Published:Updated:

பொன்னர் - சங்கர் தலித் சமுதாயத்தினரா?

திருமாவளவனுடன் மோதும் கொங்கு

பொன்னர் - சங்கர் தலித் சமுதாயத்தினரா?

திருமாவளவனுடன் மோதும் கொங்கு

Published:Updated:
##~##

'அண்ணன்மார் சாமிகள்’ என்று அழைக்கப்​படும் பொன்னர் - சங்கர் சகோதரர்களை, தங்களது குலதெய்வங்களாகக் கொண்டாடு​கிறது கொங்கு வேளாள கவுண்டர் இனம். இந்த நிலையில், தனது நூலில் அந்த சகோதரர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஒரு கருத்தைத் தட்டிவிட, விவகாரம் இப்போது நீதிமன்றப் படிகளில்! 

கருணாநிதியின் கதை - வசனத்தில் பிரசாந்த் நடிக்க 'பொன்னர் - சங்கர்’ திரைப்படம் தயாரானபோது, கோவை வழக்கறிஞர் லோகநாதன், 'பொன்னரும் சங்கரும் தங்கள் ஜோடிகளுடன் டூயட் பாடுவதுபோல் காட்சிகள் வருகின்றன. எங்கள் தெய்வங்களை கமர்ஷியல் ஹீரோக்கள் ஆக்கிக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொன்னர் - சங்கர் தலித் சமுதாயத்தினரா?

கேவலப்படுத்தாதீர்கள். தெய்வக் குற்றம் சும்மாவிடாது!’ என்று பொங்கினார். அதே நபர்தான் திருமாவளவனுக்கு எதிராகவும் இப்போது நீதிமன்றம் போயிருக்கிறார். திருமாவளவனை ஜூலை 1-ம் தேதி, ஆஜராகும்படி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

கொந்தளிப்பில் இருக்கிறார் லோகநாதன்... ''பொன்னர் - சங்கர் இருவரும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதியும், நா.மகாலிங்கமும், அண்ணன்மார்கள் பற்றி எழுதிய புத்தகங்களும் அதற்கு சாட்சி. ஆனால், திருமாவளவனோ அவர்களை தலித் சகோதரர்கள் என்று சொல்லி, பிரச்னையைக் கிளப்புகிறார்!

பல இடங்களில் திருமாவளவன் இப்படிப் பேசியதை​யும், விடுதலைச்

பொன்னர் - சங்கர் தலித் சமுதாயத்தினரா?

சிறுத்தைகள் பத்திரிகையில் அவர் எழுதியதையும் 'அப்ரூட் இந்துத்வா’ (இந்துத்துவத்தை வேர் அறுப்போம்) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தொகுத்து இருக்கிறார் எழுத்தாளர் மீனா கந்தசாமி. 16 அத்தியாயங்கள்கொண்ட இந்தப் புத்தகத்தின் 10-வது அத்தியாயத்தில்தான், திருமாவின் வஞ்சகத்தனம் வெளிப்படுகிறது. பொன்னர் - சங்கர் இருவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 'தங்களது சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடியதால் கடவுள்களாக வழிபடப்படுகிறார்கள்’ என்றும் கூறுகிறார் திருமா.

பொன்னர் - சங்கர் தலித் சமுதாயத்தினரா?

இரண்டு சமுதாய மக்களும் சுமுக​மாக வாழும் நேரத்தில், ஏன் இந்த வீண் வம்பை வளர்க்கிறார் திருமா? எங்களின் கடவுள் வரலாற்றை ஏன் மாற்ற வேண்டும்? தலித் சமுதாய தெய்வங்​களின் வரலாற்றை நாங்கள் திருத்தி எழுதினால், திருமா பொறுப்​பாரா? இல்லை அந்த மக்கள்தான் பொறுப்பார்களா? சில மாதங்களுக்கு முன்பே இது சம்பந்தமாக திருமாவுக்கும், மீனா கந்தசாமிக்கும் நான் நோட்டீஸ் விட்டேன். ஆனால், இதுவரை பதில் இல்லை. அதனால்தான் சட்ட நடவடிக் கையில் இறங்கி இருக்கிறேன்.  திருமாவளவன் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதோடு, அந்தப் புத்தகத்தில் திரித்து எழுதி இருக்கும் கருத்தை நீக்க வேண்டும்!'' என்று டாப் கியரில் எகிறினார்.

திருமாவளவனிடம் இது குறித்துக் கேட்டோம். ''குல தெய்வ வழிபாடு குறித்த என்னுடைய கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் மீனா கந்தசாமி. பொன்னர் - சங்கரை 'தலித்’ என்று குறிப்பிட்டது சாதிய அடிப்படையில் அல்ல. பார்ப்பனர் அல்லாத பிற உழைக்கும் மனிதர்கள் யாவரும், கட்டுப்பாட்டுக்கும் அடக்குமுறைக்கும் ஆளான விளிம்பு நிலை மனிதர்கள் அனைவருமே 'தலித்’தான். இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, சாதியக் கண்ணோட்டத்தோடு அதைப் பார்க்கக் கூடாது. பொன்னரும் சங்கரும் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவாதத்துக்கே நான் வரவில்லை. என் எண்ணம் இப்படி இருக்க, 'எங்கள் சாமியை தலித் என்று சொல்லி கேவலப்படுத்திவிட்டாயே...’ என்று அவர் சொல்வது அவரது ஆதிக்க சாதி கண்ணோட்டத்தைத்தான் காட்டுகிறது. எப்போது மாறுமோ இந்த பேதமிகு சமுதாயம்?'' என்று வருத்தம் காட்டினார்.

நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்!

- எஸ்.ஷக்தி,    படம்: ரா.கலைச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism