Published:Updated:

`அணில், முயலை வேட்டையாடி பெருமைப்பட்ட இளைஞர்கள்!' -அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கரூர் வனத்துறை

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

தாங்கள் வேட்டையாடிய வனவிலங்குகளோடு போட்டோ எடுத்துக் கொண்ட அந்த இளைஞர்கள், அதைச் சமூக வலைதளங்களில் பெருமையாகப் பதிவிட்டுள்ளனர்.

கரூரை அடுத்துள்ள ஆத்தூர் கிராமத்தில் வனவிலங்குகளான முயல், காடை, அணில் போன்ற உயிரினங்களை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்டு அதைப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 7 இளைஞர்களை வனத்துறையினர் வளைத்துப் பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`தடையை மீறி நோன்புக் கஞ்சி; தாசில்தாருக்கு எதிர்ப்பு' - கரூரில் 54 பேர் மீது பாய்ந்த வழக்கு

கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டும் வெளியே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், கொரோனா குறித்த அச்சம் எதுவுமின்றி நகர்ப்புறங்களில் வெளியே சுற்றுவது காவல்துறையினருக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அந்த இளைஞர்கள்
அந்த இளைஞர்கள்

நகரப் பகுதிகளில் இப்படி என்றால், கிராமப் பகுதிகளில் கூட்டாக அமர்ந்து கறி சமைத்து சாப்பிடுவது, சீட்டாடுவது, நாட்டுச் சாராயம் காய்ச்சுவது, கிரிக்கெட் விளையாடுவது, வனவிலங்குகளை வேட்டையாடி, அதை சமூகவலைதளங்களில் பெருமையாகப் பரப்புவது என்று சிலர் அத்துமீறிச் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்டு, அதை போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளனர் 7 இளைஞர்கள்.

கரூர் மாவட்டம், ஆத்தூர் கிராமம், காந்திநகர்ப் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர், தனது நண்பர்களான மார்ட்டின், தீனதயாளன், சித்தார், மணிகண்டன், வீரக்குமார், அஜித் உள்ளிட்ட ஏழு பேரைச் சேர்த்துக்கொண்டு, வேட்டை நாயுடன் அருகில் உள்ள வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அவர்கள் அனைவரும் அங்கு முயல், காடை, அணில் உள்ளிட்ட வன உயிரினங்களை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். மேலும், தாங்கள் வேட்டையாடிய வனவிலங்குகளோடு போட்டோ எடுத்துக் கொண்ட அந்த இளைஞர்கள், அதைச் சமூக வலைதளங்களில் பெருமையாகப் பதிவிட்டுள்ளனர்.

தங்க வேட்டை, புரட்சி, போலீஸ் அராஜகம்... எப்படி இருக்கிறது #MoneyHeist4?

இதைக் கண்டறிந்த கரூர் மாவட்ட போலீஸார், வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, கரூர் வனத்துறை அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வனத்துறையினர் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு, வன உயிரினங்களை வேட்டையாடி குற்றத்திற்காக, அந்த 7 இளைஞர்கள் மீதும் இந்திய வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 2(1) 9, 39 மற்றும் 40 (1), (2) 51 சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தக் குற்றங்களுக்காக ரூபாய் 25,000 அபராதமும் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இளைஞர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்ட விவகாரம் கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு