Published:Updated:

`மகளை குணமாக்க வந்தவருக்கு இப்படியொரு துயரம்!'-அத்துமீறியவர்களை விரட்டிப்பிடித்த ஏர்வாடி மக்கள்

பாலியல் வன்கொடுமை
News
பாலியல் வன்கொடுமை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கூச்சலைக்கேட்டு அப்பகுதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். இதைக்கண்ட அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த பகுதி
சம்பவம் நடந்த பகுதி

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் அல்குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்றாகீம் ஷகீது பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. மனநலம் குன்றியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் இங்கு தங்கியிருந்து வழிபட்டு வந்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால், தமிழகம் மட்டுமல்லாது கேரளம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இங்கு சாதி, மதம், மொழி பாராது வந்து தங்கி வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த தர்ஹாவிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது காட்டுப் பள்ளிவாசல். மனநலம் பாதித்தவர்கள் இங்கு தங்கியிருந்து வழிபாடு செய்வது வழக்கம். கடந்த இரு மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கருணப்பள்ளி என்ற இடத்தைச் சேர்ந்த பதர் என்பவர், மனநலம் பாதித்த 21 வயது மகளைக் குணப்படுத்துவதற்காக ஏர்வாடிக்கு அழைத்து வந்துள்ளார். இங்குள்ள காட்டுப் பள்ளிவாசலில் தங்கியிருந்து ஏர்வாடி தர்ஹா மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறு தர்ஹாக்களில் நடக்கும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று வந்துள்ளார்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

இந்நிலையில், நேற்று இரவு மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகளுடன் காட்டுப் பள்ளிவாசல் வளாகத்தில் உறங்கியுள்ளார் பதர். அப்போது அங்கு வந்த சிலர் மனநலம் பாதித்த அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறியபடி கூச்சலிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கூச்சலைக் கேட்டு அப்பகுதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். இதைக் கண்ட அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அவர்களைத் துரத்திச் சென்றபோது இருவர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். இதையடுத்து பிடிபட்ட இருவரையும் ஏர்வாடி தர்ஹா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மற்றவர்களும் சிக்கினர். பிடிபட்ட அனைவரும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏர்வாடி தர்ஹா காவல் நிலையம்
ஏர்வாடி தர்ஹா காவல் நிலையம்

மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள், தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸார் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும், ஏர்வாடி தர்ஹாவில் உள்ள மனநல மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது, கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதைத் தடுப்பதிலும் போலீஸார் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.