்பில் நீதிமன்றத்தில் பகிரங்கமாகவே சொல்ல இருக்கிறார்களாம். இது விஷயமாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, உதவி கேட்கவும் வழி தேடுகிறார்கள்!

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism