Published:Updated:

ரூ. 200 கோடி மதிப்புள்ள சொத்துக்காக 7 பேர் கொலை? - கேரளாவை உலுக்கும் வழக்கு!

அவரது மரணத்தின்போது உறவினர்கள் யாரும் பெரிய அளவில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் அவரது மரணத்திற்கு காரணம் என்னவென்று குறிப்பிடப்படவில்லை.

உமா மந்திரம் வீடு
உமா மந்திரம் வீடு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமன பகுதியில் கூடம் தறவாடு என அழைக்கப்படும் உமா மந்திரம் வீடு அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழைமையான கேரள பாரம்பர்ய நாலு கெட்டு ஓட்டுவீடு இது. வீடு மட்டுமே சுமார் 16 சென்ட் நிலத்தில் அமைந்துள்ளது. இந்த குடும்பத்திற்கு திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீட்டில் கடந்த 17 ஆண்டுகளில் 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இப்போது வீடு பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.

போலீஸில்  புகார் அளித்த பிரசன்னகுமாரி
போலீஸில் புகார் அளித்த பிரசன்னகுமாரி

இங்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜெயமாதவன் நாயர் என்பவர் கடைசியாக மரணம் அடைந்துள்ளார். அவரது மரணத்தின்போது உறவினர்கள் யாரும் பெரிய அளவில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஜெயமாதவன் நாயரின் போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் அவரது மரணத்திற்கு காரணம் என்னவென்று குறிப்பிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த வீட்டில் சொத்துகளை கவனித்துவந்த ரவீந்திரன் நாயர் என்பவருக்கு மாதவன் நாயர் ரூ.30 கோடி மதிப்பிலான தனது சொத்துக்களை எழுதிக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஜெயமாதவன் நாயரின் உறவினரான பிரசன்னகுமாரி என்பவர் காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஜெயமாதவன் நாயர் குடும்பத்தில் நடந்த இரண்டு மரணங்களில் சந்தேகம் இருப்பதாகவும். அவரது சொத்துக்களை கவனித்துவந்த சிலர் சொத்தின் சில பகுதிகளை அபகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை தொடங்கி உள்ளனர்.

கொலை நடந்ததாக கருதப்படும் கூடம் தறவாடு
கொலை நடந்ததாக கருதப்படும் கூடம் தறவாடு

போலீஸில் புகார் அளித்த பிரசன்னகுமாரி கூறுகையில், ``ஜெயமாதவன், ஜெயபிரகாஷ் ஆகியோருடைய மரண சமயத்தில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஊர்மக்கள் அனைவரும் ஒரேமாதிரியான சில சந்தேகத்தை கிளப்பினார்கள். மேலும் இவர்கள் இரண்டுபேரும் இறந்த சமயத்தில் நிறைய பேப்பர்கள் எரிக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது. அவர்கள் இருவரும் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்கள். இது முன்கூட்டி திட்டமிட்ட சம்பவம் என தோன்றுகிறது. போலீஸ் விசாரணையில்தான் முழு விபரங்களும் தெரியவரும்" என்றார்.

அரசியல் கட்சித் தலைவரை சந்தித்த ஜோலி; 2-வது கணவரின் தலையீடு! -கேரள சீரியல் கொலையில் திடீர் திருப்பம்

கேரள மாநிலம் கோழிக்கோடு கூடத்தாய் பகுதியில் 14 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சயனைடு கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தை அடுத்த கரமன பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகம் கிளம்பியுள்ளதால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.