Published:Updated:

பள்ளி மாணவர்களால் 12 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம்! - அஸ்ஸாம் அதிர்ச்சி

சிறார் வதை
சிறார் வதை

பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இப்படியான கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருப்பது அஸ்ஸாம் மாநிலத்தையே பதற்றமடையச் செய்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலம், பிஸ்வநாத் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை ஏழு பேர் கொண்ட கும்பல், கூட்டு சிறார் வதைச் செய்து, கொலையும் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த ஏழு பேருமே பத்தாம் வகுப்புக்கான தேர்வு எழுதி முடித்திருக்கும் மாணவர்கள். அந்த மாணவர்களைத் தற்போது கைது செய்திருக்கும், அம்மாநிலக் காவல்துறை, செய்தியாளர்களுக்கு அளித்த விளக்கத்தில், ``இறந்த சிறுமியிடம் அந்த மாணவர்கள் நண்பர்களாகப் பழகியிருந்திருக்கிறார்கள்.

கடந்த வெள்ளியன்று பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் ஒன்று முடிந்த நிலையில் தங்கள் வீட்டில் பார்ட்டி இருப்பதாகக் கூறி அந்தச் சிறுமியை ஏழு மாணவர்களில் ஒருவர் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். அழைத்து வந்த இடத்தில் இரவில் அவரை சிறார் வதை செய்திருக்கிறார்கள்.

பள்ளி மாணவர்களால் 12 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம்! - அஸ்ஸாம் அதிர்ச்சி

மறுநாள் காலை அந்த வீட்டுக்கு அருகிலேயே உள்ள காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். இதற்கிடையே குற்றவாளிகள் பிடிபட்டனர்” என்று கூறியுள்ளது.

பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இப்படியான கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருப்பது அஸ்ஸாம் மாநிலத்தையே பதற்றமடையச் செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு