Published:Updated:

எப்போதும் ஒரு தோட்டா மிச்சம் இருக்கிறது!

தொடரும் 'மீடியா அட்டாக்'!

எப்போதும் ஒரு தோட்டா மிச்சம் இருக்கிறது!

தொடரும் 'மீடியா அட்டாக்'!

Published:Updated:
##~##

''பாகிஸ்தான் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இலியாஸ் காஷ்மீரி, இந்தியாவில் மிக வலிமையான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டார். அதன்படி, 'இந்தியா - பாகிஸ் தானுக்கு இடையே போரை மூட்டி, அதன் மூலம் அல்-கொய்தாவுக்கு எதிரான அத்தனை எதிர்ப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவர முடியும்!’ என்று சொன்னார். காஷ்மீரி கூறியதை, அல்-கொய்தாவின் தலைமை ஆமோதித்தது!'' 

- இப்படிப் போகிறது 'அல்-கொய்தா மற்றும் தாலிபன் - பின்லேடன் மற்றும் 9/11-க்குப் பிறகு’ என்கிற புத்தகம். 26/11 மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் அல்-கொய்தாவினர்தான். அதற்கு வழிவகை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்போதும் ஒரு தோட்டா மிச்சம் இருக்கிறது!

அமைத்துக் கொடுத்தவர்கள் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. இந்த அதிர்ச்சிகரமான உண்மையை தனது புத்தகத்தின் மூலம் வெளிப்படுத்தினார் என்பதற்காகவே, பாகிஸ்தான் நாட்டின் புலனாய்வுப் பத்திரிகையாளர் சையத் சலீம் சஷாத் கொல்லப்பட்டு இருக்கிறார்!

சஷாத் கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்புதான் அந்தப் புத்தகம் வெளியானது.

யார் இந்த சஷாத்?

ஹாங்காங் நாட்டின் 'ஆசியா டைம்ஸ் ஆன்லைன்’ எனும் இணைய இதழ் மற்றும் இத்தாலியின் 'அட்க்ரோனோஸ்’ ஆகிய இதழ்களுக்காக, பாகிஸ்தானில் புலனாய்வுப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் இந்த சஷாத்.

உலக அளவிலான பாதுகாப்புப் பிரச்னைகள், பாகிஸ் தான் ராணுவத்தின் தப்புத் தாளங்கள், இஸ்லாமிய இயக்கங்கள், இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள் பற்றி தொடர்ந்து எழுதினார். அல்-கொய்தா மற்றும் தாலிபன் பற்றி இவர் எழுதியவை... அந்த நாட்டின் ஆட்சி யாளர்களுக்குப் பிடிக்கவில்லை. மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஐரோப்பா எனப் பல இடங்களிலும் சுற்றி, இந்த இயக்கங்கள்பற்றி தகவல்களைச் சேகரித்து செய்தி ஆக்கினார் சஷாத். இவரது செய்திகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 'டெய்லி டைம்ஸ்’, 'தி நேஷன்’, 'தி போஸ்ட்’ பத்திரிகைகளில் முக்கியப் பங்கு வகித்தன. 2006 நவம்பர் மாதம் தாலிபன்கள் இவரைப் பிடித்துச் சென்று ஆப்கானிஸ்தானில் சில நாட்கள் வைத்திருந்தனர். அந்த நாட்களின் அனுபவத்தை 'தாலிபன்களின் நிலத்தில்...’ என்று எழுதினார். அப்போதும், அவரின் எழுத்துகள் பரபரப்பாகப் பேசப்பட்டன!

கடந்த மே 29, 2011 அன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கத் தயாராக இருந்தவரின் செல்போன் 5.42 மணிக்கு அணைக்கப்பட்டது. தொலைக்காட்சி நிலையத்துக்கும் செல்லவில்லை. அடுத்த நாள் காலை, காவல் துறையில் புகார் செய்யப்பட... மே 31-ம் தேதி அவரின் சடலம் கிடைத்தது. அவர் கொல்லப்பட்டார் என்பதற்கான அடையாளங்கள் தெளிவாக இருக்கின்றன. ஆனால்... கொன்றவர்கள் யார்? தாலிபனா, அல்-கொய்தாவா, ஐ.எஸ்.ஐ-யா அல்லது பாகிஸ்தான் ராணுவமா?

எப்போதும் ஒரு தோட்டா மிச்சம் இருக்கிறது!

பாகிஸ்தான் கப்பல் படையில் உள்ள ஓர் உயர் அதிகாரிக்கும், அல்-கொய்தாவுக்கும் இடையே இருந்த உறவை வெளிப்படுத்தியதற்காக, சஷாத் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார் என்கின்றன சர்வதேசச்

எப்போதும் ஒரு தோட்டா மிச்சம் இருக்கிறது!

செய்திகள். கராச்சியில் இருந்த மெஹ்ரான் கப்பல் படைத்தளம் எவ்வாறு அந்த உயர் அதிகாரியின் துணையுடன் நிறைவேற்றப்பட்டது என்பதை சஷாத் வெளிப்படுத்தி இருந்தார். 'அதிகம் தெரிந்துவைத்து இருப்பது’ அவருக்கு ஆபத்தாக முடிந்துவிட்டது என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.

தனது புத்தகத்தில், 26/11 மும்பைத் தாக்குதல்கள் ஐ.எஸ்.ஐ-யால் திட்ட மிடப்பட்டு, அல்-கொய்தாவால் அங்கீ கரிக்கப்பட்டு, லஸ்கர்-ஐ-தொய்பாவால் நிறைவேற்றப்பட்டது என்பதை சஷாத் விளக்கி இருக்கிறார். இந்தியாவில் இந்தப் புத்தகம் இன்னும் வெளிவராமல் இருப்பதே, பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும், அல்-கொய்தாவினருக்கும் இடையே இருக்கும் தொடர்பை எடுத்துக்காட்டும் சான்று!

கடந்த ஆண்டு, 'ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்’ என்ற இதழில், தான் எழுதிய கட்டுரை ஒன்றில், 'எப்போது வேண்டுமானாலும், ஐ.எஸ்.ஐ. என்னைத் தாக்கும்’ என்று எழுதி இருந்தார். நிச்சயமாக, இவரின் இறப்புக்கு ஐ.எஸ்.ஐ-தான் காரணம் என்று நம்புகிறார்கள் சர்வதேசப் பத்திரிகையாளர்கள்.

கொலைக் களத்தில் போராடும் ராணுவ வீரனுக்கு ஒப்பானவன் பத்திரிகையாளன். செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளனோ, சுதந்திரப் பத்திரிகையாளனோ... யாராக இருந்தாலும், அவனுக்குப் பின்னால் எப்போதும் ஓர் ஆபத்து பின்தொடர்ந்தே இருக்கும். அதிலும் அரசை எதிர்த்து, அரசின் போக்கைக் கண்டித்து எழுதும் பத்திரிகையாளனைக் கொல்ல, எப்போதும் ஒரு தோட்டா மிச்சம் இருக்கிறது அரச பயங்கரவாதத்தின் கரங்களில்!

'உலக அளவில் 39 சதவிகிதம் பத்திரிகை யாளர்கள், அரசியல் சார்ந்து பல உண்மை களை வெளிக்கொண்டு வந்ததால்தான் கொல்லப்பட்டனர்’ என்கிறது 'கமிட்டி டு ப்ரொடெக்ட் ஜர்னலிஸ்ட்ஸ்’ என்கிற அமைப்பு.

இப்படி அநீதிக்கு எதிரான கருத்தைப் பதிவு செய்யும் பத்திரிகையாளர்களைக் கொல்வது, 'கருத்துரிமை’யைப் பறிக்கும் செயல். ஒரு வகையில், இந்தக் கொலையும், சமூகத்தை ஊமையாக்கும்... ஊனமாக்கும் முயற்சியே!

- ந.வினோத்குமார் 

'பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு’ அறிக்கையின் படி...

20 நாடுகள், பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கின்றன. அதில், இந்தியாவும் ஒன்று!

 2011-ம் ஆண்டின், 'இம்யூனிட்டி இன்டெக்ஸ்’ பட்டியலின்படி, தெற்கு ஆசியாவில் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று!

 39 சதவிகிதப் பத்திரிகையாளர்கள் அரசியல் உண்மைகளை வெளிப்படுத்தியதாலும், 34 சதவிகிதம் பேர் யுத்த களத்திலும், 21 சதவிகிதப் பத்திரிகையாளர்கள் ஊழலை வெளிக்கொண்டு வந்ததற்காகவும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism