Published:Updated:

மும்பை: 7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி 9 ஆண்டுகளுக்குப் பின் வீட்டுக்கு அருகிலேயே மீட்பு- என்ன நடந்தது?

கடத்தல் ( சித்திரிப்புப் படம் )

மும்பையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மும்பை: 7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி 9 ஆண்டுகளுக்குப் பின் வீட்டுக்கு அருகிலேயே மீட்பு- என்ன நடந்தது?

மும்பையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Published:Updated:
கடத்தல் ( சித்திரிப்புப் படம் )

மும்பை அந்தேரியைச் சேர்ந்த பூஜா என்ற சிறுமி கடந்த 2013-ம் ஆண்டு, ஜனவரி 22-ம் தேதி பள்ளிக்குச் சென்றபோது காணாமல்போனார். அப்போது அவருக்கு 7 வயது. அவரின் பெற்றோர் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தனர். போலீஸாரும் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். பூஜாவின் பெற்றோர் கடந்த ஆண்டுகளில் அவரைக் கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் திடீரென பூஜாவின் பெற்றோர் வசித்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் ரபீக் என்பவருக்கு மர்ம நம்பர் ஒன்றிலிருந்து பெண் ஒருவர் போன் செய்து பூஜா குறித்துப் பேசினார்.

பூஜாவைக் காணவில்லை என்று மும்பையில் அனைத்து இடத்திலும் போஸ்டர்கள் ஒட்டியிருந்ததால் அடிக்கடி இது போன்ற போன் அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. இதனால் அந்த போன் அழைப்பை ரபீக் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து அந்தப் பெண் வீடியோ காலில் பேசினார். அதோடு தனது வீட்டில் வேலை செய்யும் பூஜாவையும் வீடியோ காலில் காண்பித்தார். உடனே அதை பூஜா என்று அடையாளம் கண்டுகொண்ட ரபீக் இது குறித்து பூஜாவின் தாயார் மற்றும் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

போலீஸார் விரைந்து வந்து அந்தேரி ஜுகுவில் உள்ள வீட்டில் வேலை செய்துவந்த பூஜாவை மீட்டனர். பூஜாவின் தாயாரும் உடனே வரவழைக்கப்பட்டார். போலீஸ் நிலையத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது உடனே அடையாளம் கண்டுகொண்டு கட்டிப்பிடித்து அழுதனர். இதையடுத்து இருவரையும் சேர்த்துவைத்தனர். பூஜாவிடம் விசாரித்தபோது பல உண்மைகள் தெரியவந்தன. பூஜா உண்மையில் அவரின் தாயார் வசித்த வீட்டுக்கு சில வீடுகள் தள்ளித்தான் வசித்துவந்திருக்கிறார்.

பூஜா தனது தாயாருடன்
பூஜா தனது தாயாருடன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது பூஜா 2013-ம் ஆண்டு பள்ளிக்கு வெளியில் தனியாக நின்றபோது ஜோசப் டிசோசா என்பவர் கடத்திச் சென்றிருக்கிறார். பூஜாவை மும்பையில் வைத்திருந்தால் சிக்கல் ஏற்படும் என்று கருதி அவரின் பெயரை மாற்றி கர்நாடகா மாநிலத்தில், போர்டிங் பள்ளியில் சேர்த்தார். சில ஆண்டுகள் கழித்து பூஜாவை யாருக்கும் தெரியாது என்று கருதி கர்நாடகாவிலிருந்து மும்பைக்கு அழைத்துவந்தனர். மும்பைக்கு வந்த பிறகு ஜோசப் தனது வீட்டை விலேபார்லேயிலிருந்து அந்தேரி ஹில்பர்ட் ஹில் பகுதிக்கு மாற்றினார். அங்குதான் பூஜாவின் பெற்றோரும் வசித்துவந்தனர். பூஜாவின் பெற்றோர் வசிக்கும் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் ஜோசப் தங்க ஆரம்பித்தார். இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸார் கூறுகையில், ``ஜோசப் - சோனி தம்பதிக்கு ஆரம்பத்தில் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனால் ஜோசப் பள்ளிக்கு வெளியில் நின்ற சிறுமி பூஜா 7 வயதாக இருந்தபோது கடத்திச் சென்றார். யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கர்நாடகா மாநிலம், ரெய்ச்சூருக்கு அனுப்பிப் படிக்கவைத்தார். ஆனால் ஜோசப்புக்கு 2016-ம் ஆண்டு குழந்தை பிறந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் கர்நாடகாவில் படித்துக்கொண்டிருந்த பூஜா வளர்ந்துவிட்டதால் யாருக்கும் தெரியாது என்று நினைத்து மும்பைக்கு வரவழைத்தனர். அதோடு இரண்டு குழந்தைகளை ஜோசப் தம்பதியால் சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து பூஜாவை அந்தேரியிலுள்ள ஒரு வீட்டில் குழந்தையை கவனித்துக்கொள்ள வேலைக்கு அனுப்பிவைத்தனர். சொந்தமாகக் குழந்தை பிறந்ததால், பூஜாவை சித்ரவதை செய்ய ஆரம்பித்தனர். ஜோசப் மனைவி சோனி அடிக்கடி பூஜாவை அடிக்க ஆரம்பித்தார். அதோடு ஜோசப் குடித்துவிட்டு வந்து அவளைத் தெருவிலிருந்து தூக்கி வந்ததாக பூஜாவிடம் தெரிவித்தார். அதன் பிறகுதான் பூஜாவுக்கு ஜோசப் தம்பதி தனது பெற்றோர் இல்லை என்று தெரியவந்தது.

கடத்தல்
கடத்தல்
சித்திரிப்புப் படம்

உடனே இங்கிருந்து எப்படித் தப்பிச் செல்வது என்று தெரியாமல் இருந்தார். தான் வேலை செய்த வீட்டில் தன்னைப் பற்றிய விவரத்தை தெரிவித்தார். உடனே அந்த வீட்டிலிருந்த பெண் பூஜா கொடுத்த தகவலின் அடிப்படையில் காணாமல்போனவர்கள் பட்டியலில் பூஜா என்ற பெயரில் ஏதாவது புகார் பதிவாகி இருக்கிறதா என்று பார்த்தார். புகார் பதிவாகி இருந்ததோடு, பூஜாவைக் காணவில்லை என்று பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களும் ஆன்லைனில் கிடைத்தன. அதிலிருந்த நான்கு எண்களில் ஒரு எண் மட்டும் செயல்பாட்டில் இருந்தது. அந்த எண் மூலம்தான் ரபீக்கைத் தொடர்புகொண்டு அந்தப் பெண் தகவல் கொடுத்தார். ரபீக்தான் எங்களுக்குத் தகவல் கொடுத்தார். ஜோசப் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.