Published:Updated:

ப்ளஸ் டூ காதல்: நள்ளிரவில் மாணவியைச் சந்தித்த மாணவன்! - திருமணம் செய்துவைத்த ஊர்மக்கள் 7 பேர் கைது

காதல் செய்தவர்களுக்கு திருமணம் செய்துவைத்தனர்.
News
காதல் செய்தவர்களுக்கு திருமணம் செய்துவைத்தனர்.

மைனர்களான இருவருக்கும் நள்ளிரவு நேரத்தில் திருமணம் செய்துவைத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மகாலிங்கத்தின் தந்தை சம்பவ இடத்துக்கு வந்துவிட, தன் மகன் மணக்கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்த மாணவனும், மாணவியும் காதலித்துவந்திருக்கின்றனர். நள்ளிரவில் மாணவியான காதலியைச் சந்திக்க மாணவன் சென்றதால், அப்பகுதியினர் சிலர் அவர்கள் இருவருக்கும் கட்டாயத் திருமணம் செய்துவைத்தனர். இது தொடர்பாக மாணவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மாணவன் உட்பட ஏழு பேரை போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் (சித்திரிப்பு படம்)
காதல் (சித்திரிப்பு படம்)

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, திருவோணம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் கனிஷ்கா(16). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ப்ளஸ் டூ படிக்கிறார். மகாலிங்கம் என்ற மாணவனும் அதே வகுப்பில் படித்துவருகிறார் (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளன). இருவரும் காதலித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு மகாலிங்கம் தனது நண்பர் ஒருவருடன் பைக்கில் தனது காதலியைச் சந்திக்க அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இருவரும் மறைவாக நின்றபடி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும், இதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பார்த்துவிட்டதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இந்தத் தகவல் கனிஷ்காவின் பெற்றோருக்குச் சொல்லப்பட, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் அந்த மாணவனிடம் யார் என்னவென்று விசாரிக்க, அந்த மாணவன் விவரத்தைக் கூறியதுடன், `இரண்டு பேரும் ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்குறோம். ஒருவருக்கொருவர் காதலிக்குறோம்’ என தெரிவித்துள்ளார்.

காதல்
காதல்

பின்னர் அங்கிருந்த சிலர் உடனடியாக கனிஷ்கா, மகாலிங்கம் இருவருக்கும் அருகில் இருந்த கோயில் ஒன்றில் கட்டாயத் திருமணம் செய்துவைத்தனர். மைனர்களான இருவருக்கும் நள்ளிரவு நேரத்தில் திருமணம் செய்து வைத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மகாலிங்கத்தின் தந்தை சம்பவ இடத்துக்கு வந்துவிட, தன் மகன் மணக்கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் உடனடியாக திருவோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எட்டுப் பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த மாணவன் உட்பட திருமணம் செய்துவைத்த அப்பகுதியை சேர்ந்த கோபு (38), ராஜா (51), அய்யாவு (55), ராமன் (62), நாடிமுத்து (40) உள்ளிட்ட ஏழு பேரைக் கைதுசெய்தனர். கனிஷ்காவைக் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது
கைது

இதில் சுப்பிரமணியன் என்பவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக கட்சியைச் சேர்ந்த உள்ளூர்க்காரர்கள் பெயர்கள் அடிபடுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``மாணவனின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் பள்ளியில் படிக்கும் அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தது தவறு என்பதால் அதற்குக் காரணமான ஏழு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்துவருகிறது” எனத் தெரிவித்தனர்.